August 10, 2026
  • August 10, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

குட் நைட் திரைப்பட விமர்சனம்

by by May 11, 2023 0

ஈரைப் பேனாக்கி பேனை பெருமாள் ஆக்குவது என்று ஒரு சொல்லாடல் கிராமிய வழக்கில் உண்டு. அப்படி நாம் அன்றாடம் சந்திக்கும் ஒரு சாதாரணப் பிரச்சினையை வைத்து இரண்டரை மணி நேரம் நம்மை ரசிக்க வைத்து அதிசயத்தில் ஆழ்த்தி இருக்கிறார் இயக்குனர் விநாயக் சந்திரசேகரன்.

நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்த நாயகன் மணிகண்டனுக்கு ஒரு பிரச்சனை – வேறு ஒன்றும் இல்லை, தூங்கும்போது சத்தமாக குறட்டை விடுவதுதான். அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களை கூட அலற வைக்கும் அவரது குறட்டையால்…

Read More

இராவணகோட்டம் திரைப்பட விமர்சனம்

by by May 11, 2023 0

தென் தமிழகத்தில் சாதி மோதல்களுக்குக் குறைவில்லை. இதில் எந்த சாதி, மோதல்களுக்கு வழி வகுக்கிறது என்று பல்வேறு திரைப்படங்களில் அவரவர் நியாயங்களைச் சொல்லி வந்திருக்கிறார்கள்.

ஆனால் அது மட்டும்தான் தென் மாவட்டங்களில் பிரச்சனையா என்றால் ‘அது இல்லை – இன்னொரு பெரிய வில்லன் இருக்கிறான்’ என்று இந்தப் படத்தில் அடையாளம் காட்டுகிறார் இயக்குனர் விக்ரம் சுகுமாரன்.

தமிழகத்தின் வறட்சி மாவட்டமான ராமநாதபுர கிராமத்தில் நடக்கிறது கதை. அங்கே இருக்கும் இரண்டு சாதிப் பிரிவினருக்குள் மோதல் ஏதும் ஏற்பட்டு விடாமல்…

Read More

சிறுவன் சாமுவேல் திரைப்பட விமர்சனம்

by by May 9, 2023 0

வழக்கமாக நாம் பார்க்கும் வணிக ரீதியான படங்களில் இருந்து சற்றே வித்தியாசமான படம் இது. அதனால் வழக்கமான சினிமா ரசனையை கொஞ்சம் இறக்கி வைத்துவிட்டு இந்தப் படம் பார்க்கப் போக வேண்டும்.

இலக்கிய உலகில் சிறுவர்களுக்கு என்று இலக்கியம் படைக்க சிலர் உண்டு. ஆனால் குழந்தைகளுக்கான படம் எடுப்பது மிகவும் அரிதாகத்தான் இங்கே நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் ‘சாது ஃபெர்லிங்டன்’ இயக்கியிருக்கும் இந்தப் படம் முற்றிலும் சிறுவர்களுக்கான படம் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

Read More

தங்கர் பச்சானுக்கு மறுபிறவி தரும் படத்தைத் தயாரித்ததில் பெருமை – துரை வீரசக்தி

by by May 8, 2023 0

வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்து வரும் படம் , தங்கர் பச்சானின் “கருமேகங்கள் கலைகின்றன”. ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் உருவான இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆடல் பாடலுடன் சிறப்பாக நடைபெற்றது.

தயாரிப்பாளர் துரை வீரசக்தி பேசும்போது,

தங்கர் பச்சானுடன், நண்பராக, அண்ணனாக பல ஆண்டுகளாக இருக்கிறோம். ஒருமுறை இந்த கதையை தங்கர் பச்சான் கூறினார். #OMG படம் முடிந்ததும், இந்த படத்தை தயாரிக்கிறேன் என்றேன். இந்த படத்தை தயாரிக்க யாரும் முன்வர…

Read More

மாமன்னன் படத்துக்காக ‘இசைப்புயல்’ இசையில் ‘வைகைப் புயல்’ பாடிய பாடல்

by by May 8, 2023 0

ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்.’

கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

‘மாமன்னன்’ படத்திற்காக யுகபாரதி வரிகளில் உருவான ஒரு பாடலை, ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘வைகை புயல்’ வடிவேலு பாடியுள்ளார். இப்பாடல் விரைவில் வெளியாகும் என இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.

சில தினங்களுக்கு முன் ‘மாமன்னன்’ படத்தின்…

Read More

ஜவான் பட வெளியீடு தாமதம் ஏன்..? – ஷாருக் கான் விளக்கம்

by by May 8, 2023 0

‘பார்வையாளர்களுக்கு நேர்த்தியும், தரமும் மிக்க படைப்பை வழங்க படக்குழுவினருக்கு பொறுமையும், அதற்கான கால அவகாசமும் தேவை’ என ‘ஜவான்’ பட வெளியீட்டின் தாமதம் குறித்து அப்பட நாயகனான ஷாருக்கான் தெரிவித்திருக்கிறார்.

‘பதான்’ படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு ஷாருக் கான் பல விருதுகளை வென்ற இயக்குநரான அட்லீ இயக்கத்தில் தயாராகும் ‘ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் மூலம் ஷாருக்கான், பார்வையாளர்களை அதிரடியான பயணத்திற்கு அழைத்துச் செல்ல தயாராகிறார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான ‘ஜவான்’ படம் குறித்து,…

Read More

‘அழகிய கண்ணே’ படத்தின் ‘கண்மணியே…’ பாடல் வீடியோ

by by May 7, 2023 0

Read More

ஃபர்ஹானா இஸ்லாமியர்கள் கொண்டாடும் படமாக இருக்கும் – தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு

by by May 6, 2023 0

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, வரும் 12ம் தேதி வெளியாகும் ஃபர்ஹானா திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட படக்குழுவினர் பேசியதாவது…

எழுத்தாளர் மனுஷ்ய புத்ரன் பேசும்போது…

கிட்டதட்ட 5, 6 வாரங்களாக ஒவ்வொருவரும் என்னைத் தொடர்பு கொண்டு.. ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படத்தில் தானே நீங்கள் வசனம் எழுதுனீர்கள். அப்படம் வெளியாகிவிட்டது என்பார்கள். நெல்சன் எனக்கு சொல்லவே இல்லையே என்று பார்த்தால், அது வேறு…

Read More

ஜிவி பிரகாஷ் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் டியர் பட பணிகள் இறுதிக் கட்டத்தில்…

by by May 6, 2023 0

*ஜி வி பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து நடிக்கும் ‘டியர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.*

*’இசை அசுரன்’ ஜி. வி. பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷுடன் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் ‘டியர்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.*

‘செத்தும் ஆயிரம் பொன்’ எனும் திரைப்படத்தின் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘ டியர்’. இப்படத்தில் முதன்முறையாக ஜி. வி. பிரகாஷ் குமார்- நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து முக்கிய வேடங்களில்…

Read More

குலசாமி திரைப்பட விமர்சனம்

by by May 6, 2023 0

பாலியல் குற்றவாளிகளுக்கு சினிமாக்காரர்கள் தரும் தண்டனை மரண தண்டனை மட்டுமே. இதனை இன்னொரு முறை உரக்கச் சொல்லி இருக்கிறார் இயக்குநர் ‘குட்டிப்புலி’ ஷரவணஷக்தி.

ஆட்டோ ஓட்டுனராக வரும் நாயகன் விமலின் தங்கை கீர்த்தனா மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் எடுத்து, தான் பிறந்த கிராமத்திற்கு பெருமை சேர்க்கிறார். தொடர்ந்து அவரை மருத்துவராக விரும்பிய விமல் அதற்கு போதிய பணமின்றி தவிக்க அந்த கிராமத்து மக்களே சேர்ந்து விமலின் தங்கையை மருத்துவக் கல்லூரியில் சேர்க்கிறார்கள்.

இத்தனைப் பாடுபட்டு தங்கையை மருத்துவராக முயன்றும்…

Read More