May 3, 2024
  • May 3, 2024
Breaking News
October 27, 2023

இதய அடைப்புகளை நீக்குவதில் அப்போலோவின் சினெர்ஜிஸ்டிக் சாதன யுக்தி

By 0 174 Views

அப்போலோ மருத்துவமனை மிகவும் சிக்கலான இதய அடைப்புகளுக்கான சிகிச்சைகளில் நவீன மருத்துவ தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் சினெர்ஜிஸ்டிக் சாதன யுக்தியைப் பயன்படுத்துகிறது!

நவீன மருத்துவ தொழில்நுட்பங்களை ஒன்றிணைத்து செயல்படுத்தும் யுக்தியானது இதயத்தில் இருக்கும் சிக்கலான அடைப்புகளை முழுவதுமாக நீக்க உதவுகிறது. மேலும் இந்த முறையில் சிகிச்சை மேற்கொள்ளப்படும் போது இதர சிகிச்சைகளை விட சிக்கல்கள் மிகக்குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய மருத்துவ நடைமுறைகளுக்கான தளங்களில் அப்போலோ மருத்துவமனை விளக்கம் பாராட்டுக்களை அள்ளிக் குழுவினர் நிகழ்த்திய நேரடி செயல்முறை குவித்திருக்கிறது.

உலகிலேயே இருதய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது கவனத்திற்குரியதாக இருக்கிறது.

சென்னை, 25 அக்டோபர் 2023: அப்போலோ மருத்துவமனையைச் சேர்ந்த ஆழ்ந்த அனுபவம் கொண்ட மருத்துவர்கள் குழு, மிகவும் சிக்கலான இதய அடைப்புகளுக்கான சிகிச்சையில் முன்னோடித்துவமான மருத்துவ தொழில்நுட்பங்களை செயல்படுத்துவதில் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது அதிலும் குறிப்பாக, இதயம் தொடர்பான சிக்கலான பிரச்சினைகளுக்கு மருத்துவத்துறையில் நிபுணத்துவத்தையும், மேம்பட்ட சிகிச்சைகளையும் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் நவீன மருத்துவ அப்போலோ சீனியர் தொழில்நுட்பங்களை மேற்கொண்டு வருகிறது.

 

மருத்துவமனையின் இன்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் டாக்டர் ஜி. செங்கோட்டுவேலு (interventional cardiologist Dr Sengottuvelu G] தலைமையிலான மருத்துவர் குழு, ஏஷியன் பசிபிக் சொசைட்டி ஆஃப் இன்டர்வென்ஷனல் கார்டியாலஜி [with Asian Pacific Society of Interventional Cardiology] மற்றும் யூரோப்பியன் பைஃபர்கேஷன் க்ளப் [European Bifurcation Club] உடன் இணைந்து கௌரவமிக்க சர்வதேச மருத்துவ மாநாடுகளில் சிறப்பு மருத்துவ நுட்பங்களைப் பற்றிய செயல் விளக்கங்களை எடுத்துரைத்து இருப்பது பாராட்டுகளைப் பெற்றுள்ளது

காம்ப்ளக்ஸ் பெர்குடேனியஸ் கரோனரி இன்டர்வென்ஷன் (காம்ப்ளக்ஸ் பிசிஐ) [Complex Percutaneous Coronary Intervention (Complex PCI)] என்பது இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் தமனியின் ஸ்டென்ட் பாதிப்பு அதிகளவில் இருக்கும்பட்சத்தில் வைக்கும் மருத்துவ நடைமுறையை பின்பற்றுவதாகும் இந்தியாவில் இருதய நோய்களின் பாதிப்பு மிக அதிகமாக இருப்பதால் இந்த மருத்துவ நடைமுறைகளின் வெற்றி சவாலுக்குரியதாக இருக்கிறது.

மேலும், இந்தியாவில் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது நிலைமை மிக சிக்கலான நிலையை எட்டிய பின்பே மருத்துவ உதவியை நாடி வருகிறார்கள் பெரும்பாலான சூழ்நிலைகளில், பலர் மிகவும் மோசமான நிலையில்தான் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள் இப்படி இதய பிரச்சினை தீவிரமான பிறகு மிக தாமதமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது, அவர்களுக்கான மருத்துவ சிகிச்சை முறைகளை மேற்கொள்வதில் பிரச்சினைகள் அதிகம் உருவாகின்றன. சில சமயங்களில் பிரச்சினையை கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளை செயல்படுத்துவதிலும் சிக்கல்களை அதிகரிக்கின்றன.

இவ்வாறாக அதிகம் கவனம் தேவைப்படுகிற அசாதாரணமான சவால்களை அடையாளம் கண்டுகொண்டிருக்கும் அப்போலோ மருத்துவமனை, லேசர், ரோட்டாப்ளேஷன், ஷாக் வேவ் லித்தோட்ரிப்சி, ஆர்பிட்டல் அத்ரெக்டமி மற்றும் கட்டிங் பலூன் (Laser, Rotablation, Shock Wave Lithotripsy, Orbital Atherectomy & Cutting Balloon] போன்ற மேம்பட்ட மருத்துவ நுட்பங்களின் தொகுப்பை ஒருங்கிணைத்து வளர்ச்சிக்கண்டு வரும் நவீன மருத்துவ அணுகுமுறையை செயல்படுத்தி வருகிறது.

இந்த மருத்துவ நுட்பங்கள் நோயாளிகளின் சிகிச்சைகளுக்கேற்றப்படி தனிப்பயனாக்கப்பட்டவை மேலும் சிகிச்சையில் எதிர்கொள்ளும் சிக்கல்களைக் குறைப்பதற்கும், சிகிச்சையின் வெற்றி விகிதங்களை அதிகரிப்பதற்கும் ஏற்றவகையில் ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தியாவில் பெர்குடேனியஸ் கரோனரி இன்டர்வென்ஷன் (Complex Percutaneous Coronary Intervention (Complex PCI)] பிரச்சினையானது, மிகவும் பாதிப்படைந்த இதய தமனிகளுக்கான சிகிச்சைகளை அளிக்க வேண்டியதாக இருக்கிறது மேலும், கால்சியம் அதிகரித்ததனால் (heavy calcification) தசைகள் கடினமாகும் முழுவதும் அடைப்புகளால் பிரச்சினைகளாலும் இப்பிரச்சினை வகைப்படுத்தப்பட்டுள்ளது அல்லது பாதிக்கப்படும் அக்லூஷன்ஸ் (total occlusions (blocks)] பிரச்சினையுடன் கண்டறியப்படுகிறது இந்த வீக்கம் இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை கணிசமாக தடுக்கும் வாய்ப்புகளை உருவாக்குவதால், மார்பு வலி மற்றும் மாரடைப்பு ஆபத்துகளுக்கான அறிகுறிகளுக்கு வழிவகுக்கின்றன.

இது போன்ற மிகவும் சிக்கலான சூழ்நிலையில், மிகவும் கடினமான தசை அடைப்பினால் பாதிக்கப்பட்ட 75 வயதுள்ள பெண்மணிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பெரும் வெற்றியடைந்தது. அதேபோல் இடதுபக்கம் பிரச்சினையை எதிர்க்கொண்ட 54 வயதுடைய மருத்துவர் முழுவதுமாக மீண்டு வந்தது. தனது வீட்டில் இருந்தபோது ஏற்கனவே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்த 77 வயதுள்ள நோயாளிக்கு ஏற்பட்ட மாரடைப்பிலிருந்து சரியாகி வந்தது போன்ற முக்கிய கேஸ்கள் இந்த சிகிச்சை முறையினால் மீண்டு வந்தவர்கள் பட்டியலில் அடங்கும்.

அப்போலோ மருத்துவமனைக் குழுவின் ட்ரைலேசர், ட்ரிப்சி, ரோட்டா ஷாக் மற்றும் ஆர்பிகட் (TRILASER TRIPSY, ROTASHOCK & ORBICUT) போன்ற அதிநவீன மருத்துவ நடைமுறைகளின் பயன்பாடு, நோயாளிகளின் பிரச்சினைகளில் இருந்து மீண்டு உயிர் வாழும் வாய்ப்புகளையும், அவர்களது மட்டுமல்லாமல், மிகவும் மேம்படுத்தியதோடு இதய வாழ்க்கைத் தரத்தையும் அடைப்புகளுக்கு சிகிச்சையளிப்பதில் இருந்து வந்த தடைகளையும் தகர்த்தெறிந்திருக்கிறது. 

அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் நிர்வாக இயக்குநர் திருமதி சுனீதா ரெட்டி (Ms Suneeta Reddy, Managing Director, Apollo Hospitals Group] கூறுகையில், “மிகவும் சிக்கலான பிரச்சினைகளில், டாக்டர் நவீன மருத்துவ செயல்முறைகளின் மூலம் திருப்புமுனைகளை உருவாக்கி வரும் செங்கோட்டுவேலு மற்றும் அவரது குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் எங்களது மருத்துவ சுகாதார செயல்பாட்டு யுக்தியானது, உலகளாவிய தரத்துடன் இருப்பதை வெளிப்படுத்தி இருக்கிறது மேலும், சமீபத்திய அதிநவீன மருத்துவத்தை எங்களது சிகிச்சைகள் பிரதிபலிப்பதோடு, நிபுணத்துவமிக்க தலைச்சிறந்த மருத்துவ நிபுணர்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதற்கும் இந்தச் சாதனை ஒரு மிகச்சரியான சான்றாகும்.

எங்களது அப்போலோ மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் போது, அவர்களுடைய அபாரத் திறமை, ஆழ்ந்த அனுபவம் மற்றும் நுண்ணறிவையும் ஒருங்கிணைத்து மருத்துவ நடைமுறைகளை மேற்கொள்வது உலகளாவிய மருத்துவ தளங்களில் பல பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. அப்போலோ மருத்துவமனைகளில் இருதய மருத்துவம் எங்களுடைய முக்கிய சிறப்பு மருத்துவமாக இருப்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம் அதனால் இதய மருத்துவத்தில் அதிநவீன மருத்துவ தொழில்நுட்பங்களை கொண்டுவர தொடர்ந்து முதலீடுகளை மேற்கொள்வோம். இதன் மூலம், எங்களுடைய மருத்துவர்கள் முன்மாதிரியான சிகிச்சையை வழங்குவதையும், சிகிச்சைகளுக்கான அதிகப்பட்ச பலன்களை அடைவதையும் நாங்கள் இலக்காக கொண்டு இருக்கிறோம்” என்றார்.

அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் இன்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் மற்றும் ஸ்ட்ரக்ச்சுரல் ஹார்ட் டிசிஸிஸ் ப்ரோக்ராம் பிரிவின் க்ளினிக்கல் லீட், டாக்டர். ஜி. செங்கோட்டுவேலு [Dr Sengottuvelu, Interventional Cardiologist and Clinical Lead, Structural Heart Disease Programme, Apollo Hospitals Group] கூறுகையில், “வாழ்க்கை முறை, மன அழுத்தம் மற்றும் மரபியல் போன்ற பல்வேறு காரணிகளால் நம் நாட்டில் இதய நோயின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இதன் விளைவாக, ஒருவருக்கொருவர் மாறுப்பட்ட பிரச்சினைகளுடன் கூடிய நோயாளிகளை நாங்கள் அதிக எண்ணிக்கையில் சந்தித்து வருகிறோம். பிரச்சினைகள் எப்படி இருந்தாலும், மருத்துவ நிபுணர்களாகிய நாங்கள் எங்கள் நோயாளிகளின் தேவைகளுக்கு ஏற்ப தனிப்பட்ட தீர்வுகளைத் அளித்தாக வேண்டும்.

இன்றைக்கு உள்ள பல்வேறு நவீன மருத்துவ நுட்பங்களை ஒன்றிணைப்பதன் மூலம், இதய அடைப்புகளினால் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கான முழுமையான தீர்வுகளை உருவாக்கி இருக்கிறோம் இதன் மூலம் நோயாளிகளின் ஆயுட்காலம் அதிகரிக்கவும் முடிந்திருக்கிறது. ஒன்றிற்கு மேற்பட்ட நவீன மருத்துவ தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படும் மருத்துவ நடைமுறையானது, சிகிச்சைகளின் வெற்றி விகிதத்தை பெருமளவில் அதிகரித்து இருக்கிறது. அத்துடன் நோயாளிகளின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது’ என்றார்.

அப்போலோ மருத்துவமனை குறித்து…

1983 -ல் டாக்டர் பிரதாப் சி ரெட்டி சென்னையில் இந்தியாவிலேயே முதல் முறையாக மிகப் பெரிய கார்ப்பரேட் மருத்துவமனையைத் தொடங்கியதன் மூலம் ஒரு முன்னோடி முயற்சியை மேற்கொண்டார். அப்போது இந்தியாவில் அப்போலோ ஒரு மிகப் பெரிய மருத்துவப் புரட்சியை ஏற்படுத்தியது.

இன்று ஆசியாவிலேயே மிகவும் நம்பகமான ஒருங்கிணைந்த மருத்துவ நல குழுமமாக திகழும் அதில், உலகம் முழுவதும் 12 ஆயிரத்துக்கும் அதிகமான படுக்கை வசதிகளுடன், 72 மருத்துவமனைகள், சுமார் 5000 மருந்தகங்கள், 400-க்கும் அதிகமான க்ளினிக்குகள், 1228 மருத்துவ பரிசோதனை மையங்கள், 700-க்கும் அதிகமான டெலி மெடிசின் மையங்கள், 15-க்கும் மேற்பட்ட மருத்துவ கூடிய ஆராய்ச்சி கல்வி மையங்கள் மற்றும் உலகளாவிய மருத்துவ பரிசோதனைகளுடன் அறக்கட்டளை என உலகின் மிகப் பெரிய ஒருங்கிணைந்த மருத்துவ சேவை வழங்கும் நிறுவனமாக அப்போலோ உள்ளது.

தென்கிழக்கு ஆசியாவிலேயே முதன்முறையாக சென்னையில் முதல் புரோட்டான் சிகிச்சை மையத்தை நிறுவுவதற்காக வெகு சமீபத்தில் முதலீடு செய்துள்ளது.

ஒவ்வொரு நான்கு நாட்களுக்கும், ஒரு மில்லியன் பேருக்கு அப்போலோ மருத்துவமனைகள் குழுமம் சிகிச்சை அளிக்கிறது. ஒவ்வொரு தனிநபருக்கும் உலகத் தரத்திலான சிகிச்சையை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் அதன் பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக சிறப்பு தபால் தலையை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. கடந்த 2010-ல் அப்போலோ மருத்துவமனைகள் தலைவர், டாக்டர் பிரதாப். .சி. ரெட்டிக்கு பத்மவிபூஷன் விருது வழங்கி கௌரவித்தது.

கடந்த 40 ஆண்டுகளாக, மருத்துவ ஆராய்ச்சிகள், சர்வ தேசத் தரத்திலான மருத்துவ சேவைகள், அதி நவீன தொழில் நுட்பம் ஆகியவற்றில் அப்போலோ மருத்துவமனைகள் குழுமம் தொடர்ந்து சிறந்து விளங்குவதுடன் தனது தலைமைத்துவத்தை தொடர்ந்து பேணி வருகிறது. மருத்துவ சேவைகளுக்காக நாட்டில் சிறந்து விளங்கும் மருத்துவமனைகளில் தொடர்ந்து தர வரிசையில் அதன் மருத்துவமனைகள் முன்னணியில் இருந்து வருகின்றன.

For more information please contact:

APOLLO HOSPITALS I Suganthy S 9841714433

ADFACTORS PR| Anjana Raghu Ram 9677220106 | Timothy 9962629240