July 7, 2026
  • July 7, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

ஜெயம் ரவியை சுற்றியே என் பயணம் – அகிலன் இயக்குனர் கல்யாண்

by on March 4, 2023 0

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், இயக்குநர் N.கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் “பூலோகம்” படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, இக்கூட்டணியில் மீண்டும் ஒரு அசத்தலான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “அகிலன்”. இப்படத்தை Screen Scene Media Entertainment Pvt Ltd நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. மார்ச் 10 அன்று இப்படம் உலகமெங்கும் வெளியாகிறது.  விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றது.  தயாரிப்பாளர் சுந்தர் பேசியதாவது… “பத்திரிகை, ஊடக நண்பர்கள் […]

Read More

அயோத்தி திரைப்பட விமர்சனம்

by on March 3, 2023 0

அயோத்தி என்கிற தலைப்பைக் கேட்டதும் “ஏதோ பிரச்சனையைக் கிளப்புறாங்கப்பா..!” என்றுதான் தோன்றியது. ஆனால் படம் பார்த்து முடியும்போது கண்களில் துளிர்த்துக் கிளம்பிய கண்ணீர் அப்படியான எண்ணத்தைத் துடைத்தே இறங்கியது. அயோத்தியில் ஆரம்பிக்கிற கதை. அங்கே மத நம்பிக்கை மற்றும் ஆண் ஆதிக்கத்தில் ஊறிப்போன பல்ராம் (யஷ்பால் சர்மா) தன் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். அன்பே உருவான அவரது மனைவி ‘இம்’மென்றால் அடி, ஏனென்றால் ‘இடி’ என்றே ஷர்மாவுடன் வாழ்ந்து வருகிறார். கல்லூரிக்குப் போகக்கூடாது என்கிற அவரது கட்டளையை […]

Read More

சூப்பர் ஸ்டார்களை இயக்குநர்கள்தான் உருவாக்குகிறார்கள்- ஐஸ்வர்யா ராஜேஷ்

by on March 3, 2023 0

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘சொப்பன சுந்தரி’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு நடுத்தர சினிமாவையும் ரசிகர்கள் காப்பாற்ற வேண்டும் – இயக்குநர் மோகன் ராஜா வேண்டுகோள் சூப்பர் ஸ்டார்களை இயக்குநர்கள் தான் உருவாக்குகிறார்கள்- ஐஸ்வர்யா ராஜேஷ். ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் , ஹியூ பாக்ஸ் ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பாலாஜி சுப்பு மற்றும் விவேக் ரவிச்சந்திரன் ஆகியோர் ,அஹிம்சா என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கும் ‘சொப்பன சுந்தரி’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை […]

Read More

மேனுவல் கியருடன் மின்சார மோட்டார் சைக்கிள் AERA அறிமுகம்

by on March 3, 2023 0

“AERA” என்று பெயரிடப்பட்டுள்ள மேனுவல் கியருடன் கூடிய தன் முதல் மின்சார மோட்டார்சைக்கிள் மாடல்களை Matter அறிவித்து, மிகக் குறைந்த விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்கிறது. Matter AERA நான்குவித மாடல்களில் கிடைக்கும். இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான முன்பதிவு விலை என்ற அடிப்படையில் AERAவுக்கான முன்பதிவு விலை ரூ. 1.4 இலட்சம் முதல் ரூ.1.54 இலட்சம் வரை இருக்கும், மோட்டார்சைக்கிள் பிரிவில் சமவிலை நிலையை அடைய ஒரு நாடு ஒரே முன்பதிவு விலை என்னும் கொள்கை […]

Read More

அரியவன் திரைப்பட விமர்சனம்

by on March 3, 2023 0

“மாதர்தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்..!” இதுதான் படத்தின் மையக்கரு. இதை நாம் நன்கறிந்த பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை ஒத்த ஒரு சம்பவத்துடன் சம்ஹாரமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் மித்ரன்.ஆர்.ஜவஹர். கடத்தி வரப்பட்ட ஒரு பெண்ணை சிலர் பாலியல் பலாத்காரம் செய்ய, அதை ஒருவன் வீடியோ எடுப்பதிலிருந்து படம் தொடங்குகிறது. அதற்குப் பின்னால் பெண்களை இப்படி வயப்படுத்தும் ஒரு கும்பலே இயங்கி வருவதும் காட்சிப்படுத்தப்படுகிறது. இதற்கு நேர் எதிர் மறையாக கபடி விளையாட்டு வீரராக நாயகன் இஷான் அறிமுகம் […]

Read More

‘இன் கார்’ பட அனுபவத்தில் இருந்து மீண்டு வர முடியவில்லை – ரித்திகா சிங்

by on February 27, 2023 0

Inbox Pictures சார்பில் அஞ்சும் குரேஷி, சாஜித் குரேஷி தயாரிப்பில், இயக்குநர் ஹர்ஷ் வர்தன் இயக்கத்தில், நடிகை ரித்திகா சிங் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் “இன் கார்”.  கடத்தப்பட்டு வன்புணர்வுக்குள்ளாகும் பெண்ணின் வலியை, அவளது பார்வையில் அந்த கடத்தல் சம்பவத்தின் வழியாகவே சொல்லும் படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தி மொழியில் உருவாகியுள்ள இப்படம்  தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் வெளியாகிறது. தமிழில் Studio Green சார்பில் KE ஞானவேல் ராஜா இப்படத்தை வழங்குகிறார். மார்ச் […]

Read More

தக்ஸ் திரைப்பட விமர்சனம்

by on February 27, 2023 0

சிறைப்பட்ட கைதிகள் அங்கிருந்து தப்பிக்கும் கதைகள் ஹாலிவுட்டில் நிறைய வந்திருக்கின்றன. தமிழிலும் சில படங்கள் இப்படி வந்திருக்கின்றன. அப்படி மலையாளத்தில ஐந்து வருடங்களுக்கு முன் வெளியான படத்தின் தழுவலான கதை அமைப்பைக் கொண்டு இந்த படத்தை இயக்கியிருக்கிறார் நடன இயக்குனராக நாம் அறிந்த பிருந்தா. இந்தப் படத்தில் சிறப்பம்சமே பிரபல விநியோகஸ்ரும் தயாரிப்பாளருமான ஷிபு தமீன்ஸ் மகனான ஹிருது ஹாரூன் இதில் கதாநாயகனாக அறிமுகமாகி இருப்பதுதான். எனவே அவரது வயதுக்கும் ஆற்றலுக்கும் தோதாக இப்படி ஒரு கதையை […]

Read More

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் திரைப்பட விமர்சனம்

by on February 26, 2023 0

சினிமா சொல்லும் அறிவியலில் ரோபோ காதலித்தாயிற்று. ஆண்ட்ராய்டு ரோபோ ஏவிய வேலையை செய்வதற்கு ஆயிற்று. இந்தப் படத்தில் இனி அடுத்து உலகை ஆளப்போகும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்சை வைத்து ஒரு கற்பனைக் கதையைப் படைத்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் ஷா பி.என். ஆனால் அதை சீரியஸாகவெல்லாம் கொண்டு போகாமல் காமெடியாக சொல்ல வேண்டும் என்று அவர் முடிவு எடுத்து இருப்பதைப் பாராட்டியே ஆக வேண்டும்.  அதற்குத் தோதாக அகில உலக சூப்பர் ஸ்டார் ஷிவாவும் கிடைக்க அதகளம் ஆரம்பமாகிறது. ஆர்டிபிஷியல் […]

Read More

பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கும் திட்டம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

by on February 26, 2023 0

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் இறுதிகட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு சம்பத் நகரில் பிரசாரம் செய்து வருகிறார். அப்போது அவர் பேசியதிலிருந்து : திராவிட இயக்கத்தின் சொல்லின் செல்வராக திகழ்ந்தவர் ஈ.வி.கே. சம்பத். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வந்ததற்கான சூழல் உங்களுக்கு நன்றாக தெரியும். இங்கு ஈவிகேஎஸ். இளங்கோவனை அதிக […]

Read More

2கே கிட்ஸ் படமாக உருவாகும் சிக்லெட்ஸ் பட அதிர்ச்சி டிரெயிலர்

by on February 24, 2023 0

தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் சாத்விக் வர்மா, கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் ‘சிக்லெட்ஸ்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘திறந்திடு சிசேம்’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் எம். முத்து இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘சிக்லெட்ஸ்’. எஸ். எஸ். பி பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஏ. ஸ்ரீனிவாசன் குரு தயாரித்திருக்கும் இந்த படத்தில் தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகரான சாத்விக் வர்மா மற்றும் […]

Read More