July 7, 2026
  • July 7, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

மீண்டும் வரும் லக்ஷ்மி மேனன் – சப்தம் படத்தில் ஆதியின் ஜோடி

by on February 24, 2023 0

தமிழ் திரையுலகில் அனைவரும் திரும்பி பார்க்கும் வெற்றியை ஈரம் படம் மூலம் தந்த இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் ஆதி இணையும் சப்தம் படத்தில் நாயகியாக நடிகை லக்‌ஷ்மி மேனன் இணைந்துள்ளார். Aalpha Frames இயக்குநர் அறிவழகன் மற்றும் 7G Films சிவா இணைந்து தயாரிக்க, இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் ஆதி நடித்து வரும் திரைப்படம் “சப்தம்”. தமிழ் சினிமாவில் “ஈரம்” படம் மூலம் திரையுலகை திரும்பிப்பார்க்க வைத்த இந்த வெற்றிக்கூட்டணி இப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. […]

Read More

அப்போலோ மருத்துவமனையில் தோள்பட்டை நோய்க்கு ஒரே தள சிகிச்சை

by on February 24, 2023 0

அப்போலோ மருத்துவமனை இறுக்கமான தோள்பட்டை நோய்க்கான சிகிச்சையில் சிறப்பு கவனம் செலுத்துகிறது: ஒரே தளத்தில் சிறப்பு சிகிச்சை அளிப்பதற்கான மையத்தைத் தொடங்கியுள்ளது அப்போலோ… 70 சதவீதம் பேர் தங்களது வாழ்நாளில் ஒரு முறையாவது தோள்பட்டை வலியை உணர்கிறார்கள்… சென்னை, 24 பிப்ரவரி 2023: விளையாட்டு வீரர்கள், நீரிழிவு நோயாளிகள் மற்றும் நடுத்தர வயதுடையவர்களுக்கான சிகிச்சையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, இறுக்கமான அல்லது உறைந்த தோள்பட்டை எனப்படும் ஃப்ரோஸென் ஷோல்டர் (Frozen shoulder) பாதிப்பு உள்ளவர்களுக்கு மேம்பட்ட சிகிச்சைகளை அப்போலோ […]

Read More

வெள்ளிமலை திரைப்பட விமர்சனம்

by on February 24, 2023 0

வழக்கமான எந்த சினிமா இலக்கணங்களுக்குள்ளும் இல்லாமல் ஒரு சினிமா எடுத்துக்காட்டி விட வேண்டும் என்கிற ஆவலில் இந்த படத்தை இயக்கியிருக்கிறார் ‘ஓம் விஜய்’ என்பது புரிகிறது. எந்தப் பெரிய நட்சத்திரத்தின் பின்னாலும் போகவில்லை அவர். மாறாக படங்களில் சிறிய குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் சூப்பர் குட் சுப்பிரமணியை இந்தப் படத்தைத் தாங்கிச் செல்லும் பிரதான பாத்திரமாகவே படைத்திருக்கிறார். கதாநாயகன் என்று ஒரு பாத்திரம் இல்லாமல் கதையே நாயகனாகி படத்தைத் தாங்கி செல்கிறது. முழுதும் சூப்பர்ஹிட் சுப்பிரமணியின் […]

Read More

கடைசி வரை நாயகி மேகா ஆகாஷை கண்ணில் காட்டவில்லை – வருத்தப்பட்ட ஷிவா

by on February 23, 2023 0

“கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன், நகைச்சுவை நடிகர் சந்திரபாபு போன்ற சிந்திக்க வைக்கும் நகைச்சுவை நடிகர்கள் பேசிய வசனங்களை போல், எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்’ திரைப்படம் உருவாகி இருக்கிறது’ என இந்த திரைப்படத்தை தமிழக முழுவதும் வெளியிடும் தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான டாக்டர் பிரபு திலக் தெரிவித்திருக்கிறார். லார்க் ஸ்டுடியோஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிப்பில், அகில உலக […]

Read More

ஈஷான் கண்கள் உயிரோட்டமாக உள்ளன – கே.பாக்யராஜ்

by on February 23, 2023 0

எம்.ஜி.பி. மாஸ் மீடியா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் நவீன் தயாரிப்பில், இயக்குநர் மித்ரன் R ஜவஹர் இயக்கத்தில், அறிமுக நாயகன் ஈஷான் மற்றும் அறிமுக நாயகி ப்ரணாலி நடிப்பில், கமர்ஷியல் திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “அரியவன்”. மார்ச் 3 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் கலந்து கொண்டு, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.  இவ்விழாவினில்… கதாசிரியர் மாரிச்செல்வன்.சு பேசியதாவது…  இப்படத்தில் […]

Read More

நடிகவேள் எம்.ஆர்.ராதா பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை

by on February 21, 2023 0

பலேபாண்டியா படத்தில் “மாமா மாப்ளே” பாட்டில் முதல்வரியை இப்படித்தான் தொடங்குவார் சிவாஜி, “நீயே என்றும் உனக்கு நிகரானவன்…” இது காட்சிக்கான பாட்டு மட்டுமல்ல. நடிகர் திலகம் சிவாஜி, நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நடிப்புக்குச் சொன்ன பாராட்டுப் பத்திரமாகும். நடிகவேள் ராதா காலமானபிறகு நடந்த ஒரு அஞ்சலிக் கூட்டத்தில் சிவாஜி சொன்னார், ”ஒரு ஃப்ரேமில் என் முகமும் அண்ணன் ராதாவின் முகமும் அருகருகே வந்தால், நான் ரொம்ப ஜாக்கிரதையாக இருப்பேன். ஒரு நொடியில் சின்ன அசைவில் நம்மை காலி செய்துவிடுவார்.” […]

Read More

தோனி தயாரிக்கும் எல்.ஜி.எம் விரைவாக தயாராகிறது

by on February 21, 2023 0

தமிழ் திரைப்படமான ‘எல்.ஜி. எம்’மின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி வேகமாக நடைபெற்று வருவதாக தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனி மற்றும் அவரது மனைவி திருமதி சாக்ஷி தோனியின் தயாரிப்பு நிறுவனமான டோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாராகும் ‘எல். ஜி. எம்’ (லெட்ஸ் கெட் மேரீட்) எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டதை விட வேகமாக நடைபெற்று வருகிறது. அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகும் இந்த திரைப்படத்தில் […]

Read More

பகாசூரன் திரைப்பட விமர்சனம்

by on February 20, 2023 0

தன் முந்தைய இரண்டு படங்களின் மூலம் பரபரப்பைக் கிளம்பிய மோகன் ஜி இயக்கியிருக்கும் படம் இது என்பதாலும், செல்வராகவன் கதை நாயகனாக நடித்திருக்கும் காரணத்தாலும் இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளானது. ஆனால், இன உணர்வைத் தூக்கிப் பிடிக்கும் வழக்கமான அவரது பாதையில் இருந்து விலகி பொதுவான சமுதாயக் கண்ணோட்டத்தில் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் அவர். ஆரம்பக் காட்சியே முழு வீச்சில் தொடங்குகிறது. ஒரு இளம் பெண்ணை நடுத்தர வயதுள்ள மனிதர் காட்டுக்குள் கொண்டு வந்து பாலியல் […]

Read More

தீர்க்கதரிசி படத்தின் ஹீரோ ஸ்கிரிப்ட்தான் – சத்யராஜ்

by on February 20, 2023 0

Sri Saravana Films சார்பில் B.சதீஷ் குமார் தயாரிப்பில், PG மோகன் – LR சுந்தரபாண்டி இயக்கத்தில், சத்யராஜ், அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த் நடிப்பில், உருவாகியுள்ள கமர்ஷியல் க்ரைம் திரில்லர் திரைப்படம் ‘தீர்க்கதரிசி’. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.  இவ்விழாவினில்  இயக்குநர் ஆர் கே செல்வமணி பேசியதாவது.., இந்த படத்தின் இயக்குநர்கள் தொழில்நுட்பத்தில் சிறந்த வல்லுநர்கள். இந்த […]

Read More

ஹிருதுவின் கண்கள் ரஜினி போல் சக்தி சக்தி வாய்ந்தவை – தக்ஸ் பற்றி பிருந்தா

by on February 20, 2023 0

HR Pictures சார்பில் ரியா ஷிபு Jio Studios உடன் இணைந்து வழங்கும், நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில்,  க்ரைம்-ஆக்சன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கிறது “தக்ஸ்”. ஹிருது ஹாரூன், பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனிஷ்காந்த், அனஸ்வர ராஜன் மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ள இப்படம் பிப்ரவரி 24, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  இதனையொட்டி படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில்.. இயக்குநர் பிருந்தா பேசுகையில், “ஒரு […]

Read More