October 17, 2026
  • October 17, 2026
Breaking News

Currently browsing செய்திகள்

இந்தியாவில் அதிக சம்பளம் – முதலிடம் சல்மான் கான்… ரஜினி 14வது இடம்… கமல் 71வது இடம்

by by Dec 6, 2018 0

‘போர்ப்ஸ்’ பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2018-ம் ஆண்டுக்கான முதலிடத்தில் உள்ள நூறு பிரபலங்களையும் அவர்களது சம்பளத்தையும் வெளியிட்டுள்ளது போர்ப்ஸ்.

இதில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் முதலிடத்தில் இருக்கிறார். சல்மான் கான் இந்த ஆண்டில் சம்பாதித்தது எவ்வளவு தெரியுமா..? மயக்கம் போட்டு விடாதீர்கள். அவரது ஆண்ரு வருமானம் ரூ.253.35 கோடியாம்.

கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியாகி நல்ல வசூலை ஈட்டிய ‘டைகர்…

Read More

தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி படங்களுக்கு வழிவிட்ட அதர்வா படம்

by by Dec 5, 2018 0

நாளை மறுநாள் 21ம்தேதியன்று தியேட்டர்காரர்களுக்கு பெரும் நெருக்கடி இருக்கப் போகிறது. தனுஷின் ‘மாரி 2’, விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’, விமலின் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படங்கள் வெளியாகவிருக்க, இவற்றுடன் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான ‘கனா’ படமும் களம் இறங்குகிறது.

இந்தப்படங்களுக்கு முன்னாலேயே முடிவடைந்து தயாரிப்பாளர் சங்கத்திடம் வெளியிட அனுமதி பெற்று வெளியீட்டுத் தேதியும் அறிவித்த அதர்வாவின் ‘பூமராங்’ படமும் 21ம் தேதியன்று வெளியாகவிருந்தது.

ஆனால், இப்போது ஒருவாரம் தள்ளி 28ம்தேதி அந்தப்படம் வெளியாகுமென்று படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான…

Read More

கேரள மார்க்கெட்டைக் குறி வைக்கும் விமல் – கேலரியுடன்

by by Dec 4, 2018 0

யார் மச்சம் எப்போது வேலை செய்யுமென்றே தெரியாது. இப்போதைக்கு விமலுக்கு மச்சம் உச்சத்தில் இருக்கிறது. இதுவரை அவர் நடித்த படங்களிலேயே அதிக விலைக்கு விலை போனதும், அதிக தியேட்டர்களில் வெளியாவதுமான படம் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’. இம்மாதம் 7ம்தேதி வெளியாகும் படம் இது.

கேரளாவில் மிகப் பெரிய நடிகர்களின் படங்கள் கூட 100 தியேட்டர்களுக்குள்தான் வெளியாகுமாம். ஆனால் விமலின் இந்தப் படம் கேரளாவில் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. ஆக, விமல் கேரள மார்க்கெட்டை இந்தப்படத்தின் மூலம்…

Read More

விஜய் சேதுபதி தனுஷ் ஜெயம் ரவி அதர்வா மோதும் டிசம்பர் 3வது வாரம்

by by Dec 4, 2018 0

ஏற்கனவே அதர்வா நடிப்பில் ஆர்.கண்ணன் இயக்கித் தயாரித்துள்ள பூமராங், டிசம்பர் 21ல் வெளியாவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் ‘அடங்க மறு’ வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.

இந்தப் போட்டியில் சமீபமாக பாலாஜி தரணீதரன் இயக்கி விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சீதக்காதி’யும் அவர்களுக்கு ஒருநாள் முன்னதாக அதாவது டிசம்பர் 20-ல் வெளியாகுமென்று அறிவித்தார்கள்.

இவை போதாதென்று இயக்குனர் பாலாஜி…

Read More

3 மில்லியன் பார்வைகள்… நம்பர் 1 டிரெண்டிங் இருந்தும்… – மரண மாஸ் விமர்சனம்

by by Dec 4, 2018 0

நேற்று மாலை 6 மணிக்குதான் வெளியானது ரஜினி நடித்து அடுத்து வெளியாகவிருக்கும் சன் பிக்சர்ஸின் ‘பேட்ட’ படத்தின் பாடல் வரிகள் வீடியோ. 

‘மரண மாஸ்’ எனக் குறிப்பிடப்பட்ட இந்தப்பாடலின் முன்னோட்டம் நேற்று காலையே வெளியாகி எதிர்பார்ப்பைத் தோற்றுவித்தது. அனிருத் முதல்முறையாக ரஜினிக்கு இந்தப்படத்தில் இசைப்பதால் அது குறித்தும் எதிர்பார்ப்பு இருந்தது. நாட்டுப்புறக் கலைஞர்கள் தாரை தப்பட்டை உள்ளிட்ட தோல்வாத்தியக் கருவிகளை இசைத்தது பரபரப்பாக இருந்தது.

மட்டுமல்லாமல் இன்றைய இளம் இயக்குநர்களில் கிளாஸிக்கான படங்களைக் கொடுத்துவரும் கார்த்திக் சுப்பராஜ் ரஜினியை…

Read More

சிலை எடுத்தார் சீதக்காதி விஜய் சேதுபதிக்கு…

by by Dec 2, 2018 0

பழம்பெரும் நடிகர் ‘அய்யா’ ஆதிமூலமாக விஜய் சேதுபதி நடிக்கும் சீதக்காதி படம் இந்த மாதம் 20-ம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. அந்தப் படத்தில் வயதானவராக நடிக்கும் விஜய் சேதுபதி அதற்காக முதன்முறையாக புராஸ்தடிக் மேக்கப் போட்டு நடிக்கிறார்.

வெளியாகவிருக்கும் சீதக்காதி பட புரமோஷனுக்காக இன்று சென்னை எக்ஸ்பிரஸ் அவின்யூவில் சீதக்காதி ‘அய்யா’ வேடமேற்ற விஜய்சேதுபதிக்கு அந்த கெட்டப்பிலேயே மெழுகுச் சிலை ஒன்றை அமைத்தார்கள். 

அந்த சிலையுடன் நின்று செல்பி எடுத்து அனுப்பினால் சீதக்காதி படத்தை வெளியீட்டுக்கு முன்பே பார்க்கும்…

Read More

2018 ல் காதலுக்கு எது தடை..? – புதிய படத்தின் சுவாரஸ்யம்

by by Dec 2, 2018 0

காதல் கதை கொண்ட படங்களுக்கு என்றுமே ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு உண்டு. 60’களில் மதம் காதலுக்கு தடையாக இருந்தது .80’களில் ஜாதி தடையாக இருந்தது.2000-த்தில் அந்தஸ்து காதலுக்கு தடையாக இருந்தது. இன்று காதலே காதலுக்கு தடையாக உள்ளது.

இதை பிரதிபலிக்கும் விதமாக அமையும் கதைக்களத்தில் ஆரி மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று காலை சென்னை முகப்பேரிலுள்ள ஸ்ரீ லக்ஷ்மி சாய் பாபா கோவிலில் பூஜையுடன் துவங்கியது.படப்பிடிப்பு தொடர்ந்து 40 நாட்கள் சென்னையில்…

Read More

அமேஸானில் வெளியாகும் வெள்ள ராஜா தமிழ் தொடரின் டீஸர்

by by Dec 1, 2018 0

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, பாபி சிம்ஹா – பார்வதி நாயர் நடிக்கும் இத்தொடர், டிசம்பர் 7 அன்று, அமேஸான் பிரைம்வீடியோவில் பிரத்தியேகமாக அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அமேஸான் பிரைம் உறுப்பினர்களுக்கான தனது முதல் பிரைம் பிரத்தியேகத் தொடராக, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடனான கூட்டாண்மையில்உருவாக்கப்பட்டுள்ள ‘வெள்ள ராஜா’வின் அறிமுகத்தினை அமேஸான் பிரைம் வீடியோ இன்று அறிவித்துள்ளது.

டிசம்பர் 7, 2018 அன்று 200 நாடுகள் மற்றும்பிராந்தியங்களில் ஒளிபரப்பபடவுள்ள வெள்ளை ராஜா பிரைம் உறுப்பினர்களுக்காக, தெலுங்கு மற்றும் ஹிந்தி…

Read More

வடசென்னை, வேலைக்காரன், 96, பரியேறும் பெருமாள் படங்களுடன் 16வது சென்னை சர்வதேச திரைப்பட விழா

by by Dec 1, 2018 0

16 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் வரும் டிசம்பர் 13 முதல் டிசம்பர் 20 வரை நடைபெறவுள்ளது. இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள் தேவி சினிப்ளக்ஸ், அண்ணா தியேட்டர், கேசினோ, சத்யம் சினிமாஸ், தாகூர் திரைப்பட மையம், ரஷியன் அறிவியல் மற்றும் கலாச்சார மையம் ஆகிய திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது.

இத்திரைப்பட விழாவில் தமிழ் படங்களின் போட்டி பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட விண்ணப்பங்கள் ஊடகம் வாயிலாக அக்டோபர் 7ம் தேதி…

Read More

நடிகை தற்கொலைக்கு என் படம் காரணமல்ல – மறுக்கிறார் இயக்குநர்

by by Nov 30, 2018 0

கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை வளசரவாக்கத்தில் வசித்துவந்த ரியாமிகா என்ற 26 வயது நிரம்பிய நடிகை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ‘எக்ஸ் வீடியோஸ்’ மற்றும் ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ படங்களில் நாயகியாக நடித்தவர் அவர்.

என்ன காரணத்துக்காகத் தற்கொலை செய்துகொண்டார் என்று தெரியாத நிலையில் போலீஸார் விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவருக்குப் போதுமான பட வாய்ப்புகள் இல்லாததால் தற்கொலை செய்து கொண்டதாக பொதுவாக நம்பப்படும் நிலையில் அவர் நடித்த ‘எக்ஸ் வீடியோஸ்’ ஆபாசப்…

Read More