May 17, 2024
  • May 17, 2024
Breaking News

Currently browsing விமர்சனம்

காலக்கூத்து விமர்சனம்

by by May 27, 2018 0

காலம் சிலரின் வாழ்வில் மட்டும் எப்படிக் கொடுமையாக நடந்து கொள்கிறது என்று சொல்ல வந்திருக்கிறார் இயக்குநர் எம்.நாகராஜன்.

சிறிய வயதிலேயே தன் பெற்றோரைப் பறிகொடுக்கும் பிரசன்னா, தன்னைப் போலவே தன் பிறந்த நாளில் அம்மாவைப் பறிகொடுக்கும் கலையரசனின் உற்ற நண்பனாகிறார். இந்த நட்பு அவர்கள் வாலிபம் வரை தொடர்கிறது. அப்பாவுடன் வாழ்ந்து வரும் கலையரசனும் தன் சகோதரன் போலவே பிரசன்னாவை நடத்தி வர, இருவருக்கும் காதலும் முளைக்கிறது.

பிரசன்னா சிருஷ்டி டாங்கேவையும், கலையரசன் சாய் தன்ஷிகாவையும் காதலிக்கிறார்கள். இதனிடையே…

Read More

ஒரு குப்பைக் கதை விமர்சனம்

by by May 25, 2018 0

ஒன்றுக்கும் உதவாத கதையை குப்பைக்கதை என்பார்கள். ஆனால், அதையே தலைப்பில் வைத்ததற்கு இயக்குநர் காளி ரங்கசாமிக்கு அபார தன்னம்பிக்கை இருந்திருக்க வேண்டும். அந்தக் கதையின் மேல் அவருக்கு இருக்கும் அசராத நம்பிக்கைதான் அந்த தைரியத்தை அவருக்குக் கொடுத்திருக்கிறது.

அப்படி என்ன கதை..?

சென்னையின் குப்பத்தில் தாயுடன் வசிக்கும் துப்புறவுத் தொழிலாளராக இருக்கும் தினேஷுக்குப் பெண் பார்க்கிறார்கள். அவரது பணியைக் காரணம் காட்டியே பெண் அமையாமல் போக, வெளியூரில் மனீஷா யாதவைப் பார்த்துப் பேசி முடிக்கிறார்கள். ஆனால், தினேஷ் ஒரு…

Read More

செயல் விமர்சனம்

by by May 19, 2018 0

‘வட சென்னை’யில் ஒரு ஆக்‌ஷன் கதை என்றால் உங்களுக்குள் குப்பையும், கூளமும் அடிதடி வெட்டுக் குத்துமான ஒரு கதை ஓடுகிறதா..?

ஆனால், இந்தப்படம் பார்த்தால் நீங்கள் நினைக்கும் எந்த வழக்கமான அம்சமும் அதில் இருக்காது. அத்துடன் வட சென்னை ஏரியாவை வைத்து இத்தனை டீசண்டான ஒரு ஆக்‌ஷன் கதையை எந்த இயக்குநரும் கொடுக்கவில்லை என்றே தோன்றுகிறது. அந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர் இயக்குநர் ரவி அப்புலு. (விஜய்யின் ஷாஜகான் இயக்குநர் இவர்தான்… நினைவிருக்கிறதா..?)

இந்தப் படத்தில் இவர் புதுமுக ஹீரோ…

Read More

காளி விமர்சனம்

by by May 19, 2018 0

வெற்றியைச் சென்றடையும் பாதைகளில் ஆளுக்கொரு ஃபார்முலா இருக்கிறது. இதில் விஜய் ஆண்டனியின் ஃபார்முலா, ‘அட’ தலைப்பு + அனைவரும் ரசிக்க முடிகிற எளிதான லைன் + அம்மா சென்டிமென்ட் + தொய்வில்லாத படத் தொகுப்பு என்பதாக இருக்கிறது. இந்தப் படத்தில் இவற்றுடன் ‘ஆட் ஆன் பேக்’காக காதலும், ஆக்‌ஷனும் சேர்ந்து கொண்டிருக்கின்றன..!

அமெரிக்காவில் மருத்துவராக இருக்கும் விஜய் ஆண்டனியின் அம்மாவுக்கு திடீரென்று சிறுநீரகம் பழுதுபட, பாசக்காரப் பிள்ளைக்குத் தாங்குமா..? தன் சிறுநீரகத்தைத் தர முன்வருகிறார். ஆனால்… அவரது…

Read More

நடிகையர் திலகம் விமர்சனம்

by by May 14, 2018 0

ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மற்றும் தெலுங்குப் படவுலகில் முடிசூடா ராணியாகத் திகழ்ந்து ‘நடிகையர் திலகம்’ என்றறியப்பட்ட நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு.

அவர் வாழ்க்கை முடிந்த எண்பதுகளின் தொடக்கத்தில் தொடங்கும் கதை. அப்போதுதான் பத்திரிகையில் சேர்ந்த சமந்தா, சாவித்ரியின் வாழ்வைக் கட்டுரையாக்கச் செய்யும் ஆய்வில் அப்பாவின் முகம் கூடத் தெரியாமல் அம்மாவின் அரவணைப்பில் ஒரு நடிப்பு விலாசம் பெற சாவித்ரி மேற்கொண்ட போராட்டம், அந்தப் போராடத்துக்குள் ஜெமினி கணேசனுடன் காதல் மலர்ந்து அவரைக் காதல்…

Read More

மெர்க்குரி விமர்சனம்

by by Apr 24, 2018 0

சைகை மொழியில் சத்தமாக ஒரு கருத்தை இந்தப்படத்தின் மூலம் சொல்ல முடிவெடுத்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்.

கதை என்னவோ இயல்பாக, பழைய பாதையில்தான் ஆரம்பிக்கிறது. நான்கு ஆணும், ஒரு பெண்ணும் நண்பர்கள் என்பது எண்பதுகளிலிருந்து சப்பிப்போட்ட பனங்கொட்டை லைன். அதிலும் அதில் ஒரு ஆண், ஒரு பெண்ணைக் காதலிப்பது அந்தப் பனங்கொட்டையை வெயிலில் காயவைத்ததைப் போன்றது.

இதில் இருக்கும் ஒரே சுவாரஸ்யம், அவர்கள் அனைவரும் காது கேளாத, வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளிகள் என்பதுதான். சனந்த், தீபக், சஷாங்க்,…

Read More

யாழ் திரைப்படம் – ஒரு விமர்சனப் பார்வை

by by Mar 19, 2018 0

‘யாழ்’ என்றதுமே இது இலங்கைத் தமிழரைப் பற்றிய பதிவு என்பது புலனாகிறது. அதுவும் ஒரு வகையில் உண்மைதான். ஈழப்போர் உச்சகட்டத்தை எட்டுவதற்கு முந்தைய காலக்கட்டத்தில் யாழ்ப்பாணத்தில் இரண்டு மணி நேரத்தில் மூன்று இடங்களில் ஆறு பேர் சந்திருக்கும் வாழ்க்கைப் பிரச்சினைகள்தான் களம்.

ஆனால், அது மட்டுமே கதையல்ல. கதையின் அடிநாதம், உலகெங்கும் போர் பூமியில் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் நிலக்கண்ணி வெடிகளைப் பற்றிய கவலை.

இந்தக் களத்தில் யாழ் நிலத்தில் பதித்து வைக்கப்பட்டிருக்கும்…

Read More

கேணி திரைப்பட விமர்சனம்

by by Mar 19, 2018 0

தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்குமிடையில் முல்லைப்பெரியாறு அணைக்கட்டுப் பிரச்சினை இருக்கிறதல்லவா..? இந்த நீர்ப்பங்கீட்டுப் பிரச்சினையின் மூலத்தைச் சுருக்கி அதுவே ஒரு கேணித் தண்ணீர்ப்பிரச்சினையாக இருந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனை செய்து பார்த்திருக்கிறார் இயக்குநர் எம்.ஏ.நிஷாத்.

கேரளத்துக்காரரான இவர் இயக்கினால் படம் கேரளாவுக்கு ஆதரவாகத்தான் இருக்கும் என்று நினைத்துவிட வேண்டாம். மனசாட்சியுள்ள மனிதரான நிஷாத் அப்படி ஒருதலைப்பட்சமாக நடந்து கொளாமல் ‘கேணி’யளவு ஈரமுடையவராகவே இருக்கிறார் இந்தப்படத்தில்.

படத்தின் கதை இதுதான். கேரள – தமிழ்நாட்டு எல்லையில் இருக்கும் கிராமத்தில் கணவரின்…

Read More

6 அத்தியாயம் பட(ங்களின்) விமர்சனம்

by by Mar 19, 2018 0

கடைசிப் பக்கம் கிழிந்த நாவலுக்கு ஒரு பரபரப்புண்டு… கிளர்ச்சியுண்டு…கடைசியில் என்னதான்  நடந்திருக்கும்..? என்கிற எதிர்பார்ப்பு அடங்கமறுக்கும் அலையாய் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும். இந்த உணர்வை அடிநாதமாக வைத்து ஒரு ‘ஆந்தாலஜி’ கேப்ஸ்யூலுக்குள் ஆறு கதைகளை… அதுவும் ‘ஹாரர்’களைப் படைத்திருக்கிறார்கள்.

உலகெங்கும் ‘ஆந்தாலஜி’ எங்கிற தொகுப்புத் திரை வடிவம் எதிர்பார்ப்பைவிட குறைவான வெற்றியையே தந்திருக்க, அதை வைத்து எப்படி வெற்றியடையலாம் என்ற நவீன சிந்தனையின் விளைவுதான் இந்த முயற்சி எனலாம்.

அதற்கத்தான் ஆறு கதைகளையும் அடுத்தடுத்து முழுமையாகச் சொல்லாமல் மேற்படி ‘கடைசிப்…

Read More