ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வழங்க கிரீன் மேஜிக் என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் ‘அந்த நாள்’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று மாலை வெளியிட்டார். இப்படத்தின் மூலம் அறிமுகமாகும் கதாநாயகன் ஆர்யன் ஷாம் புகழ்பெறவும், ‘அந்த நாள்’ படம் வெற்றி பெறவும் அப்போது அவர் வாழ்த்துக் கூறினார். அந்த நிகழ்ச்சியில் ஏவிஎம். சரவணன், இயக்குநர் எஸ்பி.முத்துராமன், கதாநாயகன் ஆர்யன் ஷாம், திருமதி.அபர்ணா குகன் ஷாம், படத்தின் இயக்குநர் விவீ, ஒளிப்பதிவாளர் சதீஷ் கதிர்வேல் ஆகியோர் […]
Read Moreநடிகையென்று வந்துவிட்டால் எப்படி நடிக்கச் சொல்கிறார்களோ, எப்படி உடை அணியச் சொல்கிறார்களோ அப்படி அணிந்துவிட்டுப் போக வேண்டியதுதான். அப்படி நடிக்க மாட்டேன், இப்படி உடை அணிய மாட்டேன் என்றால் ஓரம்கட்டி விடுவார்கள். “என்ன ஒன்று… கதைக்குத் தேவைப்பட்டது… அப்படி நடித்தேன்…” என்று பேட்டி கொடுத்து விட்டால் எல்லாம் சரியாகி விடும். அப்படித்தான் ஆனது அந்த பாக்ஸிங் வீராங்கனையின் நிலை. இறுதிச்சுற்று படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக அறிமுகமான ரித்திகா சிங், உண்மையிலேயே ஒரு மார்ஷல் ஆர்ட்ஸ் வீராங்கனை. அந்தப்படத்துக்கு […]
Read Moreரஜினி எப்போதும் உச்சத்தில்தான் இருக்கிறார். ஆனாலும், அவரது ‘டை ஹார்ட்’ ரசிகர்கள் மட்டுமல்லாது பொது ரசிகர்களும் அவரின் மீது ஈர்ப்பாக இருந்த கால கட்டத்தில்… அவரும் முழு ஆரோக்கியத்துடனும், இளமையுடனும் இருந்த போதே அவருக்காகவே ‘முதல்வன்’ கதையை எழுதினார் இயக்குநர் ஷங்கர். அதில் ரஜினி மட்டும் நடித்திருந்து கட்சியை அறிவித்து அதற்கடுத்து வந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் ‘ஷ்யூர் ஷாட்’டாக அப்போதே தமிழக முதல்வர் ஆகியிருப்பார். ஆனால், அதற்கான தைரியம் அவருக்கு அப்போது வராமல் போக, […]
Read Moreஇரண்டரை வயது குழந்தை சுர்ஜித்தின் மரணம் நாடெங்கிலும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது எனலாம். திறந்து கிடக்கும் ஆழ்துளைக் கிணறுக்ளை மூட எல்லோருக்கும் பொறுப்பைத் தோற்றுவித்திருக்கிறது சுர்ஜித்தின் மரணப் போராட்டம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அனைத்து மாவட்ட கலெக்டர்களும் திறந்திருக்கும் ஆழ்துளைக் கிணறுகள் பற்றிய தகவல்களைப் பெற்று வருகிறார்கள். அவற்றின் மீது அவர்கள் நடவடிக்கை எடுத்து வரும் அதே சமயம், தன்னார்வமாக பொதுவானவர்களும் இச்செயலில் இறங்கியிருக்கிறார்கள். மக்களுக்கான பொறுப்புணர்வில் முக்கிய அங்கம் வகிக்கும் நக்கீரன் இதழும் இதுபோன்ற கைவிடப்பட்ட திறந்து […]
Read Moreதீபாவளியின் துக்க நிகழ்வுகளில் தீ விபத்துகள்தான் முக்கியமாக இடம்பெறும் என்பதில்லை. சாலை விபத்துகளும் நிகழ்வதுண்டு. அப்படி ஒரு விபத்தில் பலியாகிவிட்டார் ஒரு பிரபலம். சன் டிவியில் தொகுப்பாளராகவும், ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் டான்சராகவும் பிரபலமானவர் மனோ. இவர் ‘புழல்’ திரைப்படத்தில் மூன்று நாயகர்களில் ஒருவராக அறிமுகமானார். மேலும் பல படங்களில் நடித்தார். மேடை நிகழ்ச்சிகளும் நடத்தி வந்தார் மனோ. இத்தனை பரபரப்பாக இயங்கி வந்தவர் நேற்று (28.10.19) தீபாவளி அன்று மனைவி லிவியாவுடன் அம்பத்துாரில் காரில் […]
Read Moreமணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25-ம் தேதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் 2 வயது குழந்தை சுர்ஜித் தவறி விழுந்தான். அதனைத் தொடர்ந்த மீட்புக் குழுவினரின் பல்வேறு முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன கடைசி முயற்சியாக அருகில் மற்றொரு பெரிய ஆழ்துளை கிணறு தோண்டி, பக்கவாட்டில் சுரங்கம் தோண்டி குழந்தையை மீட்கும் பணிகள் தொடங்கின. ஆனால், கடினமான பாறைகள் அதற்கு இடையூறாக இருந்தன. இந்நிலையில், நேற்று (28-10-2019) இரவு 10.30 மணியளவிலிருந்து குழந்தையின் உடலில் […]
Read Moreசினிமாவின் கதைக்குள்ளேதான் ஆச்சரியங்கள் நடக்குமென்பதில்லை. கதைக்கு வெளியிலேயும் அந்த ஆச்சரியங்கள் நடக்கலாம். இப்போது விஜய் 64 படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் அந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இந்நிலையில் இந்த தீபாவளிக்கு லோகேஷ் இயக்கிய ‘கைதி’, விஜய்யின் ‘பிகிலு’டன் மோதியது. இதில் ஒட்டுமொத்த ரசிகர்களின் தீர்ப்பும் ‘பிகில்’ படத்தைவிட ‘கைதி’ சிறப்பாக வந்திருக்கிறது என்பதே. இதனால் தன் அடுத்த படம் லோகேஷின் இயக்கத்தில் அமைந்திருப்பதால் மகிழ்ச்சியுடன் இருக்கும் விஜய் , […]
Read More