அமோக வெற்றி பெற்ற ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா’ இப்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப் பட உள்ளது… ராகவா லாரன்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் நடிப்பது யார் என்றுதானே கேட்கிறீர்கள். அவர் 2 பாய்ண்ட் ஓ வில்லன் அக்ஷய்குமார். அதில் பெரிதும் பேசப்பட்ட சரத்குமார் நடித்த வேடத்தில் நடிக்க பிரபலமான நடிகர்கரிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறதாம். ராகவா லாரன்ஸே இந்தப் படத்தை இயக்குவதன் மூலம் பாலிவுட் போகிறார். மற்ற நட்சத்திரங்கள் அடுத்தடுத்து அறிவிக்கப் பட உள்ளது. படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் […]
Read Moreகதாநாயகர்களைத் தேடும் திரையுலகில் ‘எனக்கு கதாநாயகிகள் மட்டும் போதும்’ என்று ‘ஹீரோயின் ஒரியன்டட்’ படங்களையே எடுத்துக் கொண்டிருக்கிறார் ஒரு இயக்குநர். த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் ‘கர்ஜனை’ படத்தினை இயக்கிய சுந்தர் பாலுதான் அவர். அடுத்து அவர் இயக்கவிருக்கும் படம் ‘கன்னித்தீவு’. இந்தப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரம் ஏற்கும் நாயகி யார் என்கிறீர்களா..? தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து வரும் வரலட்சுமிதான் இப்படத்தின் கதைநாயகியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கன்னித்தீவு என்று பெயர் வைத்துவிட்டு ஒரு கன்னிதானே இருக்கிறார் […]
Read Moreஎண்ணி ஒரு வாரம் கூட ஆகவில்லை…. சிம்புவின் நல்ல எண்ணத்தைப் பாராட்டி. அதற்குள் அவர் மண்டைச் சூட்டுக்கு மத்தளம் அடித்து மதம் பிடிக்க வைத்துவிட்டார்கள். போனவாரம்தான் தேவையில்லாமல் பணத்தை வீணடிக்கும் ரசிகர்களுக்கு அட்வைஸாக “என் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யாதீர்கள்… அந்தக் காசுக்கு அப்பா அம்மாவுக்கு ஏதாவது வாங்கிக் கொடுங்கள்…” என்று சொன்னார் சிம்பு. அகமகிழ்ந்தது சமுதாயம். அவ்வளவுதான்… அதகென்றே காட்துக்கிடந்த ஸ்டார்ஸின் ரசிகர்கள் என்ற கூட்டம் ‘அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்களா என்ன..? ஒண்ணு, ரெண்டு ரசிகர்களை வச்சுக்கிட்டு […]
Read Moreமீண்டும் எழுந்து வந்திருக்கும் இயக்குநர் சேரனின் ‘திருமணம் – சில திருத்தங்களுடன்’ திரைப்படம் அவரது 11-வது படைப்பாகும். படத்தில் சேரனின் தங்கையாக நாயகி காவ்யா சுரேஷ் நடிக்க, மாப்பிள்ளையாக நாயகன் உமாபதி ராமையா நடித்துள்ளார். சேரனின் தாய் மாமனாக தம்பி ராமையா நடிக்க மாப்பிள்ளையின் அக்காவாக நடிகை சுகன்யா நடித்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து, இயக்குநர்கள் மகேந்திரன், கே.எஸ்.ரவிக்குமார், மாரி செல்வராஜ், லெனின் பாரதி, கார்த்திக் தங்கவேல், கோபி நயினார், நடிகைகள் […]
Read Moreஜித்தன் ரமேஷ் ஐந்து அறிமுக கதாநாயகிகளுடன் நடிக்கும் படம் ‘ஒங்கள போடணும் சார்…’ இந்தத் தலைப்பை நினைவிருக்கிறதா..? ‘நானும் ரௌடிதான்’ படத்தில் வில்லன் பார்த்திபனைப் பார்த்து நயன்தாரா பேசிய வசனம் இது. இப்படம் பற்றி இரட்டை இயக்குநர்கள் ஆர்.எல்.ரவி மற்றும் ஸ்ரீஜித் கூறுகையில், “நான்கு வாலிபர்கள் மற்றும் நான்கு இளம்பெண்கள் ஒரு வேலைக்காக ஒரு இடத்தில் ஒன்றாக தங்குகிறார்கள். ஜாலி, கேலி என நகரும் நாட்களும் இவர்கள் செய்கின்ற களேபரங்களும் ஃயூத்புல்லாக இருக்க, இந்த வாலிபர்களும் இளம்பெண்களும் ஒரு பெரிய பிரச்சினையில் மாட்டிக்கொள்கின்றனர். அது […]
Read More‘காதல் முன்னேற்ற கழகம்’ என்ற வித்தியாசமான தலைப்பு கொண்ட படத்தை ‘ப்ளு ஹில்ஸ் புரொடக்ஷன்’ மலர்க்கொடி முருகன் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் இயக்குநரும், நடிகருமான பாண்டியராஜனின் மகன் ப்ரித்விராஜன் கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சாந்தினி நடிக்கிறார். மற்றும் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர்குமார், ‘நாதஸ்வரம்’ முனிஸ்ராஜா, அமீர் ஹலோ கந்தசாமி ஆகியோரும் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிவசேனாதிபதி நடித்திருக்கிறார். ஹாரிஸ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, இசையமைத்திருக்கிறார் பி.சி.சிவன் பாடல்களை யுகபாரதி, மோகன்ராஜ், உமாசுப்ரமணியத்துடன் எழுதி படத்தை இயக்கியிருக்கிறார். கதை, திரைக்கதை, வசனமும் இவரே. இந்தப்படத்தின் இசை வெளியீடு இன்று நடைபெற்றது. […]
Read More