January 21, 2025
  • January 21, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • நடிகை தற்கொலைக்கு என் படம் காரணமல்ல – மறுக்கிறார் இயக்குநர்
November 30, 2018

நடிகை தற்கொலைக்கு என் படம் காரணமல்ல – மறுக்கிறார் இயக்குநர்

By 0 1593 Views

கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை வளசரவாக்கத்தில் வசித்துவந்த ரியாமிகா என்ற 26 வயது நிரம்பிய நடிகை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ‘எக்ஸ் வீடியோஸ்’ மற்றும் ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ படங்களில் நாயகியாக நடித்தவர் அவர்.

என்ன காரணத்துக்காகத் தற்கொலை செய்துகொண்டார் என்று தெரியாத நிலையில் போலீஸார் விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவருக்குப் போதுமான பட வாய்ப்புகள் இல்லாததால் தற்கொலை செய்து கொண்டதாக பொதுவாக நம்பப்படும் நிலையில் அவர் நடித்த ‘எக்ஸ் வீடியோஸ்’ ஆபாசப் படத்தில் நடித்ததால் நண்பர்கள் கிண்டல் செய்து அதனால் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்ததாகவும் ஒரு புரளி கிளப்பி விடப்படுகிறது.

இது குறித்து ‘எக்ஸ் வீடியோஸ்’ பட இயக்குநர் சஜோ சுந்தர் ஒரு குரல் பதிவில் கூறியிருப்பதாவது…

Riyamikka

Riyamikka

“முதலில் என் படம் ஆபாச படம் அல்ல. தவறான வீடியோக்களால் எப்படி ஒவ்வொரு பெண்ணின் வாழ்வும் பாதிக்கப்படுகிறது என்பதை விழிப்புணர்வாகத்தான் என் படத்தில் சொல்லி இளைஞர்களை எச்சரிக்கை செய்திருந்தேன். சமீபத்தில் கூட அப்படி பெரிய நடிகரின் மகள் ஆபாசப் படங்கள் வலை தளங்களில் வெளியாகி அவர் புகார் கொடுத்தது நினைவிருக்கலாம்.

அப்படி ஆகவிடக்கூடாதென்று என்படம் போதித்தது. ஆனாலும் போதுமான தியேட்டர்கள் கிடைக்காமல் என் படம் வெளியானதே தெரியாமல் இருக்கும் நிலையில் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அவர் நண்பர்கள் கிண்டல் செய்திருப்பதாகக் கூறுவது திரிக்கப்பட்ட உண்மை. இப்படி செய்திகள் திரிக்கப்படுவதால் உண்மையான குற்றவாளிகள் தப்புவதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் பூலீஸார் இதன் பின்னணியில் இருக்கும் உண்மைகளைக் கண்டறிய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

உண்மையில் எங்கள் படத்தில் நடித்ததற்குப் பெருமைப்பட்டார் ‘ரியாமிகா’. அவர் நண்பர்கள் எங்கள் படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டியதாகத்தான் அவர் என்னிடம் கூறியிருக்கிறார். அந்தப்படம் வெளியானபின்னும் சில படங்களில் நடிக்க ஓப்பந்தம் ஆனார் அவர்.

மிக தைரியமான பெண் அவர். ஒரு பட்டுப்பூச்சியைப்போல் வளைய வந்த அவர் இறந்ததற்கான உண்மைக் காரணம் கண்டறியப்பட வேண்டும். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எங்கள் அனுதாபங்கள். ரியாமிகாவுக்குக் கண்ணீர் அஞ்சலி..!”