January 22, 2025
  • January 22, 2025
Breaking News
December 2, 2018

சிலை எடுத்தார் சீதக்காதி விஜய் சேதுபதிக்கு…

By 0 838 Views

பழம்பெரும் நடிகர் ‘அய்யா’ ஆதிமூலமாக விஜய் சேதுபதி நடிக்கும் சீதக்காதி படம் இந்த மாதம் 20-ம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. அந்தப் படத்தில் வயதானவராக நடிக்கும் விஜய் சேதுபதி அதற்காக முதன்முறையாக புராஸ்தடிக் மேக்கப் போட்டு நடிக்கிறார்.

வெளியாகவிருக்கும் சீதக்காதி பட புரமோஷனுக்காக இன்று சென்னை எக்ஸ்பிரஸ் அவின்யூவில் சீதக்காதி ‘அய்யா’ வேடமேற்ற விஜய்சேதுபதிக்கு அந்த கெட்டப்பிலேயே மெழுகுச் சிலை ஒன்றை அமைத்தார்கள். 

அந்த சிலையுடன் நின்று செல்பி எடுத்து அனுப்பினால் சீதக்காதி படத்தை வெளியீட்டுக்கு முன்பே பார்க்கும் வாய்ப்பும் கிட்டவிருக்கிறது அதிர்ஷ்டசாலி ரசிகர்களுக்கு.

Seethakaathi Statue

Seethakaathi Statue

பேஷன் ஸ்டூடியோஸ் தயாரித்து பாலாஜி தரணீதரன் இயக்கியிருக்கும் சீதக்காதி பட விஜய்சேதுபதிக்கு இன்று வைத்த மெழுகுச் சிலையை இயக்குநர் மகேந்திரன் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியது…

“நல்ல வேடங்களைத் தேடித்தேடி நடிக்கும் விஜய்சேதுபதியின் அடுத்த படம் இது. இதிலும் அவரது நடிப்பு பேசப்படக் கூடியதாக இருக்கும் என்பது தெரிகிறது. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ என்ற நல்ல படத்தைக் கொடுத்த பாலாஜி தரணீதரன் இயக்கிய படமென்பதால் இதுவும் சிறந்த படமாக இருக்கும். நல்ல படங்களுக்கு தயாரிப்பாளர்கள் அமைவது கடினம். அதற்காக இந்தப்படத் தயாரிப்பாளரையும் பாராட்டுகிறேன். இந்தப்படம் வெற்றியடைய வாழ்த்துகள்..!”

சிலை திறந்தார்களோ இல்லையோ… ரசிகர்கள் எறும்பென மொய்த்து சிலையுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள்..!