March 24, 2025
  • March 24, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • பெண்களின் சக்தி என்ன என்பது அக்டோபர் 18ல் தெரியும் – ஜே.எஸ்.கே
September 16, 2018

பெண்களின் சக்தி என்ன என்பது அக்டோபர் 18ல் தெரியும் – ஜே.எஸ்.கே

By 0 1253 Views

தனித்துவமான படங்களை மட்டுமே தன் பேனரில் தயாரித்து வரும் ஜேஎஸ்கே ஃபிலிம் கார்ப்பரேஷன் ஜே. சதீஷ்குமார் தயாரித்திருக்கும் படம் ‘அண்டாவ காணோம்’. அதேபோல் வித்தியாசமான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஸ்ரேயா ரெட்டி, இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

அறிமுக இயக்குனர் வேல்மதி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இந்த ‘அண்டாவ காணோம்’ படத்தை இயக்கியிருந்தாலும், தனது முந்தைய படங்களை விட இந்தப் படத்தில் தான் அழுத்தமாக நடித்திருப்பதாக ‘ஸ்ரேயா’வே. கூறுவதால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது. பி.வி.சங்கர் ஒளிப்பதிவு செய்ய, அஷ்மா மித்ரா இசையமைத்திருக்கிறார்.

“நவராத்திரி பண்டிகையே அரக்கர்கள் மீது துர்க்கை செலுத்தும் ஆதிக்கத்தை சொல்லும் ஒரு பண்டிகை தான். அதனால், பெண்ணை மையப்படுத்திய இந்த கதையை, பூஜை நாட்களில்… அதுவும் நவராத்திரி விடுமுறையில் வெளியிட திட்டம் வைத்திருக்கிறார்கள்.

“இப்போது உச்சத்தில் இருக்கும் நாயகியை மையப்படுத்திய கதைகளின் ட்ரெண்டை உருவாக்கியதே இந்தப் படம்தான் என்பேன். இந்தப் படத்தில் ஸ்ரேயா ரெட்டி நிறைய உழைத்திருக்கிறார். தேசிய அளவில் அதற்கான அங்கீகாரத்தைப் பெறுவார் என்று நம்புகிறேன். இந்தப் படத்தில் தனது கதையைத் தேர்வு செய்யும் திறமையை மீண்டும் நிரூபிப்பார்.

ஒரு வரியில் சொன்னால் பெண்களின் சக்தி என்ன என்பது வரும் அக்டோபர் 18 – ஆம் தேதி தெரியும்..!” என்கிறார் தயாரிப்பாளர் ஜே. சதீஷ்குமார்.

ஆனது ஆச்சு… அக்டோபர் 18 -ம் தேதி வரை பொறுத்திருப்போம்..!