January 15, 2025
  • January 15, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • விக்னேஷ் சிவன் நலனுக்காக ஜோடியாக பொற்கோவில் போன நயன்தாரா
September 17, 2018

விக்னேஷ் சிவன் நலனுக்காக ஜோடியாக பொற்கோவில் போன நயன்தாரா

By 0 1274 Views

யானை பழமொழி நயன்தாராவுக்கும் பொருந்தும். நயன்ஸ் நடித்தாலும் நூறு செய்தி…. நடிக்காமல் ஊர் சுற்றினாலும் நூறு செய்தி. இப்போது புனிதப் ப்யணம் மேற்கொண்டிருக்கும் நயன்ஸைப் பற்றிய செய்தி.

தனியாகப் போயிருந்தாலும் விட்டிருக்கலாம். உடன் சென்றிருப்பவர் அவரது மனம் கவர்ந்த இயக்குநர் விக்னேஷ் சிவன். இருவரும் அமிர்தசரஸ் பொற்கோயில் வளாகத்தில் நின்று போஸ் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்வதாகக் கருதப்படும் இவ்விருவரும் இப்படி அடிக்கடி விழாக் காணும் படங்கள் அவர்கள் மூலமாகவே நம்மை வந்து அடைகின்றன.

இந்த பொற்கோயில் தரிசனம் வரிசையாக நயன்ஸ் நடித்த படங்கள் வெற்றி பெற்றதாலும், நாளை (18-09-2018) விக்னேஷ் சிவனின் பிறந்தநாளாக இருப்பதால் அவர் நலம் முன்னிட்டும் சென்ற ஆன்மிக சுற்றுலாவாம்.

நடக்கட்டும்… நடக்கட்டும்..!