June 13, 2025
  • June 13, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • 2018 ல் காதலுக்கு எது தடை..? – புதிய படத்தின் சுவாரஸ்யம்
December 2, 2018

2018 ல் காதலுக்கு எது தடை..? – புதிய படத்தின் சுவாரஸ்யம்

By 0 1009 Views

காதல் கதை கொண்ட படங்களுக்கு என்றுமே ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு உண்டு. 60’களில் மதம் காதலுக்கு தடையாக இருந்தது .80’களில் ஜாதி தடையாக இருந்தது.2000-த்தில் அந்தஸ்து காதலுக்கு தடையாக இருந்தது. இன்று காதலே காதலுக்கு தடையாக உள்ளது.

இதை பிரதிபலிக்கும் விதமாக அமையும் கதைக்களத்தில் ஆரி மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று காலை சென்னை முகப்பேரிலுள்ள ஸ்ரீ லக்ஷ்மி சாய் பாபா கோவிலில் பூஜையுடன் துவங்கியது.படப்பிடிப்பு தொடர்ந்து 40 நாட்கள் சென்னையில் நடைபெறுகிறது.

இந்த படத்தின் இரண்டு பாடல் காட்சிகளை வெளிநாட்டில் படம்பிடிக்க உள்ளனர். இந்த படத்தில் கடந்து போன காதலையும் பார்க்கலாம் இன்று நடந்து கொண்டிருக்கும் காதலையும் பார்க்கலாம்.

‘அய்யனார்’ படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமித்ரன் இப்படத்தை இயக்குகிறார். ஏ.ஜி.மகேஷ் இசை அமைக்க, ‘அண்ணாதுரை’, ‘தகராறு’ புகழ் தில்ராஜ் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். ‘கிரியேட்டிவ் டீம்ஸ்’ இ.ஆர்.ஆனந்தன் மற்றும் ‘க்ளோஸ்டார் கிரியேஷன்’ பி. தர்மராஜ் இணைந்து தயாரிக்கிறார்கள்.

மற்ற நடிகர் நடிகைகள் தொழில் நுட்ப குழு மற்றும் தலைப்பு குறித்த தகவல்களும் விரைவில் வெளியிடப்படும்.