September 20, 2024
  • September 20, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • வருணின் அர்ப்பணிப்பு உண்மையிலேயே ஈர்க்கக்கூடியது” – இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்
February 28, 2024

வருணின் அர்ப்பணிப்பு உண்மையிலேயே ஈர்க்கக்கூடியது” – இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்

By 0 157 Views

பல்வேறு ஜானர்களை தடையின்றி ஒன்றிணைத்து, ஒவ்வொரு பிரேமிலும் தலைசிறந்த படைப்புகளை உருவாக்கும் திறனுக்காக புகழ்பெற்றவர் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். சினிமா உலகில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக  பார்வையாளர்களைக் கவர்ந்து, பாக்ஸ் ஆபிஸில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறவும் அவர் ஒருபோதும் தவறுவதில்லை. தற்போது அவர் இயக்கத்தில் வெளியாக இருக்கும் ‘ஜோஷ்வா இமை போல் காக்க’ திரைப்படம் ஒரு பரபரப்பான ஆக்‌ஷன்-பேக் படமாக அமைந்து சந்தேகத்திற்கு இடமின்றி பார்வையாளர்களைக் கவரும். இப்படம்  (மார்ச் 1, 2024) உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ள நிலையில், இந்த திரைப்படத்தை உருவாக்கிய அனுபவத்தை கெளதம் வாசுதேவ் மேனன் பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் கூறுகையில், “எந்தவொரு நடிகரையும் வைத்து ஆக்‌ஷன் படம் எடுப்பது என்பது பெரும்பாலும் சவாலான விஷயம். பாடி டபுள், துல்லியமான திட்டமிடல், ரிஸ்க் எனப் பல விஷயங்கள் ஆக்‌ஷன் படங்களை உருவாக்குவதில் உள்ளது.  இருப்பினும், வருணுடன் பணியாற்றுவது ஒரு இனிமையான அனுபவம். அவர் படப்பிடிப்பைத் தொடங்க ஆர்வமாக இருந்ததோடு, கதாபாத்திரத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் உறுதியாக இருந்தார். இந்த திரைப்படத்தில் ஆக்‌ஷன் முக்கிய பங்கு வகிக்கும் அதே வேளையில், கதையோட்டத்தில் எமோஷன் மற்றும் காதலும் பின்னிப்பிணைந்துள்ளது. வருண் கதையில் வரும் அனைத்து ஸ்டண்ட்களையும் பாடி டபுள் இல்லாமல் செய்தார். அவரது அர்ப்பணிப்பு உண்மையிலேயே ஈர்க்கக்கூடியதாக இருந்தது. வருண் தீவிரமான ஆக்‌ஷன் காட்சிகளுக்கு உயிர்கொடுத்திருக்க, ராஹேவின் கதாபாத்திரம் படத்தின் மையமாக இருக்கும். கிருஷ்ணா வில்லனாக நடிக்க சம்மதிப்பாரா என்று ஆரம்பத்தில் எங்களுக்கு சந்தேகம் இருந்தது. ஆனால், அவர் ஒத்துக்கொண்டதோடு, செட்டில் தனது அசத்தலான நடிப்பால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். ஸ்டண்ட் டீம் சிறப்பானப் பணியைச் செய்துள்ளார்கள். திரையரங்குகளில் அனைத்து பார்வையாளர்களுக்கும் சிறந்த சினிமா அனுபவத்தை இந்தப் படம் கொடுக்கும்”.

‘ஜோஷ்வா இமை போல் காக்க’ படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் எழுதி இயக்கி இருக்க, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி கே கணேஷ் படத்தைத் தயாரித்து இருக்கிறார். இந்த திரைப்படத்தில் ராஹே கதாநாயகியாக நடித்திருக்க, கிருஷ்ணா முதல் முறையாக வில்லனாக நடித்திருறார்.

தொழில்நுட்ப குழு:

ஒளிப்பதிவு: எஸ்ஆர் கதிர் ஐஎஸ்சி,
எடிட்டிங்: ஆண்டனி,
இசை: கார்த்திக்,
கலை இயக்குநர்: குமார் கங்கப்பன்,
ஆடைகள்: உத்தாரா மேனன்,
பாடல் வரிகள்: மதன் கார்க்கி, விவேக், விக்னேஷ் சிவன், சூப்பர் சுபு, கானா குணா,
ஆக்‌ஷன்: யானிக் பென்,
நிர்வாக தயாரிப்பாளர்: கே அஸ்வின் குமார்,
கலரிஸ்ட்: ஜி பாலாஜி,
ஒலி வடிவமைப்பு: சுரேன் ஜி & அழகியகூத்தன்,
ஒலிக்கலவை: சுரேன் ஜி.