March 29, 2024
  • March 29, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • 3 மில்லியன் பார்வைகள்… நம்பர் 1 டிரெண்டிங் இருந்தும்… – மரண மாஸ் விமர்சனம்
December 4, 2018

3 மில்லியன் பார்வைகள்… நம்பர் 1 டிரெண்டிங் இருந்தும்… – மரண மாஸ் விமர்சனம்

By 0 889 Views

நேற்று மாலை 6 மணிக்குதான் வெளியானது ரஜினி நடித்து அடுத்து வெளியாகவிருக்கும் சன் பிக்சர்ஸின் ‘பேட்ட’ படத்தின் பாடல் வரிகள் வீடியோ. 

‘மரண மாஸ்’ எனக் குறிப்பிடப்பட்ட இந்தப்பாடலின் முன்னோட்டம் நேற்று காலையே வெளியாகி எதிர்பார்ப்பைத் தோற்றுவித்தது. அனிருத் முதல்முறையாக ரஜினிக்கு இந்தப்படத்தில் இசைப்பதால் அது குறித்தும் எதிர்பார்ப்பு இருந்தது. நாட்டுப்புறக் கலைஞர்கள் தாரை தப்பட்டை உள்ளிட்ட தோல்வாத்தியக் கருவிகளை இசைத்தது பரபரப்பாக இருந்தது.

மட்டுமல்லாமல் இன்றைய இளம் இயக்குநர்களில் கிளாஸிக்கான படங்களைக் கொடுத்துவரும் கார்த்திக் சுப்பராஜ் ரஜினியை இயக்குவதும் இந்தப் படத்தின்… மற்றும் பாடல்கள் மீதான எதிர்பார்ப்புக்கு முக்கியக் காரணமாகும். 

‘தட்லாட்டம் தாங்க தர்லாங்க ஸாங்க, உள்ளார வந்தான்னா பொல்லாத வேங்க…’ எனத் தொடங்கும் பாடல் அதிரடியைக் கிளப்பி ரஜினி ரசிகர்களை உற்சாகமடைய வைத்தது. வெளியான ஒருமணிநேரத்தில் பத்து லட்சம் பார்வைகள் என்று டிரெண்டாகி இப்போது வரை டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது பாடல்.

ஆனால், பொதுவான இசை ரசிகர்கள் இப்பாடல் குறித்து என்ன நினைக்கிறார்கள்..? வேறு சில பாடல்களில் சாயல் இந்தப்பாடலில் இருக்கிறது என்பது பொதுவான குறை. அத்துடன் இப்பாடலில் அனிருத்துடன் எஸ்.பி.பி பாடியிருக்கிறார் என்று அறிவித்துவிட்டு அவரை நாலேநாலு வரி பாடவிட்டு முழுப்பாடலையும் அனிருத்தே ஆக்கிரமித்திருப்பதும் எஸ்.பி.பி ரசிகர்களைப் பொங்க வைத்திருக்கிறது.

அது குறித்து மீம்ஸ் கிரியேட்டர்களும் மீம்ஸ்களைப் பரவவிட்டு அதுவும் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது. எப்படி இருந்தாலும் சினிமா பப்ளிசிட்டியைப் பொறுத்தவரை எதிர்வினைகளும் படத்துக்கு பலனையே அளிக்கும்.

டண்டானா… டர்ணா..!

கீழே டிரெண்ட் செட்டரான ‘மரண மாஸ்’ பாடல் வீடியோ…