September 20, 2026
  • September 20, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

மண்டாடிக்கு முதன் முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடமிருந்து வாழ்த்து வந்தது..! – சூரி

by on September 18, 2026 0

‘மண்டாடி’ திரைப்படத்தின் வெற்றி விழா! அண்மையில் வெளியாகி விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் வெற்றி பெற்றுள்ள படம் ‘மண்டாடி ‘. இப்படத்தில் சூரி, சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திர விஜய், பால சரவணன், மிதுன் மற்றும் ஸ்டன் சிவா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியிருந்தார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்திருந்தார். எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்திருந்தார். படத்தொகுப்புக்கு பிரதீப் இ. ராகவ், கலை இயக்கம் : டி.ஆர்.கே. கிரண், ஆக்‌ஷன் காட்சிகளுக்கு […]

Read More

தமிழ் திரைப்படங்கள் எனக்கு ஒரு பைபிள் மாதிரி..! – நானி

by on September 18, 2026 0

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்- The Paradise ‘படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு..! ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில் தயாராகி எதிர்வரும் 24 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தின் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தில் நானி, கயாடு லோஹர், ராகவ் ஜூயால், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு, ஈஸ்வரி ராவ், சம்பூர்ணேஷ் பாபு, தணிகல […]

Read More

முதல் பாதி காதல்… அடுத்த பாதி அதிரடி..! – ‘அன்பில் அவன்’ டிரெய்லர் வெளியானது

by on September 18, 2026 0

அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய காதல் திரைப்படமான ‘அன்பில் அவன்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது. முதல் மற்றும் இரண்டாவது சிங்கிள் பாடல்கள் வெளியான போதே, முழுமையான காதல் கதையாக இப்படம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவான நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் அந்த எதிர்பார்ப்பை முற்றிலும் வேறொரு கோணத்திற்கு கொண்டு சென்றுள்ளது. காதலை மையமாகக் கொண்டு தொடங்கும் டிரெய்லர், வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையைத் தொடங்க முயற்சிக்கும் காதலர்களின் […]

Read More

பாரிஸ் கஃபே திரைப்பட விமர்சனம்

by on September 17, 2026 0

தமிழ்நாட்டில் நடந்த ஒரு ஆணவக் கொலைக்கு சந்தர்ப்ப வசத்தால் உதவிய ஒரு மருத்துவரின் மனசாட்சியை பாரிஸ் நகரில் உள்ள ஒரு காபி ஷாப் உலுக்கியது என்றால் நம்ப முடிகிறதா?  அதை நம்ப வைக்கும் முகமாக ஒரு திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் இயக்குநர்

Read More

இந்தியாவின் பான் இந்திய லேடி சூப்பர் ஸ்டார் எம் எஸ் அம்மாதான்..! – கமல்

by on September 17, 2026 0

‘பாரத ரத்னா’ எம் எஸ் சுப்புலட்சுமியின் சுய சரிதையான ‘எம் எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்- M.S. : A LEGACY ON SCREEN’ திரைப்படத்தின் தொடக்க விழா..! தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த்- ராக்லைன் வெங்கடேஷ்- பென்னி வாசு – கௌதம் தின்னனூரி- ராஷ்மிகா மந்தானா- அனிரூத் – கூட்டணியில் உருவாகும் ‘எம் எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்- M.S. : A LEGACY ON SCREEN ‘ படத்தின் தொடக்க […]

Read More

தி டார்க் ஹெவன் திரைப்பட விமர்சனம்

by on September 16, 2026 0

இந்தத் தலைப்பு அறிமுகமான நாளிலிருந்தே நிறைய எதிர்பார்ப்புகளைக் கிளறி விட்டது. அப்படி இயக்குனர் பாலாஜி கிளறிய எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்பட்டனவா என்று பார்ப்போம். ஹாரர் வகை படம் போல் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து கதை தொடங்குகிறது. அப்போது வாழ்ந்த தீர்க்கதரிசியான இளம் பெண் மீது ஊர்மக்கள் வைத்த மரியாதையைக் குறைக்கும் நோக்கில் அவதூறு பரப்பி அவள் உயிருக்கே உலை வைத்த தசரதன் என்கிற தீய எண்ணம் கொண்டவன் அதன் பிறகு கொடூரமாக இறந்து போகிறான். […]

Read More

என்ன விலை திரைப்பட விமர்சனம்

by on September 16, 2026 0

இந்த உலகில் எல்லாவற்றுக்கும் ஒரு விலை உண்டு என்பார்கள். ஆனால், செய்யாத குற்றத்துக்கு பழி சுமத்தப்பட்டு உலகின் பார்வையில் குற்றவாளியாக செய்திகளில் அவமானப்பட்ட ஒருவர் பின்னர் நிரபராதி என்று தெரிந்தால் அந்த உண்மையை யாரும் பிரபலப் படுத்துவதில்லை. முன்னர் சாட்டப்பட்ட குற்றத்தைச் சுமந்தபடியேதான் அவர் வாழ நேர்கிறது. இழந்த அவரது மானத்துக்கு என்ன விலை என்ற நியாயமான கேள்வியை இந்தப் படத்தில் நீதித் துறையின் முன்னால் வைக்கிறார் இயக்குநர் சஞ்சீவ் பழூர். அதிலும் இது போன்ற அவமானங்களால்  […]

Read More

முதல்வர் விஜய் ஸ்டைலில் விநாயகர் சிலைகள்..! – நயினார் நாகேந்திரன் கண்டனம்

by on September 15, 2026 0

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானின் சிலையைத் தமிழக வெற்றித் கழகத் தலைவர் விஜய்யின் தோற்றத்தில் வடிவமைத்துக் காட்சிப்படுத்தியதற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கோடிக்கணக்கான மக்களின் பக்திக்கும் வழிபாட்டுக்கும் உரிய இறை உருவத்தைத் தனிநபர் துதிபாடுவதற்காகவும், அரசியல் விளம்பரத்திற்காகவும் இவ்வாறு உருமாற்றுவது ஆன்மிக உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் செயல் எனக் குறிப்பிட்டுள்ள அவர், புனிதமான விழாவை அரசியல் சுயலாப மேடையாக்கி இறை வழிபாட்டைத் தேர்தல் […]

Read More

இசைஞானி இசையில் ஆர்.எஸ்.குளோபல் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ‘இராவணன் சோலையில் சிவன் மலை..!’

by on September 14, 2026 0

இசைஞானி இளையராஜா இசையில் இப்படத்தின் பூஜை இன்று (14/09/2026) இளையராஜாவின் இசைக்கோவிலில் இனிதே நடைபெற்றது. திரு இசைஞானி இளையராஜா, திரு கங்கை அமரன், திரு இயக்குனர் ஞான ராஜசேகர் இயக்குனர் பாணர், தயாரிப்பாளர் எ ஸ்.கே ஸ்ரீதர் குத்து விளக்கேற்ற விழா இனிதே துவங்கியது.. தென்னகத்தில் பல மலைப்பகுதிகளில் படமாகும் இப்படத்தில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த பல நடிகர்கள், நடிகைகள் நடிக்கின்றனர். உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட இந்த படம், இயற்கை […]

Read More

“ராசா நீயுமா லேட்டு…” என்றார் சிவாஜி அண்ணா..! – மனம் திறந்த இளையராஜா

by on September 13, 2026 0

டி.ஜி தியாகராஜன் வழங்க, சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் டி.டி.பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’லெனின் பாண்டியன்’. தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா, ஸ்ரித்தா ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம், மணல் கொள்ளையை மையமாக வைத்து நம் மண்ணின் வாழ்வியலையும் எளிய மக்களின் உரிமைகளையும் பேசும் அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ளது. இப்படம் வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் […]

Read More