நடிக்க ஆசையில்லாத இயக்குநர்களை ஹாலிவுட்டில்தான் பார்க்க முடியும் போலிருக்கிறது. நம்மூரைப் பொறுத்தவரை பெரும்பாலான இயக்குநர்களும் நடிக்கும் ஆவலில்தான் இருக்கிறார்கள். ஓடுகிற வரை இயக்கம்… அதுக்குப்பிறகு நடிப்பு என்று செட்டில் ஆகி விடுகிறார்கள். கோலிவுட்டில் நான்கு படங்கள் இயக்கிய ‘மகிழ் திருமேனி’க்கு இப்போது நடிப்பு திசை ஆரம்பித்திருக்கிறது. ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனான இந்தி இயக்குநர் ‘அனுராக் காஷ்யப்’புக்கு மகிழ் டப்பிங் பேசியிருந்தது அந்தப் பாத்திரத்தை மேம்படுத்தியது. வில்லனுக்கு டப்பிங் என்பது தாண்டி இப்போது வில்லனாகவே ஆகிறார் மகிழ் […]
Read Moreபடங்களின் மூலம் நகைச்சுவை விருந்து அளித்து வந்த நடிகர் சூரி தமிழ் மக்களுக்கு அருமையான அறுசுவை உணவை அளிக்க எண்ணி 2017ம் ஆண்டு ‘அம்மன்’ உயர்தர சைவ உணவகத்தை மதுரை காமராஜர் சாலையில் துவக்கினார். ‘அம்மன்’ உணவகத்தின் சுவைமிகுந்த உணவிற்கு மக்கள் ஏகோபித்த ஆதரவை அளித்து நடிகர் சூரியை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். தற்போது நடிகர் சூரி மேலும் தனது உணவக கிளைகளை பெருக்க வேண்டி ‘அம்மன்’ உயர்தர சைவ உணவகம் மற்றும் ‘அய்யன்’ உயர்தர அசைவ உணவகம் […]
Read More150 கோடிக்குத் தயாராகி 200 கோடி பிஸினஸ் ஆகி, தமிழ் சினிமாவின் பெஞ்ச் மார்க் என்றெல்லாம் புகழப்பட்ட ‘பிகில்’ படம் எதிர்மறையான விமர்சனங்களால் பின்னுக்குப் போனது. படம் வெளியாகி மூன்றாவது நாள் முடிவில்தான் (மூன்று நாள்களும் விடுமுறை என்றறிக…) 100 கோடி கிளப்பில் இணைந்தது என்றார்கள். அதற்குப் பிறகு வார நாள்கள் என்பதால் கண்டிப்பாக வசூல் அதில் மூன்றில் ஒரு பகுதிதான் என்றிருக்கும் என்ற நிலையில் எப்படி முதலை வசூலித்து லாபம் ஈட்டும் என்பதெல்லாம் ஒரு பக்கம் […]
Read Moreஇன்றைக்கு சினிமாத்துறையில் பலருக்கும் உதவிகள் செய்து நல்ல பெயரெடுத்த முன்னணி நடிகர் என்றால் அவர் விஜய் சேதுபதிதான். அவருக்கு ‘மக்கள் செல்வன்’ என்ற பட்டமும் இருக்கிறது. தான் செய்யும் செயல் பிறருக்குப் பிடிக்கவில்லை என்றால் அதனைத் தூக்கி எறிந்து விடுவார். அப்படித்தான் தமிழர் விரோதப் போக்குள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வேடத்தில் அவர் நடிக்கக் கூடாது என்று பல தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்ததால் அப்படி ஆரம்பிக்கப்பட்ட படத்திலிருந்து அவர் விலகினார். ஆனால், சமீபத்தில் அவர் […]
Read Moreஇளம் நடிகைக்கு ஒன்று என்றால் ஓடி வந்து உதவ பலபேர் தயாராக இருக்க, பரவை முனியம்மாவுக்கு ஓடி வந்து உதவியிருக்கிறார் ஒரு ஹீரோ. அவர் அபி சரவணன். நடிகை அதிதிமேனனுடன் திருமண சர்ச்சைகளில் நிறைய அவர் மீது விமர்சனங்கள் வந்தாலும், அவ்வப்போது சமூக சேவைகளில் ஆர்வம் காட்டிவருகிறார் அபி சரவணன். சில தினங்களுக்கு முன் மதுரையிலிருக்கும் பரவை முனியம்மா உடல் நலமின்றி இருப்பதைக் கேள்விப்பட்டு மதுரை சென்ற அவர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பரவை முனியம்மாவுக்கு பரிசுகள், […]
Read Moreஇந்த தீபாவளிக்கு விஜய்யின் ‘பிகிலு’டன் கார்த்தியின் ‘கைதி’ தைரியமாக மோதி வெற்றியும் பெற்றுவிட்டது. இது ஒன்றும் கார்த்திக்கு புதிதல்ல… இதேபோல் 2011ம் ஆண்டு வெளியான விஜய்யின் காவலனுடன் மோதிய கார்த்தியின் சிறுத்தை வெற்றி பெற்றது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜின் அடுத்த படமான விஜய் 64 படம் இப்போது படம்பிடிக்கப்பட்டு வருகிறது. விஜய் சேதுபதியும் அப்படத்தில் இணைய அத்ன் எதிர்பார்ப்பு இப்போதே கூடிக் கிடக்கிறது. இது ஒருபுறம் இருக்க, ‘கைதி’யைத் தயாரித்த எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் கார்த்தி நடித்து பாக்யராஜ் […]
Read More