மொத்த வணிகம் 14.22% அதிகரித்திருப்பது, அனைத்து பிரிவுகளிலும் எட்டப்பட்ட சிறப்பான வளர்ச்சியை பிரதிபலிக்கிறது.
சில்லறை, விவசாயம் மற்றும் சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் (RAM) ஆகிய பிரிவுகளில் ஏற்பட்ட வலுவான வளர்ச்சியால் மொத்த கடன்கள் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் (YoY) 16.39% உயர்ந்துள்ளது.
39.36% என்ற ஆரோக்கியமான காசா (CASA) விகிதத்தின் ஆதரவுடன் வைப்புத்தொகைகள் 12.50% அதிகரித்துள்ளன.
காலாண்டு அடிப்படையில் (QoQ), வங்கி தனது மொத்த வைப்புத்தொகையை (CD உட்பட) ஜூன்’26-இல் இருந்த ₹1.62 லட்சம் கோடியிலிருந்து செப்டம்பர்’26-இல் ₹1.52 லட்சம் கோடியாக திட்டமிட்டு 5.60% குறைத்துள்ளது.
வங்கி புதிதாக ₹22,486 கோடி மதிப்பிலான FCNR(B) வைப்புத்தொகையைத் திரட்டியுள்ளது. மேலும், ₹3806 கோடிக்கு OFCB-யையும் திரட்டியுள்ளது.
மேம்பட்ட செயல்பாட்டுத் திறன், நிலையான நிகர வட்டி வரம்பு (NIM) மற்றும் சிறப்பான செலவின மேலாண்மை ஆகியவற்றின் மூலம் நிகர லாபம் முந்தைய ஆண்டின் இதே காலஅளவைவிட 14.71% அதிகரித்துள்ளது.
செயல்பாட்டு லாபம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 46.58% உயர்ந்திருக்கிறது.
செப்டம்பர் 2026-ல் முடிவடைந்த காலாண்டில், வங்கியின் வட்டியல்லாத வருமானம் (NII) ஆண்டுக்கு ஆண்டு (YoY) அடிப்படையில் 59% வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்து, ₹3,953 கோடியை எட்டியுள்ளது.
வங்கியின் செலவு மற்றும் வருவாய் விகிதம் ஜூன்’26-இல் 44.80%-ஆக இருந்ததிலிருந்து 723 அடிப்படைப் புள்ளிகள் (bps) முன்னேற்றம் கண்டு, செப்டம்பர்’26-இல் 39.25%-ஆக உள்ளது.
மொத்த வாராக்கடன் (GNPA) 1.61% ஆகவும், நிகர வாராக்கடன் (NNPA) 0.14% ஆகவும் முன்னேற்றம் கண்டு சொத்துகளின் தரம் மேலும் வலுவடைந்துள்ளது.
மொத்த பரிவர்த்தனைகளில் டிஜிட்டல் பயன்பாடு 96%-ஐ எட்டியிருப்பது, தொழில்நுட்பத்தால் முன்னெடுக்கப்படும் வாடிக்கையாளர்களின் செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது.
• நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு (YoY) 14.71% உயர்ந்து செப்டம்பர்’25-ல் இருந்த ₹3018 கோடியிலிருந்து செப்டம்பர்’26-ல் ₹3462 கோடியாக அதிகரித்துள்ளது.
• செயல்பாட்டு லாபம் ஆண்டுக்கு ஆண்டு 46.58% உயர்ந்து செப்டம்பர்’25-ல் இருந்த ₹4837 கோடியிலிருந்து செப்டம்பர்’26-ல் ₹7090 கோடியாக அதிகரித்துள்ளது.
• செப்டம்பர்’25-ல் ₹6551 கோடியாக இருந்த நிகர வட்டி வருமானம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 17.83% உயர்ந்து செப்டம்பர்’26-ல் ₹7719 கோடியாக பதிவாகியிருக்கிறது.
• செப்டம்பர்’26-ல் சொத்துகள் மீதான வருவாய் (RoA) 1.31% ஆகவும், பங்கு மூலதனம் மீதான வருவாய் (RoE) 19.65% ஆகவும் உள்ளது.
• கடன்கள் மீதான வருவாய் (YoA) செப்டம்பர்’26-ல் 8.17% ஆக இருந்தது.
• வைப்புத்தொகைக்கான செலவு செப்டம்பர்’26-ல் 4.89% ஆக பதிவாகியிருக்கிறது.
• செப்டம்பர்’25-ல் ₹620324 கோடியாக இருந்த மொத்த கடன்கள் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 16.39% உயர்ந்து செப்டம்பர்’26-ல் ₹721982 கோடியாக அதிகரித்திருக்கிறது.
• RAM துறைக்கு (ரீடெய்ல், விவசாயம் மற்றும் MSME) வழங்கப்பட்ட கடன்கள் செப்டம்பர் 2025-ல் இருந்த ₹375660 கோடி என்ற அளவிலிருந்து செப்டம்பர் 2026-ல் ₹442302 கோடியாக உயர்ந்து 17.74% வளர்ச்சியை எட்டியிருக்கிறது
• மொத்த உள்நாட்டு கடன்களில் RAM பிரிவின் பங்களிப்பு 67.04% ஆக உள்ளது. ரீடெய்ல், விவசாயம் மற்றும் MSME கடன்கள் ஆண்டுக்கு ஆண்டு முறையே 17.37%, 17.18% மற்றும் 19.06% வளர்ச்சி அடைந்துள்ளன. வீட்டுக் கடன்கள் (அடமானக் கடன்கள் உட்பட) செப்டம்பர்’26-ல் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 12.33% அதிகரித்துள்ளது.
• முன்னுரிமை துறைக்கான கடன்கள் ANBC-யின் ஒரு சதவீதமாகப் பார்க்கும்போது, ஒழுங்குமுறைத் தேவையான 40%-க்கு எதிராக செப்டம்பர்’26-ல் ₹257647 கோடியாக (48.67%) உள்ளது.
• செப்டம்பர்’25-ல் ₹776946 கோடியாக இருந்த மொத்த டெபாசிட்கள் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 12.50% உயர்ந்து செப்டம்பர்’26-ல் ₹874036 கோடியை எட்டியுள்ளது. நடப்பு, சேமிப்பு மற்றும் CASA வைப்புத்தொகைகள் ஆண்டுக்கு ஆண்டு முறையே 27.48%, 11.55% மற்றும் 13.77% வளர்ச்சி அடைந்துள்ளன.
• உள்நாட்டு CASA விகிதம் 30 செப்டம்பர்’26 நிலவரப்படி 39.36% ஆக உள்ளது.
• CD விகிதம் 30 செப்டம்பர்’26 நிலவரப்படி 82.60% ஆக உள்ளது.
• மொத்த வாராக்கடன் (GNPA) செப்டம்பர்’25-ல் 2.60% ஆக இருந்ததிலிருந்து செப்டம்பர்’26-ல் 1.61% ஆக (99 bps) குறைந்துள்ளது; நிகர வாராக்கடன் (NNPA) செப்டம்பர்’25-ல் 0.16% ஆக இருந்ததிலிருந்து செப்டம்பர்’26-ல் 2 bps குறைந்து 0.14% ஆக பதிவாகியிருக்கிறது.
• வாரா ஐயக்கடன்களுக்கான (PCR) நிதி ஒதுக்கீட்டு விகிதம் (தொழில்நுட்ப கடன் தள்ளுபடி TWO உட்பட, PCR), செப்டம்பர் 2026-ல் 98.22% ஆக இருக்கிறது.
• நழுவல் விகிதம் செப்டம்பர்’25-ல் 0.79% ஆக இருந்ததுடன் ஒப்பிடுகையில், செப்டம்பர்’26-ல் 0.69% ஆக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
• மூலதனப் போதுமான விகிதம் 16.21% ஆக உள்ளது. செப்டம்பர்’26-ல் CET-I 15.18% ஆகவும், அடுக்கு I மூலதனம் 15.18% ஆகவும் உள்ளது.
• ஒரு பங்குக்கான வருவாய் (EPS) செப்டம்பர்’25-ல் ₹89.63 ஆக இருந்ததிலிருந்து செப்டம்பர்’26-ல் ₹102.82 ஆக அதிகரித்துள்ளது.
• நிகர லாபம் காலாண்டுக்கு காலாண்டு அடிப்படையில் (QoQ) 5.77% உயர்ந்து ஜூன்’26-ல் இருந்த ₹3273 கோடியிலிருந்து செப்டம்பர்’26-ல் ₹3462 கோடியாக அதிகரித்துள்ளது.
• கட்டணம் சார்ந்த வருமானம் காலாண்டுக்கு காலாண்டு அடிப்படையில் 10.76% உயர்ந்து ஜூன்’26-ல் இருந்த ₹930 கோடியிலிருந்து செப்டம்பர்’26-ல் ₹1030 கோடியாக அதிகரித்துள்ளது.
• முதலீடுகள் மீதான வருவாய் (YoI) ஜூன்’26-ல் 6.96% ஆக இருந்ததிலிருந்து 2 bps மேம்பட்டு செப்டம்பர்’26-ல் 6.98% ஆக உயர்ந்துள்ளது.
• செலவு மற்றும் வருவாய் விகிதம் ஜூன்’26-இல் 44.80%-ஆக இருந்ததிலிருந்து 555 அடிப்படைப் புள்ளிகள் (bps) முன்னேற்றம் கண்டு, செப்டம்பர்’26-இல் 39.25%-ஆக உள்ளது.
• உள்நாட்டு நிகர வட்டி வரம்பு (NIM) செப்டம்பர்’26-ல் 3.42% ஆக உள்ளது.
• மொத்த வாராக்கடன் (GNPA) ஜூன்’26-ல் 1.86% ஆக இருந்ததிலிருந்து செப்டம்பர்’26-ல் 1.61% ஆக (25 bps) குறைந்துள்ளது; நிகர வாராக்கடன் (NNPA) ஜூன்’26-ல் 0.15% ஆக இருந்ததிலிருந்து செப்டம்பர்’26-ல் 0.14% ஆக (1 bps) குறைந்துள்ளது.
• நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு (YoY) 12.42% உயர்ந்து H1FY26-ல் இருந்த ₹5991 கோடியிலிருந்து H1FY27-ல் ₹6735 கோடியாக அதிகரித்துள்ளது.
• செயல்பாட்டு லாபம் ஆண்டுக்கு ஆண்டு 31.65% உயர்ந்து H1FY26-ல் இருந்த ₹9607 கோடியிலிருந்து H1FY27-ல் ₹12647 கோடியாக அதிகரித்துள்ளது.
• நிகர வட்டி வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 17.38% உயர்ந்து H1FY26-ல் இருந்த ₹12910 கோடியிலிருந்து H1FY27-ல் ₹15154 கோடியாக அதிகரித்துள்ளது.
• உள்நாட்டு நிகர வட்டி வரம்பு (NIM) H1FY26-இல் 3.35%-ஆக இருந்ததிலிருந்து, H1FY27-இல் 6 bps அடிப்படைப் புள்ளிகள் உயர்ந்து 3.41% ஆக இருக்கிறது.
• சொத்துகள் மீதான வருவாய் (RoA) H1FY27-ல் 1.31% ஆக இருக்கிறது.
• கடனுக்கான செலவு H1FY26-ல் 0.27% ஆக இருந்ததிலிருந்து H1FY27-ல் 0.22% ஆக (5bps) குறைந்து முன்னேற்றம் கண்டுள்ளது.
• பங்கு மூலதனம் மீதான வருவாய் (RoE) H1FY27-ல் 19.57% ஆக உள்ளது.
வாடிக்கையாளர் தொடர்பு மையங்கள்:
• இவ்வங்கி, உள்நாட்டில் 6017 கிளைகளைக் (3 டிஜிட்டல் பேங்கிங் யூனிட்டுகள் (DBUs) உட்பட) கொண்டிருக்கிறது; இக்கிளைகளுள் 2013 கிராமப்புறங்களிலும், 1611 சிறு நகரங்களிலும், 1196 நகர்ப்புறங்களிலும் மற்றும் 1197 பெருநகரங்களிலும் செயல்படுகின்றன. இவ்வங்கிக்கு 3 வெளிநாட்டு கிளைகளும் மற்றும் 1 IBU-யும் (கிஃப்ட் சிட்டி கிளை) இருக்கின்றன.
• வங்கி 5678 ஏடிஎம்கள் (ATM) மற்றும் பிஎன்ஏக்கள் (BNA) மற்றும் 18,379 பிசினஸ் முகவர்களையும் (BCs) கொண்டுள்ளது.
டிஜிட்டல் வங்கிச்சேவை:
• H1FY27-ல் டிஜிட்டல் சேனல்கள் வழியாக நடைபெற்ற பிசினஸின் மதிப்பு ₹1,45,344 கோடி ஆகும். இதுவரை மொத்தம் 164 டிஜிட்டல் பயணங்களும், பயன்பாட்டு வசதிகளும், செயல்முறைகளும் தொடங்கப்பட்டிருக்கின்றன. மற்றும் 19.31% பங்கினை இவை கொண்டிருக்கின்றன.
• மொபைல் பேங்கிங் சேவையின் பயனாளிகள் எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட 26% அதிகரித்து 2.66 கோடி என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.
• முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், UPI மற்றும் நெட் பேங்கிங் பயனர்களின் எண்ணிக்கை முறையே 20% மற்றும் 2% அதிகரித்து, 2.89 கோடி மற்றும் 1.20 கோடியாக உயர்ந்துள்ளது. பாஸ்டேக் மற்றும் POS பயனர்களின் எண்ணிக்கை முறையே 135% மற்றும் 50% அதிகரித்துள்ளது.
விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்:
• ஃபைனான்ஷியல் எக்ஸ்பிரஸ் இதழ் இவ்வங்கிக்கு ‘சிறந்த பொதுத்துறை வங்கி விருது 2024-25’-ஐ வழங்கியது.
• வங்கியின் மேலாண் இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (MD & CEO), “தமிழ்நாடு பிசினஸ் லீடர் ஆப் தி இயர் – 2025” என்ற விருதைப் பெற்றார்.
• நிதியாண்டு 26-ல் APY இலக்கில் 104% – ஐ எட்டியதற்காக இந்தியன் வங்கிக்கு நேர்த்தியான செயல்பாட்டிற்காக APY வருடாந்திர விருது வழங்கப்பட்டது.
• “IB SAATHI” திட்டத்திற்காக மதிப்புமிக்க SKOCH தங்க விருதையும், “பாதுகாப்பு செயல்பாடுகளுக்காக” வெள்ளி விருதையும் இவ்வங்கி பெற்றுள்ளது.
• 2024-25 நிதியாண்டிற்கான மதிப்புமிக்க ராஜ்பாஷா கீர்த்தி புரஸ்கார் விருதில் வங்கி இரண்டாம் பரிசை வென்றுள்ளது.
• 2026 ஆம் ஆண்டிற்கான “செயற்கை நுண்ணறிவில் சிறந்து விளங்குவதற்கான கோல்டன் பீகாக் விருது” வெற்றியாளராக வங்கி அறிவிக்கப்பட்டது.
• DSIJ-யின் 2026 CFO விருதுகளில், இந்தியன் வங்கியின் தலைமை நிதி அதிகாரி (CFO), வங்கிகளுக்கான (நடுத்தர மூலதன வகையினம்) சிறந்த CFO ஆக கௌரவிக்கப்பட்டார்.
• ASSOCHAM-நிகழ்வில் சிறந்த பொதுத்துறை வங்கி (நடுத்தர) பிரிவில், “ஒட்டுமொத்த செயல்பாடு – வங்கி” என்ற வகையினத்தின் கீழ் வங்கி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளது.
எங்களது இலக்கு…
எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அன்றாட வங்கிச் சேவைகளை எளிமையானதாகவும், விரைவானதாகவும் மற்றும் எளிதில் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதே எங்கள் இலக்காகும். வெளிப்படையான, சிக்கலற்ற சேவைகளை வழங்க எங்களது டிஜிட்டல் தளங்களை நாங்கள் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம். வாடிக்கையாளர்களின் வசதியை எங்கள் டிஜிட்டல் வளர்ச்சியின் மையமாக வைத்து, தனிநபர்கள், விவசாயிகள் மற்றும் வணிகர்களுக்கு மிகவும் நம்பகமான வங்கிச் சேவைக்கான கூட்டாளியாக இருப்பதே எமது நோக்கமாகும்.