
தேஜாவு திரைப்பட விமர்சனம்
இல்லாததை இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டிருக்கும் பல உளவியல் கதாபாத்திரங்களை நாம் படங்களில் பார்த்திருக்கிறோம். அப்படி ஒரு ஆரம்பம் இந்த படத்திலும் இருக்கிறது.

வாரியர் திரைப்பட விமர்சனம்
எந்த ஆக்ஷன் படத்திலும் இதுவரை நாயகர்கள் என்ன தொழிலை ஏற்றிருந்தார்களோ, அதே தொழிலுடன்தான் வில்லனை எதிர் கொண்டிருநதார்கள். ஆனால், இந்தப் படத்தில் மட்டும்தான் வில்லனை எதிர் கொள்ளவென்று தன் கல்வி, தொழில் எல்லாவரையும் மாற்றிக் கொள்கிறார் நாயகன். இந்த விஷயத்திலேயே இது பிற ஆக்ஷன் படங்களில் இருந்து வித்தியாசப்பட்டது என்று உணர்த்துகிறார் இயக்குனர் லிங்குசாமி.
டாக்டர் படிப்பை முடித்துவிட்டு ஹவுஸ் சர்ஜனாக பிராக்டிஸ் செய்யவென்று அம்மா நதியாவுடன் மதுரை வருகிறார் நாயகன் ராம் (பொத்தினேனி). மதுரை அரசு…
Read More
கார்கி திரைப்பட விமர்சனம்
எல்லோருக்குமே அவரவர்களின் அப்பாக்கள்தான் ஹீரோ. அப்பா எந்த தப்பும் செய்ய மாட்டார் என்பதுதான் அனைத்து குழந்தைகளின் கருத்தாகவும் இருக்கும். நமக்கு ஒன்று என்றால் வந்து நிற்பார் அப்பா… அவருக்கு ஒன்று என்றால் குழந்தைகள் எப்படி துடித்துப் போவோம்..?

மை டியர் பூதம் திரைப்பட விமர்சனம்
அலாவுதீன் அற்புத விளக்கு காலத்தில் இருந்து பூதங்கள் மனிதர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருவதாக இலக்கியங்களும் திரைப்படங்களும் சொல்லிக்கொண்டு வருகின்றன. அந்த வகையில் வந்திருக்கும் லேட்டஸ்ட் பூதம் தான் ‘ கர்க்கிமுகி ‘.
டைட்டிலையும் பூதத்தின் கதை இது என்பதையும் பார்த்தவுடன் இது சிறுவர்களுக்கான படம் என்பது புரிந்து போகும். ஒரு பூதத்துக்கும் சிறுவனுக்குமான பிணைப்புள்ள கதை இது. இப்படி சாதாரணமாக சொல்லிவிட்டால் இது சாதாரணமான கதையாகவே புரியும் ஆனால் அதற்கு முன்னும் பின்னுமாக சுவாரஸ்யத்தை நுழைத்து…
Read More
படைப்பாளன் திரைப்பட விமர்சனம்
இன்றைக்கு சினிமாத் துறையில் இருக்கும் பெரும் பிரச்சினையே கதைத் திருட்டுதான். ஒரு தாயைப் போல ஒரு கருவை உருவாக்கி அதைப் பல காலம் மனத்தில் தாங்கி அது திருடு போய் விடும்போது அந்தப் படைப்பாளனுக்கு எந்த விதமான வலியைத் தரும் என்பதுதான் கதையின் லைன்.
ஆனால், அதை ஒரு டாக்குமெண்டரி போல சொல்லாமல் ஒரு சஸ்பென்ஸ் ஹாரராகத் தந்திருக்கிறார் இயக்குனர் தியான் பிரபு.
இசிஆரில் ஆள் அரவம் இல்லாத இடங்களில் கட்டப்பட்டிருக்கும் விடுதிகளும், பங்களாக்களும் அவற்றில் யார் வசிக்கிறார்கள்?…
Read More
தோர் – லவ் அன்ட் தண்டர் திரைப்பட விமர்சனம்
வில்லன்களைக் கடவுள் அழிப்பதெல்லாம் லோக்கல் படங்கள் என்றால் தன் சொந்தப் பிரச்சினைக்காக கடவுள்களை ஆகாத வில்லன் கடவுள்களையே ஒவ்வொருவராக போட்டுத் தள்ளுவது ஹாலிவுட் ஸ்டைல்.
இதனால் வில்லனிடமிருந்து சக கடவுள்களையும், அவனிடம் சிக்கி இருக்கும் தன் பாதுகாப்பிலுள்ள அஸ்கார்டியன் குழந்தைகளையும் அந்தக் கடவுள்களில் ஒருவரான இடிக் கடவுள் தோர் காக்க முயல்வதுதான் இந்தப்பட லைன்.
இதை சீரியசாக சொன்னால் எங்கே ரொம்ப சீரியஸாக போய்விடுமோ என்று பயந்த (!) இயக்குனர் டைக்கா வைட்டிட்டி இந்த லைனைத் தன் சிக்னேச்சராகக்…
Read More
ஃபாரின் சரக்கு திரைப்பட விமர்சனம்
’ஃபாரின் சரக்கு’ என்ற தலைப்பை பார்த்ததும் நல்ல சரக்குள்ள படம் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது இல்லையா? உள்ளூர் சரக்கு அடிப்பவர்கள் கூட ஃபாரின் சரக்கு என்றால் நாக்கை சப்பு கொட்டிக் கொண்டு வந்து விடுவார்கள். அந்த ஃபாரின் சரக்கை எப்படி கடத்துகிறார்கள் என்ற கதை போலிருக்கிறது என்றுதான் தலைப்பை பார்த்ததும் நினைக்க தோன்றுகிறது.
ஆனால் படத்தில் மருந்துக்கு கூட சரக்கு வாசனை இல்லை. இவர்கள்’ பாரின் சரக்கு ‘ என்று சொல்வது கொடுமையான குற்றவாளியாக தேடப்படும்…
Read More
கிராண்மா திரைப்பட விமர்சனம்
வழக்கமாக தன்னுடைய டீச்சரை பார்த்தால்தான் எல்லோருக்கும் பயம் வரும். ஆனால் ஒரு டீச்சரே பயப்படுகிறார் என்றால் அது ஆவியை தவிர வேறு யாரால் முடியும்..?
மலைப்பாங்கான இடத்தில் மிக அழகான, பசுமையான மரங்கள் அடர்ந்திருக்கும் தன்னந்தனியான ஒரு வீட்டில் வக்கீல் பிரியாவாக நடித்திருக்கும் விமலா ராமன் தன் ஆறு வயது மகள் நிக்கியுடன் வசிக்கிறார்.
பிடிவாத குணம் கொண்ட பெண் நிக்கி.. (அந்த கேரக்டரில் தயாரிப்பாளர் ஜெயராஜின் மகள் பௌர்ணமி ராஜ் நடித்திருக்கிறாள்.) அவளுக்கு வீட்டிலேயே பாடம் சொல்லிக்…
Read More
யானை திரைப்பட விமர்சனம்
ராமேஸ்வரத்தையும், ராமநாதபுரத்தையும் பிரிக்கும் பாம்பன் பால கதை சொல்லி அங்கே பகை சொல்லக்கூடிய இரண்டு குடும்பங்களையும் காட்டுகிறார் இயக்குநர் ஹரி. அவ்வளவுதான் கதை. இதில் ஹீரோ யார் பக்கம் நிற்கிறாரோ அந்தப்பக்கம் வெல்லும் என்பது ராமாயண காலத்து நியாயம்.
யானை என்ற பெயர் பொதுப்பெயர்தான். சிங்கம் படத்தில் துரைசிங்கமே சிங்கமானது போல் இங்கே யானைத்துரை என்றெல்லாம் இல்லாதது ஆறுதல். ஆனால்,…
Read More
ராக்கெட்ரி திரைப்பட விமர்சனம்
எறும்பு நடக்கும்போது பேலன்ஸ் தவறினால் எந்த பழுதும் நிகழ்ந்து விடப் போவதில்லை. அதுவே யானையின் நடை இடறி விடும்போது அது எழுந்து கொள்வதற்கு பல காலம் ஆகலாம். மாதவனே இயக்கி நடித்திருக்கும் இந்தப்படம் சொல்ல வரும் செய்தி இதுதான்.
