May 5, 2024
  • May 5, 2024
Breaking News

Monthly Archives: September 2018

சிவகார்த்திகேயன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை சீமராஜா பூர்த்தி செய்யும் – பொன்ராம்

by on September 11, 2018 0

இளைய வசூல் மன்னன் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ‘ரஜினி முருகன்’ மற்றும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என அடுத்தடுத்து இரண்டு மெகா வெற்றிகளைக் கொடுத்த இயக்குனர் பொன்ராம், சீமராஜாவும் வெற்றிதான் என்ற உறுதியில் இருக்கும் அதே சமயம் ரசிகர்களின் வரவேற்பைக் காண்பதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளார். “ஒரு மாணவர் பரீட்சை முடிவுக்கு காத்திருப்பதை போலவே நானும் காத்திருக்கிறேன்..!” என சிரிக்கிறார் பொன்ராம். முழு படக்குழுவும் படத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தாலும், “எனக்கு வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்கும் உணர்வு இருக்கிறது..!” […]

Read More

கூட இருப்பவர்களுக்கு முதலில் நல்லது செய்யுங்கள் – கமலுக்கு கோரிக்கை

by on September 10, 2018 0

கமல் நடித்த பட்டாம்பூச்சி, தாம்பத்யம் ஒரு சங்கீதம், இவர்கள் வருங்கால தூண்கள் உள்பட 18 படங்களை தயாரித்தவர் ஆர்.ஆர்.பிலிம்ஸ் ரகுநாதன். இவருடைய 19-வது தயாரிப்பாக, உருவாகியிருக்கும் படம் தான் ‘மரகதக்காடு’. முழுக்க முழுக்க உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ, மலையாள டைரக்டர் இலியாஸ் காத்தவன் மற்றும் பலர் நடித்துள்ளனர். மங்களேஸ்வரன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். நட்சத்திர பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய ஜெய்பிரகாஸ் என்ற புதியவர் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு […]

Read More

என் மனைவி கொடுத்த தைரியம்தான் பரியேறும் பெருமாள் – பா.இரஞ்சித்

by on September 10, 2018 0

‘நீலம் புரொடக்சன்ஸ்’ சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் முதல் படம் ‘பரியேறும் பெருமாள்.’ இத்திரைப்படம் செப்டம்பர் 28ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் கலைஞர்களுடன் தன் சீடனுக்காக இயக்குநர் ராம் கலந்து கொண்டார். இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக இருந்தவர்தான் இந்தப்பட இயக்குநர் ‘மாரி செல்வராஜ்’என்பது குறிப்பிடத் தக்கது. நிகழ்வில் இயக்குநர் பா.இரஞ்சித் பேசுகையில்… “ஒரு தத்துவம் என்பது நமக்கு முன்னால் உறுதியாக வாழ்ந்தவர்களில் இருந்தே பிறக்கிறது. அப்படி எனக்கு முன்னோடியாக புரட்சியாளர் […]

Read More

கிராமப்புற செட் என்றால் திருவிழா மார்க்கெட் மட்டும் அல்ல – சீமராஜா முத்துராஜ்

by on September 10, 2018 0

சீமராஜா படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல் தொடர்பான காட்சிகள் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியுள்ளது. இதில் கலை இயக்குனர் முத்துராஜின் பங்கும் முதன்மையானது. அதற்காக குழுவில் உள்ள மற்றவர்களுக்கு தன் நன்றியை தெரிவிக்கிறார். “சீமராஜாவில் என் வேலை நன்கு கவனிக்கப்படுகிறது என்றால், அதற்கு காரணம் பாலசுப்ரமணியம் சாரின் ஒளிப்பதிவுதான். அவர் என் கலை வேலையின் ஒவ்வொரு நுணுக்கமான விஷயங்களையும் ரசித்தார். அவர் படப்பிடிப்புக்கு முன்பே வாட்ஸாப்பில் என் பரிந்துரையையும் கேட்பார். இசையமைப்பாளர் டி இமான் […]

Read More

பாரத் பந்த் – ஆளும் கட்சி ஆதரிக்காததால் தமிழகத்தில் பிசுபிசுத்தது

by on September 10, 2018 0

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடு தழுவிய முழு அடைப்பிற்கு (பாரத் பந்த்) அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பெரும்பாலான மாநிலங் களில் எதிர்க்கட்சிகள் போராட்டங்களையும் நடத்தி வருகின்றன. ஆனால், தமிழகத்தில் தி.மு.க உள்பட எதிர்க்கட்சிகள் பந்த்தை ஆதரித்தும் ஆளும்கட்சியான அ.தி.மு.க. பந்த்தை ஆதரிக்காதநிலையில் இன்றைய முழு அடைப்பால் தமிழகத்தில் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படவில்லை. சென்னையைப் பொறுத்தவரை வழக்கம் போல பஸ்-ஆட்டோ, ஷேர் ஆட்டோக்கள், தனியார் பள்ளி வேன்கள் வழக்கம் போல […]

Read More

3டி யில் வெளியாகவுள்ள 2 பாயிண்ட் O டீஸர்

by on September 9, 2018 0

ஷங்கர் இயக்கி, ரஜினி நடிப்பில் உருவாகும் 2 பாயிண்ட் O டீசர் வரும் செப்டம்பர் 13 விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. சுபாஸ்கரன் வழங்கும் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்தில் ரஜினிகாந்துடன் அக்ஷய் குமார் வில்லனாக நடித்துள்ளதும், ஏ.ஆர்.ரஹமான் இசையமைத்திருப்பதும் தெரிந்த் விஷயங்கள். இதுவரை தெரியாத விஷயம், வெளியாகவுள்ள டீஸர், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 3D திரையரங்குகளில் 3D தொழில்நுட்பத்தில் திரையிடப்படவுள்ளதுதான். அதிபிரம்மாண்டமான 2 பாயிண்ட் O படத்தின் டீசரை ரசிகர்கள் 3D யில் […]

Read More

என்னைக் கஷ்டப்படுத்திய வண்டி இயக்குநர் – விதார்த் உருக்கம்

by on September 9, 2018 0

பொல்லாதவன் படத்துக்குப் பின் ஒரு மோட்டார் பைக்கை கதையின் மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் ‘வண்டி’. ரூபி ஃபிலிம்ஸ் ஹஷீர் தயாரிப்பில் விதார்த், சாந்தினி நடித்திருக்கிறார்கள். சூரஜ் எஸ் குரூப் இசையமைத்திருக்கும் இந்த படத்தை ரஜீஷ் பாலா இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இசையை வெளியிட்டு வாழ்த்தி பேசியது ஹைலைட். மற்றவர்கள் பேசியதிலிருந்து… தயாரிப்பாளர் பிஎல் தேனப்பன் – “விதார்த் […]

Read More

நடிகர் தினேஷுக்கு மாமியாரானார் தேவயானி..!

by on September 8, 2018 0

திரையுலகில் நடிக நடிகையருக்கு சில கொள்கைகள் இருக்கும். உதாரணத்துக்கு ராஜ்கிரண் எத்தனைக் கோடிகள் கொடுத்தாலும் வில்லனாக நடிக்க மாட்டார். அதேபோல் தேவயானியும் அம்மா, மாமியார் ரோல்களை ஏற்பதில்லை என்று உறுதியுடன் இருந்து அப்படி வந்த பல வேடங்களை ஒதுக்கி வந்தார். இப்போது முதல்முறையாக தன் கொள்கையைத் தளர்த்திக் கொண்டிருக்கிறார் ‘களவாணி மாப்பிள்ளை’ படத்துக்காக. இதில் நாயகன் தினேஷுக்கு மாமியாராக நடிக்கிறார் தேவயானி. ‘நம்ம ஊரு பூவாத்தா’, ‘கட்டபொம்மன்’, ‘நாடோடி மன்னன்’, ‘மாப்பிள்ளை கவுண்டர்’ உட்பட 16 சூப்பர் […]

Read More

வஞ்சகர் உலகம் விமர்சனம்

by on September 8, 2018 0

ஒரு வெளிநாட்டுக்காரரிடம் நம்ம ஊர் ஃபுல் மீல்ஸை வைத்தால் அவர் எப்படி சாப்பிடுவார்..? ரசத்தை முதலில் ஊற்றி சாப்பிட்டு விட்டு பிறகு மோர்சாதம், சாம்பார் சாதம் என்று சாப்பிடக்கூடும் இல்லையா..? அப்படிதான் ஆகிறது நம்ம ஊருக்குக் கதை எழுதும்போது ஹாலிவுட் ஸ்டைலில் திரைக்கதை எழுதினால். அப்படி நியூயார்க் பிலிம் அகாடமியில் பயின்று அமெரிக்கப் படங்கள் போல புதுமாதிரி கதை சொல்லலில் இந்தப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் மனோஜ் பீதா. எங்கோ ஆரம்பிக்கிற கதையில் நாயகன் சிபி புவனசந்திரன், எரிகின்ற […]

Read More

காக்கிவாடன்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் 3 பேர் பலி

by on September 8, 2018 0

ஒவ்வொரு வருடமும் நாம் தீபாவளி கொண்டாட சில உயிர்களைப் பலி கொடுக்க வேண்டியுள்ளது. அவ்வளவு அபாயகரமான தொழிலாக இருக்கிறது பட்டாசு தயாரிக்கும் தொழில். அப்படி இன்று காலை சிவகாசி அருகே உள்ள காக்கிவாடன்பட்டியில் செயல்படும் ஒரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்க, உள்ளே இருந்த தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே வந்தனர். புகை மூட்டத்தில் சிலர் உள்ளே சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் அங்கு சென்று தீயை […]

Read More