May 1, 2024
  • May 1, 2024
Breaking News
June 17, 2023

தி ஃபிளாஷ் திரைப்பட விமர்சனம்

By 0 318 Views

நடிகர்கள் – Ezra Miller, Sasha Calle, Michael Shannon, Ron Livingston Maribel Verdú, Kiersey Clemons, Antje Traue and Michael Keaton 

திரைக்கதை – John Francis Daley & Jonathan Goldstein based on characters from DC

ஒளிப்பதிவு -Henry Braham

உடை வடிவமைப்பு – Alexandra Bryne

இசை – Benjamin Wallfisch

இதில் டிசி சூப்பர் ஹீரோவான பிளாஷ், நாயகனாக முதல் முதலாகத் தனித்த ஹீரோ ஆகிறார்.

பேரி ஆலன், தனது சூப்பர் பவர்களைப் பயன்படுத்திக் காலத்தின் பின்னால் சென்று சில நிகழ்வுகளை ஒழுங்கப்படுத்த நினைக்கும் பொழுது, உலகங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்கின்றன.

தனது குடும்பத்தைக் காப்பாற்றும் முயற்சியில் ஏற்படும் பேரி ஆலனின் கவனக்குறைவால், எதிர்காலம் மாற்றியமைக்கப்பட்டு, காலத்திற்குப் பிந்தைய உலகிலேயே மாட்டிக் கொள்கிறான்.

அங்கு அச்சுறுத்தும் நாசகர அழித்தலில் ஈடுபட்ட ஜெனரல் Zod திரும்பி விடுகிறான். பூமியைக் காப்பாற்றும் சூப்பர் ஹீரோக்கள் யாருமில்லாததால், தனது ஓய்வுக்காலத்தில் இருக்கும் பேட் மேனின் (Bat Man) உதவியை நாடி, சிறைப்பட்டிருக்கும் க்ரிப்டோனியனை மீட்கிறான்.

ஆனால், பேரி ஆலன் மீட்டதோ அவன் எதிர்பார்த்த நபர் இல்லை.

தான் சிக்கிய காலத்தில் இருக்கும் பூமியைக் காப்பாற்றவும், எதிர்காலத்திற்கு மீண்டும் செல்லவும், பேரி ஆலனுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு, தன் உயிரைப் பணயம் வைத்து ஓடுவதே!

ஆனால் பேரியின் இந்தத் தியாகம், பிரபஞ்சத்தைப் பழைய நிலைக்கு மீட்டெடுக்கப் போதுமானதாக இருக்குமா? என்பதே கதை.

இறுதியில் உலகங்களை காப்பாற்ற தன் அன்பான தாயை பேரி ஆலன் மீட்டெடுக்க முடியாமல் போவது சோகம். அந்த அம்மா சென்டிமென்ட் அற்புதமாக படமாக்கப் பட்டிருக்கிறது.

பேரி ஆலனாக நடித்திருக்கும் எஸ்ரா மில்லருக்கு இதில் இரட்டை வேடம். சூப்பர் பவர் கிடைத்தவுடன் அந்த இன்னொருவர் செய்யும் அதகளங்கள் அற்புதம்.

கடைசியில் கடந்த காலத்துக்கு நிகழ்கால இளைஞனாக தாயின் முன்னால் போய் நின்று அவளைக் காப்பாற்ற இயலாத நிலையில், தன் தாயைத் தேடி வந்ததாக பொய் சொல்லி அவளிடம் முத்தம் பெற்று செல்லும் இடம் உணர்ச்சிமிக்கது.

பேட்மேன்கள் சூப்பர் மேன்கள் வரும் இடங்களில் அரங்கம் அதிர்கிறது.

தி ஃபிளாஷ் – விபரீத ஓட்டம்..!