March 29, 2024
  • March 29, 2024
Breaking News
July 6, 2022

யானை திரைப்பட விமர்சனம்

By 0 351 Views

ஒரு கட்டத்தில் அண்ணன் மகள் அபிராமி காதலனுடன் ஓடிவிட, அதற்கு அருண் விஜய்தான் காரணம் என்று கூறி, மொத்த குடும்பமும் அவரை வீட்டைவிட்டு துரத்துகிறது. மகனோடு அம்மா ராதிகாவும் வெளியேறுகிறார். இதை அருண் விஜய்யே முன்பே செய்திருந்தால் கௌரவமாக இருந்திருக்கும்.

 

‘விசுக்’சென்று வீசப்படும் அரிவாள்கள், விர்ர்ர்ரென சீறும் கார்கள், பெற்றோர் மற்றும் காதலன் பேச்சை மீறாத காதலி, ஹீரோவின் அம்மா சென்டிமென்ட், குடும்பத்துக்காக எதையும் விட்டுக் கொடுக்கும் ஹீரோ என, பார்த்து பார்த்துப் புளித்தப் பழகிய அவரது அதே ஹரியின் அஸ்திரங்கள்தான் இதிலும்.

 

சமுத்திரக்கனி நடிப்பில் சொதப்பிய ஒரே படமாக இது இருக்கலாம். அவரை ஜாதி வெறியராக்கி இன்னும்… இன்னும் என்று ஷோல்டரைத் தூக்கி நிறுத்த வைத்து அவரது கைகள் இரண்டும் பறவையின் இறக்கைபோலவே தூக்கிக் கொண்டு நிற்கிறது. இதற்கும் ஒரு பூனையைக் கூட அடிக்கவில்லை அவர். சும்மா பில்ட் அப். அப்பா ராஜேஷை வீட்டுக்குள் வர விடாமல் வாசலில் வைத்தே அவர் உயிரை விட்ட விஷயம் நல்லவேளை அருண் விஜய்க்கு தெரியவில்லை. ஆனாலும் அண்ணன் செய்ததை அவர் மன்னித்து இருப்பார்… அதுவும் சமுத்திரக்கனி ஏவும் எதிர்ப்புகளுக்கு அருண் விஜய் ஆற்றலுடன் இல்லாமல் இருந்திருந்தால் எப்போதோ இறந்திருப்பார். அப்படியும் அருண் விஜய்க்கு அண்ணன் பாசம்… அந்தப் பாசத்தைக் குப்பையில் போட..!

ப்ரியா பவானி சங்கர் வழக்கமான ஹரி பட ஹீரோயினாக வந்து போகிறார். அவர் கிறிஸ்தவர் என்பது மட்டும் அடடே ஆச்சரியம்… 

அப்பா ராஜேஷ், அம்மா ராதிகா, அண்ணி ஐஸ்வர்யா, அண்ணன் போஸ் வெங்கட், மற்றொரு அண்ணன் சஞ்சீவ், அண்ணன் மகள் அம்மு அபிராமி என அனைவரும் செட் பிராபர்டீஸ்.

‘கேஜிஎஃப்’ ராமச் சந்திர ராஜுவுக்கு இரட்டையர் வேடம். கூடப்பிறந்தவன் இறந்து ஆறு வருடம் ஆகியும் அவர் அதே கோபத்துடன் அலைவதும், அவரது கோபம் குறையாமல் ஜெயபாலன் பார்த்துக் கொள்வதுமாக பகையை வளர்க்கும் இது போன்ற படங்கள் சமுதாயத்துக்கு துன்பம்தான்.

இந்த அடிதடிக் கதையில் யோகிபாபுவின் காமெடி பெரிய ஆறுதல். 

ஜி.வி.பிரகாஷ் இசையில், ‘உன் நினைப்பு உச்சந்தலைக்குள்ள ஓடுதடா’ பாடல் நன்று. பின்னணி இசையில் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிற இன்ஸ்ட்ருமென்டை எல்லாம் உருட்டுகிறார். கோபிநாத்தின் ஒளிப்பதிவை சும்மா சொல்லக்கூடாது. அட்டகாசம்..!

யானை – பாத்திரக் கடையில்..!