August 10, 2026
  • August 10, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

மிஷன் சாப்டர் 1 திரைப்பட விமர்சனம்

by by Jan 14, 2024 0

தொடக்கத்தில் மறைந்த கேப்டனுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். தொடர்ந்து வரும் படத்தில் பாகிஸ்தான் தீவிரவாதி கதை உள்ளே வர இதுவும் ஒரு கேப்டன் கதைதான் என்று புரிந்து விடுகிறது.

ஒரு காஷ்மீரிய கிராமத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் உள்ளே புகுந்து இருப்பது தெரிய வருகிறது. அவர்கள் ஏதோ திட்டத்துடன் இந்தியாவுக்கு வந்திருப்பது புரிகிறது.

இங்கே மனைவியை இழந்த அருண் விஜய் தன் மகளின் உடல்நலப் பிரச்சனையை தீர்ப்பதற்காக லண்டனுக்கு போகிறார். அங்கே மருத்துவமனைக்கு பணம் புரட்டும் முயற்சியில் போலீஸில் சிக்கி சிறைக்கு…

Read More

சிங்கப்பூர் சலூன் படத்தில் என்னுடன் நடித்திருக்கும் மிகப்பெரிய நடிகர் யார் தெரியுமா – ஆர்.ஜே.பாலாஜி தரும் சர்ப்ரைஸ்

by by Jan 14, 2024 0

ஐசரி கே. கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தில் ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடிக்கிறார்.

எல்கேஜி மற்றும் மூக்குத்தி அம்மன்  படங்களுக்குப் பிறகு வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனலில் ஆர்.ஜே. பாலாஜியின் மூன்றாவது படம் இது. ஆனால் முந்தைய படங்களைப் போல் ஆர்.ஜே .பாலாஜியே இந்தப் படத்தை இயக்கவில்லை.

‘ரெளத்திரம்’, ‘இதற்குத்தானேஆசைப்பட்டாய் பாலகுமாரா’,‘காஷ்மோரா’, ‘ஜுங்கா’, ‘அன்பிற்கினியாள்’ ஆகிய படங்களை இயக்கிய கோகுல், ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தை இயக்கியிருக்கிறார்.

வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் இப்படத்தில் சத்யராஜ்,…

Read More

திறமைசாலிகளுக்கு சினிமா மேடை – நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய் நிகழ்ச்சி

by by Jan 13, 2024 0

  • திறமையானவர்களை நட்சத்திரங்களாக மின்ன வைக்க வருகிறது ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ நிகழ்ச்சி!
  • திறமைசாலிகளுக்கு பரிசு மட்டும் அல்ல சினிமா வாய்ப்பு பெற்றுக் கொடுத்து அங்கீகாரம் வழங்க வருகிறது ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’!
  • ’நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ நிகழ்ச்சியில் விளம்பர தூதரான நடிகை சினேகா

சோசியல் மீடியாவின் வளர்ச்சியால் இன்று பலரிடம் இருக்கும் திறமைகள் உலக அளவில் பிரபலமடைந்தாலும் அவர்களுக்கான சரியான வாய்ப்பு மட்டுமே எளிதாக கிடைப்பதில்லை. அப்படி ஒரு வாய்ப்பு அமைத்துக் கொடுக்கும் முயற்சியில் குளோப்…

Read More

கேப்டன் மில்லர் திரைப்பட விமர்சனம்

by by Jan 13, 2024 0

நாட்டுக்கு ராஜாவாக இருக்க முடியாதவர்கள் தன் பெயரை ராஜா என்று வைத்துக் கொண்டு திருப்திப்படுவது போல இந்தப் படத்தில் நாயகனாக வரும் தனுஷ், ராணுவத்தில் சேர்ந்த அன்றே தன்னை கேப்டனாக நிறுவிக் கொள்கிறார்.

சுதந்திரத்திற்கு முன்பான இந்தியாவில் நடக்கிறது கதை. அப்போதெல்லாம் ஒவ்வொரு இந்தியனுக்கும் வெள்ளைக்காரர்கள் மட்டும்தான் எதிரிகள் என்று நாம் நினைத்துக் கொண்டிருந்தால் அது தவறு. உள்நாட்டில் ராஜாக்களாக செயல்படும் ஜமீன்தார்கள்தான் ஒடுக்கப்பட்ட மக்களின் முதல் எதிரி என்கிறார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன்.

அப்படி சாதி ஏற்றத்தாழ்வால்…

Read More

மெரி கிறிஸ்துமஸ் திரைப்பட விமர்சனம்

by by Jan 12, 2024 0

ஒரு கிறிஸ்துமஸ் இரவுக்குள் நடந்து முடிகிற கதை. ஒரு லவ் கம் மர்டர் மிஸ்டரியான இந்தக் கதையை ஒரு துளி கூட நாம் யூகிக்க முடியாத அளவில் நகர்த்திச் சென்று ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன்.

‘இன்றைக்கு மும்பை என்று அழைக்கப்படும் ஊர், பழைய பம்பாய் என்று அழைக்கப்பட்ட காலகட்டம்’ என்று தொடங்கும் போதே நமக்குள் சுவாரஸ்யம் பற்றிக் கொள்கிறது.

இந்தி, தமிழ் இரண்டு மொழிகளிலும் தயாராகி இருக்கும் இந்தப் படத்தை இந்திக்கு ஒரு மாதிரியும் தமிழுக்கு…

Read More

பிதாமகன் விக்ரம் பாதிப்பில் மாமரம் படத்தில் நடித்துள்ளேன் – ஜெய் ஆகாஷ்

by by Jan 10, 2024 0

ஜெய் ஆகாஷ் தயாரித்து, கதையின் நாயகனாக நடித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி விரைவில் வெளியாகவுள்ள படம் ‘மாமரம்.’

இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவும், இதற்கு முன் அவர் நடிப்பில் வெளியான ‘ஜெய் விஜயம்’ படத்தின் வெற்றி குறித்து பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொள்கிற நிகழ்வும் இணைந்து சென்னை வடபழனி கமலா திரையரங்கில் ஜனவரி 8; 2024 அன்று நடந்தது.

நிகழ்வில் படத்தின் நாயகனும் இயக்குநருமான ஜெய் ஆகாஷ், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘காதல்’ சுகுமார், சிறப்பு…

Read More

மெரி கிறிஸ்துமஸ் படத்தில் நான் பேசிய இந்தி – விஜய் சேதுபதி

by by Jan 9, 2024 0

*மெரி கிறிஸ்துமஸ் பத்திரிகையாளர் சந்திப்பு*

பாலிவுட் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘மெரி கிறிஸ்மஸ்’. இதில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே, ராதிகா சரத்குமார், சண்முகராஜன், கவின் பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ப்ரீத்தம் இசையமைத்திருக்கிறார்.

தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ்…

Read More

என் படங்களிலேயே பிரமாண்ட பட்ஜெட் படம் மிஷன் ‘தான் – அருண் விஜய்

by by Jan 8, 2024 0

*’மிஷன்- சாப்டர்1′ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!*

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் விஜய் இயக்கத்தில் நடிகர்கள் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா விஜயன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘மிஷன் சாப்டர்1’. பொங்கல் பண்டிகை விடுமுறையை ஒட்டி இந்தப் படம் ஜனவரி 12 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பேசியதாவது, “இயக்குநர் விஜய் என்னுடைய வீட்டில் ஒருவர் போலதான். அவருடன் நான்…

Read More

ஹாலிவுட் தரத்தில் தமிழில் வெளிவரும் கில்லர் சூப்!

by by Jan 8, 2024 0

ரே, சொஞ்சிரியா போன்ற இந்தி திரைப்படங்களை இயக்கிய அபிஷேக் சௌபே தற்போது, “கில்லர் சூப்” என்ற இணைய தொடர் இயக்கி இருக்கிறார். இத்தொடர்,      

மைஞ்சூர் என்ற கற்பனை நகரத்தில் நிகழும் இக்கதையில் பல காதல் சாரம்சங்களை உள்ளடக்கி விறுவிறுப்பான திருப்புமுனைகளைக் கொண்டது. 

சேட்டனா கௌஷிக் மற்றும் ஹனி ட்ரெஹான் தயாரித்துள்ளனர். வரும் ஜனவரி 11ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் – இல் வெளியாகிறது. இதில் மனோஜ் பாஜ்பாய், கொங்கோனா சென்ஷர்மா, நாசர், சாயாஜி ஷிண்டே, லால், அன்புதாசன்,…

Read More

படம் தொடங்கியதில் இருந்து ஹனு-மான் டீமில் யாரும் செருப்பு போடவில்லை – SFF சக்திவேலன்

by by Jan 7, 2024 0

*ஹனு-மான் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!*

பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில், பிரம்மாண்ட பான் இந்தியப் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ஹனு-மான்.

இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் திரைப்பட யுனிவர்ஸின் முதல் படமாக உருவாகும் ஹனு-மான் படத்தின் கதை அடிப்படையில் “அஞ்சனாத்ரி” என்ற கற்பனை இடத்தில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. முழுக்க சிஜியில் உலகத்தரத்தில் இந்த ஃபேண்ட்ஸி உலகம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படம் பொங்கல் கொண்டாட்டமாக திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழுவினர்…

Read More