June 22, 2026
  • June 22, 2026
Breaking News

Currently browsing விமர்சனம்

சாகுந்தலம் திரைப்பட விமர்சனம்

by by Apr 18, 2023 0

பான் இந்தியா சீசன் இந்திய திரைப்பட உலக உச்சந்தலையைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும் வேளையில் அந்த வரிசையில் வந்திருக்கும் இன்னொரு படம் இது.

புராண கால துஷ்யந்தன் சகுந்தலை காதலைச் சொன்ன சாகுந்தலம் காதல் காவியத்தை நவீன உத்திகளோடு இன்றைய இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் இயக்குனர் குணசேகரன் முயற்சித்திற்கும் படம் இது.

மாபெரும் சக்திகளை அடைய விசுவாமித்திரர் கடுந்தவம் புரிய ஆரம்பிக்க, அவர் வரம் வாங்கி விட்டால் எங்கே தன்னை மிஞ்சி…

Read More

சொப்பன சுந்தரி திரைப்பட விமர்சனம்

by by Apr 15, 2023 0

இந்தத் தலைப்பைக் கேட்டவுடனேயே கரகாட்டக்காரன் கவுண்டமணி – செந்தில் காமெடி நினைவுக்கு வந்து விடும். அதேபோல் இது ஒரு காமெடிப் படம் என்பதும் புரிந்து விடும்.

ஆனாலும் ஒரு மெசேஜுடன் இந்த காமெடிப் படத்தை சொல்லி இருப்பதால் இந்தப் பட இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ்க்கு பாராட்டுகளைத் தெரிவிக்கலாம்.

அது என்ன மெசேஜ்..?

“நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும்“ என்ற குறள் சொல்லும் விளக்கமான “பிறருடைய பொருளைத் தன்னுடையதாக்க நினைத்தால் அது குற்றச் செயலாகத்தான் முடியும்…” என்ற கருத்து…

Read More

ரிப்பப்பரி திரைப்பட விமர்சனம்

by by Apr 14, 2023 0

இரண்டு தடவையாவது படித்தால்தான் இந்த படத்தின் தலைப்பைப் படிக்கவே முடியும்- அதற்குப்பின்தான் அதைப் புரிந்து கொள்வது. ஒரு ஜாலியான படம் என்று வேண்டுமானால் இதற்கு பொருள் கொள்ளலாம்.

தமிழில் சமையலுக்கான யூடியூப் சேனல் நடத்தும் மாஸ்டர் மகேந்திரனும் நண்பர்களும் ஊருக்குள் செய்யும் லூட்டியில் ஆரம்பிக்கிறது படம். அந்த youtube மூலம் ஒரு ரசிகை கிடைக்க அவளையே காதலிக்க ஆரம்பிக்கிறார் மகேந்திரன்.

இன்னொரு பக்கம் மகேந்திரனின் நண்பர் ஒருவர் காதல் திருமணம் செய்து கொண்டு ஊரிலிருந்து வர, அங்கே அவர்…

Read More

முந்திரிக்காடு திரைப்பட விமர்சனம்

by by Apr 10, 2023 0

சாதிய சாயம் பூசிக் கொண்ட படங்கள் ஓடும் சாத்தியம் பெற்ற இன்றைய காலக் கட்டத்தில் இந்தப் போக்கு தொடங்குவதற்கு முன்பிருந்தே எடுக்கப்பட்டு வரும் படம் இது. இயக்குனர் மு. களஞ்சியம் மிகவும் போராடி முடித்து இப்போது வெளியிட்டு இருக்கிறார்.

முந்திரிக் காடு மண்டிக் கிடக்கும் தமிழக கிராமம் ஒன்றில் ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒரு இளைஞனும் பட்டியல் இன யுவதியும் காதலிக்க ஆதிக்க சாதியைச் சேர்ந்த இளைஞர்கள் அவர்களைத் துரத்திப் பிடித்து அந்தப் பெண்ணை கொடூரமாகக் கொலை…

Read More

ரேசர் திரைப்பட விமர்சனம்

by by Apr 5, 2023 0

எல்லா தலைமுறையிலும் அப்பாவுக்கும் மகனுக்கும் இருக்கும் முரண்தான் இந்தப் படத்தின் கதைக்களம்.

தன் விருப்பப்படி வாழ்க்கையை தேர்ந்தெடுத்து அதில் சாதனை படைக்க வேண்டும் என்பது மகனின் விருப்பம். ஆனால் தன் ஒரே மகன் விருப்பப்படி போய் வாழ்க்கையை இழந்து விடக்கூடாது என்று கவலைப்படுகிறார் தந்தை.

அப்படி என்ன ஆபத்தான லட்சியம் மகனுக்கு..?

சிறிய வயதிலிருந்து மோட்டார் சைக்கிள் பந்தய வீரனாக வேண்டும் என்பது அவனது ஆசை. அதனால் அவரின் உயிருக்கு ஆபத்து நேர்ந்து விடுமோ என்று அஞ்சும் தந்தை எல்லோரையும்…

Read More

விடுதலை திரைப்பட விமர்சனம்

by by Mar 31, 2023 0

சிறந்த இயக்குனருக்கான அடையாளம், இதுவரை நாம் பார்த்திருக்கும் சிறந்த படங்களை விஞ்சி இன்னொரு படத்தைப் படைப்பதுதான் என்றிருக்க, இயக்குனர் வெற்றிமாறனோ இன்னும் ஒரு படி மேலே போய், தான் படைத்த சிறந்த படங்களையே கூட இந்தப் படத்தில் விஞ்சி நிற்கிறார்.

களம் நமக்கு நன்றாகத் தெரிந்ததுதான். பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டின் கனிம வளங்களைச் சுரண்ட நம் மலைப் பகுதிகளைத் தங்கள் வசப்படுத்த நினைப்பதுவும், அதற்கு நம் அரசு இயந்திரமும் துணை போக, அப்படி நேர்ந்து விடாமல்…

Read More

பத்து தல திரைப்பட விமர்சனம்

by by Mar 30, 2023 0

கடந்த சில மாதங்களாகவே மிகவும்  எதிர்பார்ப்புக்குள்ளான படமாக இருந்தது இந்தப் படம். வெளியான படத்தின் டிரைலரும் பாடலும் அந்த எதிர்பார்ப்பை கூட்டுவதாகவே இருக்க, இப்போது படம் வெளியான நிலையில் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

சிம்புவின் இமேஜை அடுத்த கட்டத்துக்கு தூக்கிச் செல்லும் விதத்தில் இந்தப் படத்தின் கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் ஒபேலி என்.கிருஷ்ணா.

ஏஜிஆர் என்கிற சர்வ வல்லமை பொருந்திய தாதாவாக வருகிறார் சிம்பு. மணல் கடத்தல், பொறியியல் கல்லூரி என்று பெரிய பெரிய வேலைகளாக செய்து…

Read More

போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஆவணப்படப் போட்டி

by by Mar 27, 2023 0

சென்னை மாநகர காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களின் “Drive Against Drugs” போதைப் பொருளுக்கெதிரான விழிப்புணர்வு ஆவணப்படங்களுக்கான போட்டி மற்றும் சிறுவர்களுக்கான காமிக்ஸ் வெளியீட்டு விழா !! 

இன்றைய நம் சமூகத்தில் போதைப்பொருள் மிக முக்கியமான பிரச்சனையாக மாறியுள்ளது. சமூகத்தில் போதைப்பொருளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, மாணவர்களுக்காக பிரத்தியேகமாகக் குறும்பட போட்டி சென்னை மாநகர காவல்துறை சார்பில் நடத்தப்பட்டது. இப்போட்டியைத் திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தினார். 300க்கும் அதிகமான மாணவர்களின் குறும்படங்களிலிருந்து, நான்கு…

Read More

ஷூட் த குருவி திரைப்பட விமர்சனம்

by by Mar 19, 2023 0

டார்க் காமெடி ஜானரில் ஹாலிவுட்டிலேயே இவ்வளவு படங்கள் வந்திருக்கிறதா என்று திகைக்கும் அளவுக்குத் தமிழில் நிறைய படங்கள் வந்து விட்டன. அப்படிப்பட்ட வரிசையில் தன் படத்தையும் இணைத்துக் கொண்டார் இந்தப் பட இயக்குனர் மதிவாணன். 

மிகவும் எளிதான கதைதான். ஆனால் அதை அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளோடு சுவாரஸ்யப்படுத்திக் கொடுத்திருக்கிறார் அவர்.

குருவியை சுடுவதில் என்ன இருக்கிறது என்று தலைப்பைப் பார்த்து முடிவு செய்து கொள்ள வேண்டாம். குருவி என்பது பிரபல ரவுடி குருவி ராஜன். அஞ்சா நெஞ்சன் ஆக…

Read More

குடிமகான் திரைப்பட விமர்சனம்

by by Mar 17, 2023 0

இயல்பான கதைக் களத்தையும், புதிய நடிகர்களையும் வைத்துக் கொண்டு நிறைவான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் நாளைய இயக்குநர் சீசன் 6-ல் ரன்னர் அப் டைட்டில் வென்ற பிரகாஷ்.என்

அவரது திறமையை நம்பி சினாரியோ மீடியா ஒர்க்ஸ் சார்பில் எஸ்.சிவகுமார் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

படத்தில் சாந்தினி தமிழரசன், சுரேஷ் சக்கரவர்த்தி, நமோ நாராயணன் என்று நமக்கு அறிமுகமானவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள்தான். மற்றபடி நாயகனாக நடித்திருக்கும் விஜய் சிவன் உள்பட சேது ராமன், , ஜி.ஆர் கதிரவன்,…

Read More