June 18, 2026
  • June 18, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

“ஆதிக்க வர்க்கத்திற்கு எதிராக என்னுடைய தண்டகாரண்யம் குரல் எழுப்பும்..!”- இயக்குநர் அதியன் ஆதிரை

by by Sep 14, 2025 0

‘தண்டகாரண்யம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

Learn&Teach புரொடக்ஷன் S.சாய் தேவானந்த், S.சாய் வெங்கடேஸ்வரன், நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில், இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில், தினேஷ், கலையரசன், ஷபீர், பால சரவணன், முத்துக்குமார், ரித்விகா,வின்சு, ஆகியோர்களது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “தண்டகாரண்யம்”

இம்மாதம் 19-ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின், இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள சென்னை கிரீன் பார்க் நட்சத்திர விடுதியில் கோலாகலமாக நடைபெற்றது.

Read More

யோலோ திரைப்பட விமர்சனம்

by by Sep 13, 2025 0

இது youtube யுகம். அதன் அடிப்படையிலேயே  படத்தின் நாயகன் தேவ் ஒரு youtube சேனல் நடத்தி வருகிறார். அதன் பெயர்தான் ‘யோலோ..!’

இவரது நோக்கமே இரவில் பேய் போல வேடமிட்டு தனியாக வருபவர்களை பயமுறுத்தி பிராங்க் பண்ணுவது. அப்படி வில்லனின் ஆசை நாயகியை பிராங்க் பண்ணப் போய் அவர் கோமாவில் விழுகிறார்.

இன்னொரு பக்கம் நாயகி தேவிகாவை பெண்பார்க்க வருபவர்கள் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதை தாங்கள்  அறிந்ததாக சொல்கிறார்கள். 

ஆனால் தேவிகா மறுக்க ஒரு கட்டத்தில் அவருக்கும் மேற்படி…

Read More

பாம் திரைப்பட விமர்சனம்

by by Sep 12, 2025 0

பெரும் தலைவர்களே தீர்க்க முடியாத தீண்டாமை பிரச்சினையை உயிரற்ற ஒரு பிணம் தீர்க்க முடியுமா..?

முடியும் என்றும் அது எப்படி முடிந்தது என்பதையும் சவாலான ஒரு கதையை வைத்துச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் விஷால் வெங்கட்.

தீண்டாமையின் ஊற்றுக்கண் எப்போதும் மனித வக்கிரகங்களின் அடிப்படையிலேயே நடக்கிறது. அதற்கு ஒரு ஆரம்ப புள்ளி தேவை. அப்படி ஒரு ஆரம்ப புள்ளியாக இதில் தெய்வ நம்பிக்கை அமைகிறது. 

ஒன்றுபட்டு ஒரே கிராமமாக இருந்த போது மலை மீது மயில் ஒன்று அகவல் எழுப்பி…

Read More

கடவுள் தந்த சரீரத்தின் பெருமையை பேசும் திரைப்படம் ‘சரீரம்..!’

by by Sep 12, 2025 0

உன்னதமான காதல் திரைப்படமாக உருவாகியுள்ள “சரீரம்” செப்டம்பர் 26 திரைக்கு வருகிறது !! 

G.V.P. PICTURES வழங்கும், இயக்குநர் G.V. பெருமாள் எழுதி, தயாரித்து, இயக்க, புதுமுகங்கள் தர்ஷன், சார்மி நடிப்பில், உன்னதமான காதல் திரைப்படமாக, கடவுள் தந்த சரீரத்தின் பெருமையை பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “சரீரம்”. இப்படம் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. 

கடவுள் ஒவ்வொருவருக்கும் தந்த தனிக் கொடை தான் சரீரம். அதன் அருமை யாருக்கும் புரிவதில்லை, தன்…

Read More

குமார சம்பவம் திரைப்பட விமர்சனம்

by by Sep 12, 2025 0

சமுதாயத்துக்காகப் போராடும் சமூக போராளியான குமரவேல் இறப்பதிலிருந்து கதை தொடங்குகிறது.

அவரைக் கொன்றது யார் என்கிற கோணத்தில் போலீஸ் விசாரணையை தொடங்க குமரவேல் குடியிருந்த வீட்டு உரிமையாளர் மகன் (நாயகன்) குமரன் தங்கராஜன் விசாரணைக்கு உட்படுகிறார். 

போலீஸ் விசாரணையில் அவர் சொல்லும் கதைகள்தான் பிளாஷ்பேக்காக விரிகின்றன. 

அதில் குமரவேலின் கதையும், குமரனின் கதையும் ஒரு சேர காட்சிப்படுத்தப்படுகின்றன. 

குமரவேல் ஒரு சமூக போராளி என்பதால் நிறைய சமூகவிரோதிகள் மற்றும் பணக்காரர்களின் பகைமையை சம்பாதித்து வைத்திருக்கிறார். அவர்கள் மேல் போலீஸ் கவனம் திரும்ப……

Read More

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நவ’ரசவாதி’ அர்ஜுன் தாஸ்..!

by by Sep 12, 2025 0

திரையில் முகத்தைப் பார்த்ததுமே கைத்தட்டலும் விசிலும் பறக்க வேண்டும் என்றால் அது மக்களிடம் அபிமானம் பெற்ற நடிகர்களுக்கு மட்டுமே சாத்தியம். அந்த சாத்தியத்தை சமீபகாலமாக தனதாக்கிக் கொண்டிருக்கிறார் அர்ஜுன் தாஸ்.

’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் எதிர்மறை பாத்திரத்தில் மிரட்டிய அர்ஜுன் தாஸ், பின்னர் நாயகனாகி போர்’, ‘ரசாவதி’, ‘அநீதி’யில் மிரட்டினார். அவை அனைத்துமே ஒவ்வொன்றும் வித்தியாசமான கதைகளைக் கொண்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்குப்பின் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் ‘தலை’ க்கே வில்லனாக வந்து…

Read More

பிளாக் மெயில் திரைப்பட விமர்சனம்

by by Sep 11, 2025 0

எல்லாக் குற்றங்களுக்கும் பின்னால் ஒரு இயலாமையான நியாயம் இருக்கும்.  அப்படி சூழ்நிலையால் பிணைக் கைதிகள் ஆகும் இருவர் என்ன வகையான குற்றச் செயல்களில் ஈடுபட்டார்கள், அதன் விளைவுகள் என்ன என்பதை பரபரப்பான திரில்லராகச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் மு.மாறன்.

சரக்கு வண்டி ஓட்டும் ஜி. வி.பிரகாஷூம்  மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்க்கும் தேஜு அஸ்வினியும் காதலிக்கிறார்கள். அதன் விளைவாக கர்ப்பம் தரிக்கிறார் தேஜு. இந்நிலையில் ஜி.வி ஓட்டிவந்த வாகனம் டெலிவரிக்கு இருந்த பொருளுடன் காணாமல் போக, அது…

Read More

காயல் திரைப்பட விமர்சனம்

by by Sep 11, 2025 0

கடலிலிருந்து பெருகி வந்த உபரி நீர் மீண்டும் கடலுக்குச் செல்லாமல் தங்கிவிடும் பரப்பை காயல் என்பார்கள். அந்த நீர் கடலைப் போல் அலைகளை எழுப்பி ஆர்ப்பரிக்காமல் அமைதியாக இருக்கும். 

அதனைப் போல ஒரு தேவையற்ற பிடிவாதத்தில் ஆர்ப்பரித்து இயல்பை இழந்த ஒரு குடும்பம் எப்படி உணர்ச்சிகள் அற்றுப் போகிறது என்பதைச் சொல்லும் படம் இது.

இதை எழுத்தாளர் தமயந்தி, தன் எழுத்துக்களுடன் இயக்கியிருப்பதிலும் கவனம் பெற்ற படமாக அமைகிறது. 

கடல் சார் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் நாயகன் லிங்கேஷ், ஒரு சமூகப்…

Read More

படையாண்ட மாவீரா படத்திற்கு மிகப்பெரிய பலம் இருக்கிறது..! – கவிப்பேரரசு வைரமுத்து

by by Sep 9, 2025 0

‘தமிழின உணர்வாளர்’ வ. கௌதமன் நடிக்கும் ‘படையாண்ட மாவீரா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு..!

‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தை செப்டம்பர் 19ம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் சுஷ்மா சினி ஆர்ட்ஸ் ஜி. என். அழகர் வெளியிடுகிறார்..!

இயக்குநரும், நடிகருமான வ. கௌதமன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தில் வ. கௌதமன், சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு, ‘பாகுபலி’ பிரபாகர், சரண்யா பொன்வண்ணன்,…

Read More

உருட்டு உருட்டு திரைப்பட விமர்சனம்

by by Sep 9, 2025 0

மீண்டும் ஒரு காதல் கதை. ஆனால், இதுவரை வந்த இந்திய சினிமாக்களில் பணக்காரர் வீட்டுப் பெண்ணை ஏழை வீட்டுப் பையன் காதலித்தால் என்ன ஆகும்? பெண்ணின் அப்பா அந்தக் காதலைப் பிரித்துவிடுவார்.

அதிலும் அந்தப் பையன் தாழ்த்தப்பட்ட சாதி என்றால்..? அவனைக் கொன்று விடுவார். அதுதானே..?

ஆனால், இந்திய சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலேயே புதிதாக ஒரு கிளைமாக்ஸைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாஸ்கர் சதாசிவம்.

ஆனால், இந்த புதுமையான முடிவைக் கொண்ட கதையை ரசிக்கும்படி எடுத்திருக்கிறாரா என்பதுதான் கேள்வி.

கஜேஷ் நாகேஷ்…

Read More