July 7, 2026
  • July 7, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

ரஜினி பாடல்களைப் பாடி நடிகைகளை மகிழ்வித்த நட்டி – வெப் பட சுவாரஸ்யம்

by on July 27, 2023 0

*மிஸ்கின் போல திறமையானவர் ; ‘வெப்’ இயக்குனர் ஹாரூனுக்கு கார்த்திக் ராஜா பாராட்டு *ஜெயிலர் திரைப்படம் வரும் மாதத்தில் எங்களது படமும் வெளியாவதில் மகிழ்ச்சி ; ‘வெப்’ இயக்குனர் ஹாரூண் வேலன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.எம் முனிவேலன் தயாரித்துள்ள படம் வெப் (WEB). அறிமுக இயக்குனர் ஹாரூண் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சாஷ்வி பாலா, சுபப்பிரியா, நடிகர் முரளி ராதாகிருஷ்ணன், அனன்யா […]

Read More

தியேட்டர் மற்றும் ஓடிடி யில் ஒரே நாளில் வெளியாகும் யோக்கியன்

by on July 27, 2023 0

ஜெய் ஆகாஷ் நடிக்கும் யோக்கியன் திரைப்படம் ஜூலை 28ல் முதல் முறையாக தியேட்டர் மற்றும் ஓ.டி.டி.யில் ஒரே நேரத்தில் ரிலீஸ்… மூன் ஸ்டார் பிக்சர்ஸ் சார்பில் வி மாதேஷ் அதிக பொருட் செலவில் தயாரிக்கும் படம் யோக்கியன். இதில் ஜெய் ஆகாஷ் தந்தை, மகன் என் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். ஹீரோயின்களாக கவிதா, ஆர்த்தி சுரேஷ், குஷி மற்றும் , சாம்ஸ் உள்ளிட்ட பலர்  நடித்திருக்கின்றனர். பால் பாண்டி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.  ஜூபின்  இசை அமைக்கிறார். சாய் […]

Read More

டைநோசார்ஸ் திரைப்பட விமர்சனம்

by on July 26, 2023 0

தலைப்பைப் பார்த்துவிட்டு இது ஏதோ ஸ்டீவன் ஸ்பீல்பெர்கின் டைனோசர் படம் போல இருக்கிறது என்று குடும்பத்தோடு போக திட்டமிட்டு விடாதீர்கள். இந்த டைனோசர்ஸின் விஷயமே வேறு. Die No Sirs என்று இதற்கு விளக்கமும் வருகிறது படத்தில். அதாவது “நான் சாக விரும்பவில்லை சார்வாள் …” என்பதுதான் தலைப்பின் பொருள்.  அது மட்டும் இல்லாமல் ஊரையே நடுநடுங்க வைத்துக் கொண்டிருக்கிற தாதாவானாலும் அவருக்குத் தலை வணங்காத ஒரு சுள்ளான் அவர் கண்களுக்கு டைனோசராக தெரியக்கூடும் என்பதுதான் படத்தின் […]

Read More

மணிப்பால் சிக்னா ஹெல்த் இன்சூரன்ஸ் 22-23 நிதியாண்டில் திரட்டிய 500+ கோடி பிரீமியம்

by on July 25, 2023 0

தென்னிந்தியாவில், மணிப்பால் சிக்னா ஹெல்த் இன்சூரன்ஸ் 22-23 நிதியாண்டில் ரூ.500+ கோடி மொத்த எழுதப்பட்ட பிரீமியத்தில் வலுவான 37% அதிகரிப்பை பதிவு செய்கிறது, மேலும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சந்தை இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கிறது. ·மணிப்பால் சிக்னா ஹெல்த் இன்சூரன்ஸ் அதன் புதுமையான உடல்நல காப்பீட்டு தீர்வுகளுடன் இந்தியா மற்றும் தெற்கு சந்தைகள் முழுவதிலும் அதன் இருப்பை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. இந்த தனித்தியங்கும் உடல்நல காப்பீடு நிறுவனம், தென்னிந்தியாவில் 3,300 க்கும் அதிகமான நெட்வொர்க் மருத்துவமனைகளையும், […]

Read More

ஓப்பன்ஹைமர் (ஹாலிவுட்) திரைப்பட விமர்சனம்

by on July 23, 2023 0

உலக அளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக வந்திருக்கிறது யுனிவர்சல் பிக்சர்ஸ் வெளியிட்டிருக்கும் ‘ஓப்பன் ஹைமர்’. காரணம் இதன் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் என்பதுதான். அமெரிக்காவில் தயாரான முதல் அணுகுண்டின் தந்தையான ஜே.ராபர்ட் ஓப்பன்ஹைமரின் வாழ்க்கை சரிதமாக இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஓப்பன்ஹைமர் வேடத்தில் புகழ்பெற்ற நடிகர் சில்லியன் மர்பி நடித்திருக்கிறார். இயல்பில் அமெரிக்க கம்யூனிஸ்டாக அறியப்பட்ட ஓபன்ஹைமர் இரண்டாம் உலகப் போரின் போது அணுகுண்டு தயாரிப்பில் பல நாடுகளும் ஈடுபட்டிருக்கும் வேளையில் அமெரிக்கா அதில் முதல் […]

Read More

கர்நாடகாவில் தேவர் சிலை அமைக்க தேசிய தலைவர் படக்குழு கோரிக்கை

by on July 23, 2023 0

பசும் பொன் முத்து ராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி ‘தேசிய தலைவர்’ என்ற பெயரில் அக்டோபர் 30 அன்று பான் இந்தியா படமாக வெளிவருகிறது. இதில் முத்துராமலிங்க தேவர் வேடத்தில் ஜெ.எம். பஷீர் நடிக்கிறார். இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார். ஆர்.அரவிந்தராஜ் இயக்குகிறார். மூலக்கதை ஏ.எம்.சௌத்திரி. இந்நிலையில் மாண்புமிகு கர்நாடக துணை முதல்வர் DK சிவகுமார் அவர்களை அவரது இல்லத்தில் தேசிய தலைவர் திரைப்பட நாயகன் ஜெ.எம்.பஷீர் அவர்கள் AM சௌத்ரிதேவர் அவர்களுடன் கர்நாடக […]

Read More

எக்கோ திரைப்பட விமர்சனம்

by on July 23, 2023 0

“நாம் செய்த வினை பூமராங் போல – திரும்ப வந்து நம்மையே தாக்கும்…” என்பார்கள். அதையே கொஞ்சம் மாற்றி ‘நாம் செய்த வினையின் எதிரொலி (Echo) நம்மையே தாக்கும்…’ என்கிறார் இந்தப் பட இயக்குனர் நவீன் கணேஷ். அவ்வப்போது திரையில் தலை காட்டும் ஸ்ரீகாந்த், இந்தப் படத்தின் நாயகன் ஆகி இருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் படத்தின் வில்லனும் அவரேதான். அதனாலேயே இப்படி ஒரு பாத்திரத்தை அவர் ஏற்றுக் கொண்டிருக்கக் கூடும். காதல் மனைவியைக் கைப்பிடித்து வாழ்ந்து […]

Read More

சூர்யா பிறந்தநாளில் வெளியான கங்குவா புரோமோ டீஸர்

by on July 23, 2023 0

ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல்ராஜா, யுவி கிரியேஷன்ஸ் உடன் இணைந்து வம்சி-பிரமோத் வழங்கும், இயக்குநர் சிவா இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் நடிகர் சூர்யா நடிப்பில் ‘கங்குவா’ படத்தின் புரோமோ டீசர் தற்போது வெளியாகியுள்ளது! சென்னை (ஜூலை 23, 2023): நடிகர் சூர்யாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும், பிரம்மாண்டமான படமான ’கங்குவா’ படத்தின் பிரம்மாண்டமான புரோமோ டீசரை படக்குழு சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ளனர். ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல்ராஜா கடந்த 16 வருடங்களில் ‘சிங்கம்’ பட சீரிஸ், ‘பருத்தி […]

Read More

சத்திய சோதனை திரைப்பட விமர்சனம்

by on July 22, 2023 0

நல்லவன் என்ற வார்த்தைக்கு வாழ்க்கை அகராதியில் பொருள் தேடினால் பிழைக்கத் தெரியாதவன் என்றுதான் வரும். அப்படி அப்பாவியாக இருக்கும் நல்லவனான பிரேம்ஜி நல்லது செய்யப் போய் எப்படி சோதனைக்கு உள்ளாகிறார் என்பதுதான் படத்தின் கதை. சங்குப்பட்டி என்ற சின்னஞ்சிறு கிராமத்தில் வசிக்கும் பிரேம்ஜி வழியில் போய்க் கொண்டிருக்கும் போது ஒருவரை கொலை செய்து போட்டிருப்பதைப் பார்த்து, வெயிலில் கிடக்கும் அவரை நிழலில் இழுத்துப் போட்டுவிட்டு அவரது உடைமைகளை எடுத்துக் கொண்டு காவல் நிலையம் செல்ல, எதிர்பாராத விதமாக […]

Read More

ரஜினியை வாழ வைத்த தமிழ் மக்கள் விஹானையும் வாழ வைப்பார்கள் – கே.ராஜன்

by on July 22, 2023 0

லாக் டவுன் டைரி பட இசை, டிரெய்லர் வெளியீட்டு விழா அங்கிதா புரடக்ஷன் எஸ். முரளி அதிக பொருட் செலவில் தயாரிக்கும் படம் “லாக் டவுன் டைரி”. 900 படங்களுக்கு ஸ்டண்ட்  மாஸ்டராக  பணியாற்றியிருக்கும் ஜாலி பாஸ்டியன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் – பி.கே.எச் தாஸ். இசை – ஜாசி கிஃப்ட் & AB முரளி இதில் ஜாலி பாஸ்டியன் மகன் விஹான் ஜாலி (அமீத்)  கதாநாயகனாக அறிமுகமாகிறார். சஹானா கதாநாயகியாக நடிக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர்,. மொட்டை ராஜேந்திரன் […]

Read More