July 7, 2026
  • July 7, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

தேசப்பற்றுடன் பாசம் கலந்த படமாக உருவான மிஷன் – சாப்டர் 1

by on July 13, 2023 0

‘மிஷன் இம்பாசிபிள்’ வந்து உலகையே கலக்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தமிழ்ப் படமாக ‘மிஷன் – சாப்டர் 1’ வெளிவருகிறது. இயக்குநர் விஜய் இயக்கத்தில், அருண் விஜய் நடிக்க தேசப்பற்றுடன் சென்டிமென்ட் கலந்து  உருவாகியிருக்கிறது ‘மிஷன் – சாப்டர் 1’. லண்டனில் நடக்கும் கதையைக் கொண்ட இப்படத்தில் அருண் விஜய்யுடன் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், அபி ஹாசன், பரத் போபண்ணா, சிறுமி இயல், விராஜ், ஜேசன் ஷா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். சந்தீப் கே.விஜய் ஒளிப்பதிவு செய்திருக்கும் […]

Read More

மாவீரன் ஒரு பேண்டஸி ஜேனர் படம் – சிவகார்த்திகேயன்

by on July 12, 2023 0

சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஷ்வா தயாரித்திருக்கும் மாவீரன் படம் வரும் ஜூலை 14 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழகத்தில் இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்த நிலையில், நேற்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ‘மாவீரன்’ படக்குழு படம் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள். நடிகர் சிவகார்த்திகேயன் படம் குறித்து பேசுகையில், “பொதுவாக அனைத்து படங்களின் வெளியீட்டின் போதும் சிறு […]

Read More

மிஷ்கின் பேச்சைக் கேட்டால்கொலை செய்யத் தோன்றுகிறது – விஜய் ஆண்டனி

by on July 12, 2023 0

‘கொலை’ படத்தின் இசை வெளியீட்டு விழா! பாலாஜி குமார் இயக்கத்தில் இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘கொலை’. இதில் நடிகர் விஜய் ஆண்டனி, நடிகை ரித்திகா சிங், நடிகை மீனாட்சி செளத்ரி உள்ளிட்டப் பலரும் நடித்துள்ளனர். சென்னையில் நடைபெற்ற இதன் இசை வெளியீட்டு விழாவில் படக்குழு மற்றும் பல முக்கிய திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.  இதில் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது, “‘கொலை’ திரைப்படம் லாக்டவுனில் ஆரம்பித்து கடைசி வருடம் வெளியிட […]

Read More

சாதி மத வெறியர்களை எதிர்கொள்ளும் சிந்தனாவாதிகளை சமூகம் கொடுத்துக் கொண்டே இருக்கும் – திருமாவளவன்

by on July 12, 2023 0

ராசா விக்ரம் இயக்கும் புது வேதம் பட ஆடியோ வெளியீட்டு விழா… விட்டல்‌ மூவிஸ்‌ தயாரித்து விரைவில்‌ திரைக்கு வரும்‌ படம்‌ :புதுவேதம்‌. இந்தப்‌ படத்தின்‌ கதையைப்‌ பற்றி இயக்குனர்‌ ராசாவிக்ரம்‌ கூறும்‌ போது,”சமீப காலமாக ஜாதியைப்‌ பற்றிப்‌ பேசும்‌ படங்கள்‌ அதிகமாக வருகின்றன. அதில்‌ சில படங்கள்‌ வெற்றியும்‌ பெறுகின்றன. புதுவேதம்‌ படத்தின்‌ கதை கதைக்களம்‌ வித்தியாசமானது… மாறுபட்டது… பிறப்பால்‌ உயர்ந்தவர்‌ தாழ்ந்தவர்‌ என்பது நமது தமிழ்க்‌ கலாச்சாரத்தில்‌ கிடையாது. “பிறப்பொக்கும்‌ எல்லா உயிர்க்கும்‌… என்பது […]

Read More

என் சந்தோஷ தருணங்கள் எல்லாமே சென்னையில்தான் நடந்தன – தோனி

by on July 12, 2023 0

கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் சாக்ஷி தோனி வெளியிட்ட LGM படத்தின் இசை மற்றும் ட்ரைலர் முதன்மை கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான மகேந்திரசிங் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி இணைந்து, அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ”தோனி எண்டர்டெயின்மெண்ட்” சார்பாக தயாரித்து இருக்கும் LGM (LET”S GET MARRIED) திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் திங்கள்கிழமை அன்று கோலாகலத்துடன் ஆரவாரமாக நடைபெற்றது. “தோனி எண்டர்டெயின்மெண்ட்” நிறுவனத்தின் […]

Read More

எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்

by on July 11, 2023 0

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. மேலும் எடப்பாடி பழனிசாமி நியமித்த நிர்வாகிகளை அங்கீகரித்து இணையதளத்தில் பதிவேற்றமும் செய்துள்ளது தேர்தல் ஆணையம். நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி தரப்பு அளித்த ஆவணங்களை ஏற்ற தேர்தல் ஆணையம், அதை இணையதளத்தில் பதிவேற்றியது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் என தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம். தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு எடப்பாடி பழனிசாமியை அதிமுக […]

Read More

21வது சர்வதேச ஜாவா-யெஸ்டி தினம் – 10,000+ ஆர்வலர்கள் சவாரிகளுடன் சங்கமித்தனர்

by on July 10, 2023 0

21வது சர்வதேச ஜாவா-யெஸ்டி தினத்தில் 10,000+ ஆர்வலர்கள் சக்தியூட்டப்பட்ட சவாரிகளுடன் பழம்பெரும் மோட்டார் சைக்கிள்களின் பாரம்பரியத்தைக் கொண்டாடுகின்றனர் • பெங்களூரு, சென்னை, டெல்லி, கொச்சின், புனே மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் பெரிய கொண்டாட்டங்கள் திட்டமிடப்பட்டு, நாடு முழுவதும் இந்த மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வு நடைபெற்றது. • பங்கேற்பாளர்கள், வரலாற்று சிறப்புமிக்க மோட்டார் சைக்கிள் கண்காட்சிகள், குழு சவாரிகள், தொழில்நுட்ப பணிமனைகள் மற்றும் தொழில் வல்லுநர்களுடன் ஊடாடும் அமர்வுகள் போன்ற ஒரு பல்வேறு வகையான அற்புதமான நிகழ்வுகளை […]

Read More

என் பேச்சைப் புரிந்து கொண்டு ஆதரித்த கமல் சாருக்கு நன்றி – மாரி செல்வராஜ்

by on July 10, 2023 0

மாமன்னன் திரைப்பட நன்றி அறிவிப்பு விழா ! ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், சமூக நீதி பேசும் மாபெரும் படைப்பாக உருவான திரைப்படம் மாமன்னன். கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான இப்படம் விமர்சகர்களின் பாராட்டுக்களோடு மக்களின் பேராதரவால் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்நிலையில் படக்குழுவினர் வெற்றியைக் கொண்டாடும் வகையில் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.  இந்நிகழ்வினில்..  ஒளிப்பதிவாளர் […]

Read More

சென்னையில் தோனி – சொந்தப்படம் எல்ஜிஎம் இசை விழாவுக்கு வருகை

by on July 10, 2023 0

கிரிக்கெட் ஜாம்பவான் எம் எஸ் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி ஆகியோர் ‘எல் ஜி எம்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவிற்காக சென்னைக்கு வருகை தந்திருக்கிறார்கள். இந்த ஆண்டு மதிப்பிற்குரிய டி 20 லீக்கை வென்ற பிறகு கேப்டன் தல தோனி முதன்முறையாக சென்னைக்கு வருவதால், சென்னை ‘தோனி மேனியா’வாக மாறி இருக்கும் தருணங்கள்… தோனி என்டர்டெய்ன்மென்ட்டின் முதல் தயாரிப்பான ‘எல்ஜிஎம்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தின் வெளியிட்டு விழாவில், மிஸ்டர் […]

Read More

இன்ஃபினிட்டி திரைப்பட விமர்சனம்

by on July 9, 2023 0

தலைப்பைப் பார்த்ததும் நாம் பார்க்கப்போவது ஆங்கிலப் படமா தமிழ்ப் படமா என்ற சந்தேகமே வந்துவிட்டது. ஆனால் படம் தொடங்கியதும் இது அக்மார்க் தமிழ்ப் படம் என்பது புரிந்துவிடுகிறது. தமிழகத்தில் ஒரே இரவில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள் நடைபெற, தலைப்பு செய்தியாகும் இந்த கொலைகளைப் பற்றிய விசாரணைக்கு வரும் இன்ஸ்பெக்டரும் கொல்லப்பட நகரே தீப்பற்றிக் கொள்கிறது. எனவே இந்தக் கேசை துப்பறிய சிபிஐயிடம் கோருகிறார்கள். சிபிஐயில் யாருக்கும் அடங்காமல் தன்னிச்சையாக செயல்படும் நட்டி நடராஜனிடம் இந்தக் கேஸ் ஒப்படைக்கப்படுகிறது. […]

Read More