May 17, 2024
  • May 17, 2024
Breaking News

Monthly Archives: September 2018

மீண்டும் பெயரைக் கெடுத்துக்கொள்ளத் தயாராகும் ஜி.வி.பிரகாஷ்

by on September 18, 2018 0

ஒரு துறையில் பரிமளிப்பதே ஆகப் பெரிய விஷயம் என்றிருக்க, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என்ற இருபெரும் ஜாம்பவான்கள் ஆண்டுகொண்டிருந்த நிலையில் சிறிய வயதில் திரை இசைத்துறைக்குள் வந்து வெற்றி பெற்றவர் ஜி.வி.பிரகாஷ்.  பெரும்பாலும் அனைத்து பெரும் இயக்குநர்களுடனும் பணிபுரிந்த அவர், இசையில் பெற்ற வெற்றியையும் மீறி நடிகனாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது அரிய சாதனை என்றே கொள்ளலாம். ஆனால், அந்த வெற்றியில் ஒரு கரும்புள்ளி என்றால் அது ஆதிக் இரவிச்சந்திரன் இயக்கத்தில் அவர் நடித்த ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ […]

Read More

500 படங்களில் நடித்த குணச்சித்திர நடிகர் கேப்டன் ராஜு மரணம்

by on September 17, 2018 0

மலையாள சினிமாவில் தனக்கென ஒரு தனியிடம் வகித்த குணச்சித்திர நடிகர் கேப்டன் ராஜு இன்று கொச்சியில் காலமானார். அவருக்கு வயது 68. மலையாளம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் சேர்த்து 500 படங்கள் நடித்து முடித்தவர் கேப்டன் ராஜு. ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு என அனைத்து தமிழ் முன்னணி நட்சத்திரங்களுடனும் திரையில் பங்கெடுத்திருக்கும் அவர் நடித்த தமிழ்ப்படங்களில் தர்மத்தின் தலைவன், சூர சம்ஹாரம், ஜீவா, பிரியங்கா, ஜல்லிக்கட்டு, தாய்நாடு, என் […]

Read More

டிவி நடிகை நிலானி காதலர் தற்கொலை – போலீஸ் புகார் எதிரொலி

by on September 17, 2018 0

சின்னத்திரை நடிகை நிலானிக்கும், சின்னத்திரையில் உதவி இயக்குநராக இருக்கும் காந்தி லலித்குமார் என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக பழக்கம் இருந்து வந்துள்ளது. இருவருக்கும் திருமணம் செய்து கொள்வது தொடர்பாக கருத்துவேறுபாடு இருந்து வந்துள்ள நிலையில் ஒரு தொலைக்காட்சி தொடருக்காக நிலானி நடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த காந்தி லலித்குமார் நிலானியுடன் பேச முற்பட இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மயிலாப்பூர் போலீஸ் நிலையம் சென்ற நடிகை நிலானி, காந்தி லலித்குமார் தன்னை திருமணம் செய்து கொள்ள […]

Read More

விக்னேஷ் சிவன் நலனுக்காக ஜோடியாக பொற்கோவில் போன நயன்தாரா

by on September 17, 2018 0

யானை பழமொழி நயன்தாராவுக்கும் பொருந்தும். நயன்ஸ் நடித்தாலும் நூறு செய்தி…. நடிக்காமல் ஊர் சுற்றினாலும் நூறு செய்தி. இப்போது புனிதப் ப்யணம் மேற்கொண்டிருக்கும் நயன்ஸைப் பற்றிய செய்தி. தனியாகப் போயிருந்தாலும் விட்டிருக்கலாம். உடன் சென்றிருப்பவர் அவரது மனம் கவர்ந்த இயக்குநர் விக்னேஷ் சிவன். இருவரும் அமிர்தசரஸ் பொற்கோயில் வளாகத்தில் நின்று போஸ் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்வதாகக் கருதப்படும் இவ்விருவரும் இப்படி அடிக்கடி விழாக் காணும் படங்கள் அவர்கள் மூலமாகவே நம்மை வந்து […]

Read More

பெண்களின் சக்தி என்ன என்பது அக்டோபர் 18ல் தெரியும் – ஜே.எஸ்.கே

by on September 16, 2018 0

தனித்துவமான படங்களை மட்டுமே தன் பேனரில் தயாரித்து வரும் ஜேஎஸ்கே ஃபிலிம் கார்ப்பரேஷன் ஜே. சதீஷ்குமார் தயாரித்திருக்கும் படம் ‘அண்டாவ காணோம்’. அதேபோல் வித்தியாசமான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஸ்ரேயா ரெட்டி, இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அறிமுக இயக்குனர் வேல்மதி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இந்த ‘அண்டாவ காணோம்’ படத்தை இயக்கியிருந்தாலும், தனது முந்தைய படங்களை விட இந்தப் படத்தில் தான் அழுத்தமாக நடித்திருப்பதாக ‘ஸ்ரேயா’வே. கூறுவதால் படத்தைப் பற்றிய […]

Read More

ஒரு காட்சிக்கு மட்டும் 19 டேக் வாங்கிய ஹீரோ – சாந்தினி சஸ்பென்ஸ்

by on September 15, 2018 0

‘வாசன் புரொடக்சன்’ மற்றும் ‘பர்மா டாக்கீஸ்’ தயாரிப்பில் மெட்ரோ சிரிஷ், சாந்தினி தமிழரசன் நடித்திருக்கும் படம் ராஜா ரங்குஸ்கி. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தை தரணிதரன் இயக்கியிருக்கிறார். வரும் செப்டம்பர் 21ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் பேசியதிலிருந்து… நாயகி சாந்தினி தமிழரசன். “வஞ்சகர் உலகம் படத்தைத் தொடர்ந்து மீண்டும் இன்னொரு ‘மர்டர் மிஸ்டரி’ படம். ஆனால் இரண்டுமே வித்தியாசமான கதை. இந்த படத்தின் கதையைக் கூட கேட்க […]

Read More

அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு தங்க தமிழ்ச்செல்வன் பதிலடி

by on September 15, 2018 0

அ.ம.மு.கழகத்தின் மாநில கொள்கை பரப்பு செயலாளராக இருக்கும் தங்க தமிழ்ச்செல்வன் தேனியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அ.தி.மு.க.வில் இணைய அவர் தூதுவிடுவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்து இருந்தது பற்றிய கேள்விக்கு பதிலளித்தார். அதில்… “இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் திருப்பரங்குன்றம், திருவாரூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெற்றால் அ.தி.மு.க. கட்சியையும், சின்னத்தையும் எங்களிடம் ஒப்படைத்து விட்டு பொறுப்பாளர்கள் விலகி கொள்ள வேண்டும். அதேநேரம் அ.ம.மு.க. தோற்றால் அனைவரும் அ.தி.மு.க.வில் இணைந்து விடுகிறோம் என்று சவால் […]

Read More

பள்ளிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை அறிவிப்பு

by on September 15, 2018 0

அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டு அனைத்து வணிக நிறுவனங்களிலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. இந்தநிலையில் இன்று முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை நிறுத்திக்கொள்ள பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி […]

Read More