April 26, 2024
  • April 26, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ஒரு காட்சிக்கு மட்டும் 19 டேக் வாங்கிய ஹீரோ – சாந்தினி சஸ்பென்ஸ்
September 15, 2018

ஒரு காட்சிக்கு மட்டும் 19 டேக் வாங்கிய ஹீரோ – சாந்தினி சஸ்பென்ஸ்

By 0 822 Views

‘வாசன் புரொடக்சன்’ மற்றும் ‘பர்மா டாக்கீஸ்’ தயாரிப்பில் மெட்ரோ சிரிஷ், சாந்தினி தமிழரசன் நடித்திருக்கும் படம் ராஜா ரங்குஸ்கி. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தை தரணிதரன் இயக்கியிருக்கிறார்.

வரும் செப்டம்பர் 21ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் பேசியதிலிருந்து…

நாயகி சாந்தினி தமிழரசன்.

“வஞ்சகர் உலகம் படத்தைத் தொடர்ந்து மீண்டும் இன்னொரு ‘மர்டர் மிஸ்டரி’ படம். ஆனால் இரண்டுமே வித்தியாசமான கதை. இந்த படத்தின் கதையைக் கூட கேட்க எனக்கு வாய்ப்பில்லை, உடனே ஓகே சொல்ல வேண்டியதாயிற்று. ஆனால் படத்தில் நடித்து முடித்தபோது தான் கதாபாத்திரம் பற்றி உணர்ந்தேன்.

சிரிஷ் நல்ல கதைகள் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஒரே டேக்கில் நடிக்கும் நடிகர். ஆனாலும் ஒரு ஷாட்டுக்கு மட்டும் 19 டேக் வாங்கினார். அது என்ன காட்சி என்பதை படத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..!”

நாயகன் மெட்ரோ சிரிஷ்

“இந்தப் படத்தை ஆரம்பிக்கும் போது ஒரு அப்பாவியான முகம் தேவைப்பட்டது, அதற்கு நான் பொருத்தமாக இருந்ததால் நடிக்க உள்ளே வந்தேன். முதல் விஷயம் யுவன் சார் இசைதான் இந்த படத்துக்கு வேணும் என நான் ரொம்ப தீவிரமாக இருந்தேன்.

தயாரிப்பாளர், இயக்குனர், நான் மூவரும் அவரை போய் சந்தித்தோம். அவர் கதையை கேட்டு உடனே ஒப்புக் கொண்டார்.

Raja Ranguski Press Meet

Raja Ranguski Press Meet

சாந்தினி நல்ல தோழி, நல்ல நடிகை. திடீரென ஒரு இக்கட்டான சூழலில், நான் அழைத்ததற்காக கதையே கேட்காமல் நடிக்க வந்தார். என் மீதும், இயக்குனர் மீதும் அவர் வைத்திருந்த நம்பிக்கையை அது காட்டுகிறது. அவர் கதாபாத்திரம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது..!”.

இயக்குனர் தரணிதரன் –

“மெட்ரோ படத்தின் இயக்குனர் ஆனந்த் என் நண்பர், அவர் மூலமாக தான் சிரிஷ் எனக்கு அறிமுகம். “நானே இந்தப் படத்தை தயாரிக்கணும்னு ஆசைப்பட்றேன், எனக்கு நிதி உதவி மட்டும் தேவை..!” என்றேன். தயாரிப்பாளராக சொன்ன பட்ஜெட்டில் படத்தை முடித்து விட்டோம்.

படத்துக்கு அடையாளமாக ஒருவர் வேண்டும் என யோசித்தபோது, யுவன் சார் என் மனதுக்குள் வந்தார். பட்ஜெட் பற்றி யோசித்தோம், என்ன ஆனாலும் சரி முயற்சி செய்து பார்ப்போம் என நினைத்தோம். நாங்கள் எதிர்பார்த்ததை விட குறைவான தொகையை மட்டுமே கேட்டு, எங்களுக்காக பெரிய உதவியை செய்தார் யுவன்.

சிரிஷ் நல்ல நடிகர். திட்டமிட்டதை விட குறைந்த நாட்களில் படத்தை முடிக்க அவர் மிகப்பெரிய காரணம். சாந்தினி கற்பூரம் மாதிரி, சொன்னதை சரியாகப் புரிந்து கொண்டு நடிப்பை கொடுப்பார். தமிழ் தெரிந்த நல்ல நடிகை, அவரே இந்தப் படத்துக்கு டப்பிங்கும் பேசியிருக்கிறார்.

நிறைய நல்ல உள்ளங்களின் ஆதரவால்தான் இந்த அளவுக்கு வந்திருக்கிறது. 8 மாதத்தில் படத்தை முடித்து விட்டோம். ரிலீஸ் தேதியை நாம் முடிவு செய்தாலும் அதை இந்த சினிமாவில் சாத்தியப்படுத்த முடிவதில்லை. இதற்கு ஒரு தீர்வு கொண்டு வர வேண்டும்..!”