September 17, 2026
  • September 17, 2026
Breaking News
December 12, 2019

கேப்மாரி பார்க்காமல் எஸ்கேப் ஆன விஜய்

By 0 1108 Views

ஊர் உலகுக்கே தெரியும். விஜய்யின் தந்தை எஸ்.ஏ.ஸி தான் விஜய்யை ஹீரோவாக உருவாக்கினார் என்பது. அதற்கு ஈடாக உச்ச நடிகர் மற்ரும் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற அளவில் தந்தைக்கு நன்றிக்கடனும் செய்துவிட்டார் விஜய்.

அடுத்த நன்றியாக அவர் “உழைத்தது போதும்… ஓய்வெடுங்கள்…” என்று அப்பாவுக்கு அன்பாகவும், கொஞ்சம் கண்டிப்பாகவும் கூட சொல்லிப் பார்த்தார். ஆனால், ஆடிய கால், பாடிய வாய் எஸ்.ஏ.சிக்கு சும்மா இருந்தால்தானே..?

ஏதோ படம் இயக்குகிறேன் என்று கடந்த சில வருடங்களில் என்னென்னமோ எடுத்துப் பார்த்தார். எதுவும் கை கொடுக்கத நிலையில் இப்போது கேப்மாரி என்று கேட்டாலேயே ‘உவ்வே…’ வரக்கூடிய டைட்டிலில் ஒரு ஆபாசக் குப்பையை எடுத்திருக்கிறார்.

எடுத்ததுடன் நிற்காமல் அதன் ப்ரீவியூவுக்கு வரச்சொல்லி மகன் விஜய்யைக் கூப்பிட்டாராம். விஜய்க்கு தெரியாதா படம் எப்படி இருக்குமென்று…? அதனால், வேறு வேலை இருப்பதாகச்சொல்லி வெளியூர் பறந்துவிட்டாராம் நல்ல மனம கொண்ட பிள்ளை.

அப்பா இத்துடன் விடுவாரா..?