
இ மெயில் திரைப்பட விமர்சனம்

லால் சலாம் திரைப்படம் விமர்சனம்
ரஜினிக்கு காவி சாயம் பூசும் வேலைகள் கொஞ்ச காலமாகவே நடந்து கொண்டிருக்கிறது. அவருக்கு ஒரு காவி முகம் இருப்பதாகவும் பலரால் நம்பப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இப்படி ஒரு படம் வெளி வந்ததுதான் எல்லோருக்கும் ஆச்சரியத்தைத் தந்திருக்கிறது. காவிக்கு பதில் அவர் இதில் ஏற்றிருப்பது பச்சை நிறம்.
இப்படி ஒரு பாத்திரத்தில் நடிக்க ஒத்துக் கொண்டதில் ரஜினிகாந்துக்கும், இப்படி ஒரு பாத்திரத்தை அமைத்ததில் இயக்குனர் ஐஸ்வர்யாவுக்கும் செம ‘ தில் ‘ இருப்பதைக் கோடிட்டுக் காட்டியாக வேண்டும்.
இந்தப் படத்தில்…
Read More
லவ்வர் திரைப்பட விமர்சனம்
வில்லன்களோ வில்லங்கமோ இல்லாத காதல் உலகில் இல்லை. காதலை மையமாகக் கொண்ட… குறிப்பாக காதலர்களின் எண்ண ஓட்டத்தை அலசி இருக்கும் இந்தப் படத்திலும் ஒரு காதலுக்கு வில்லங்கமான ஒரு வில்லன் இருக்கிறார்.
அந்த வில்லன் வேறு யாரும் இல்லை காதலனேதான். காதலனின் குணாதிசயமே ஒரு காதலுக்கு வில்லனாகும் வகையில் திரைக்கதையை அமைத்து இன்றைய நாகரீக உலகுக்கான ஒரு காதல் கதையைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் பிரபு ராம் வயாஸ்.
மணிகண்டனும் கௌரிப்ரியாவும் பள்ளிப் பருவம் தொட்டு ஆறு வருடமாகக் காதலித்துக்…
Read More
வடக்குப்பட்டி ராமசாமி திரைப்பட விமர்சனம்
வழக்கமான சினிமாவில் இருக்கக்கூடிய வடக்குப்பட்டி, தெக்குப்பட்டி என்ற இரண்டு ஊர்கள். தெக்குப் பட்டி பற்றி பெரிய செய்தி சொல்லாமல் வடக்குப்பட்டியில் மட்டும் கதை நகர்கிறது.
எண்பதுகளில் கதை நடக்கிறது. அதற்கு முன்னால் 60களில் நடக்கும் ஒரு பிளாஷ் பேக் சொல்லப்படுகிறது. அதன்படி அந்த ஊரில் தெய்வம் இல்லாமல் போய் பௌர்ணமியில் மட்டும் தென்படும் ஒரு கொள்ளிவாய் பிசாசு ஊரை பீதிக்குள் வைத்திருக்கிறது.
சாமி பூத நம்பிக்கைகளில் ஊரே மூழ்கிக் கிடக்க, அங்கு வசிக்கும் ராமசாமி என்கிற சிறுவன் மட்டும்…
Read More
சிக்லெட்ஸ் திரைப்பட விமர்சனம்

மறக்குமா நெஞ்சம் திரைப்பட விமர்சனம்
96 படம் வெளிவந்து வெற்றி அடைந்தாலும் அடைந்தது, அதற்குப்பின் பல ரி-யூனியன் கதைகள் வந்துவிட்டன. ஆனாலும் அவை அலுக்கவில்லை என்பதன் காரணம் எல்லோருக்குள்ளும் இருக்கும் பள்ளிப் பருவ நினைவுகளைக் கிளறி விடுவதே ஆகும்.
இங்கே அப்படி ஒரு ரி – யூனியனை தந்திருக்கிறார் இயக்குனர் ராக்கோ யோகேந்திரன். ஆனால், இது வழக்கமான ரி-யூனியனாக இல்லாமல் அதற்கு ஒரு ஆச்சரியமான களத்தையும் கண்டுபிடித்து இருப்பதுதான் இந்த படத்தின் தனிச் சிறப்பு.
இதுவும் 90ஸ் கிட்ஸ் சம்பந்தப்பட்ட கதைதான். 2008 ஆம்…
Read More
ஜெய் விஜயம் திரைப்பட விமர்சனம்
உங்கள் வீட்டில் உள்ள அப்பா, மனைவி, தங்கை என்று எல்லா உறவுகளும் உங்களை ஏமாற்றுவதாக நீங்கள் ஒருநாள் உணர்ந்தால் என்ன ஆகும்..?
இதுதான் இந்த படத்துக்காக இயக்குனர் ஜெய சத்தீஸ்வரன் நாகேஸ்வரன் எடுத்துக் கொண்டிருக்கும் லைன்.
அப்படியான ஒரு நிலைதான் நாயகன் ஜெய் ஆகாஷுக்கு ஏற்படுகிறது. தன்னுடைய அப்பாவாக இருப்பவர் உண்மையான அப்பா தானா, மனைவி நிஜம்தானா, தங்கை எப்படிப்பட்டவள் என்றெல்லாம் புரிந்து கொள்ள முடியாத ஹலுசினேஷன் என்று சொல்லக்கூடிய பழைய நினைவுகளை மறந்த நிலையில் இருக்கும் அவர்…
Read More
தூக்கு துரை திரைப்பட விமர்சனம்
ஓடுகிற குதிரை மேல் பணம் கட்டி விட்டால் போதும், அது எப்படி ஓடினாலும் பரவாயில்லை என்கிற எண்ணத்தில் ரேசுக்கு பந்தயம் கட்டியது போன்ற முயற்சி.
அப்படி யோகி பாபுவை நாயகனாகக் காட்டிவிட்டால் படம் ஓஹோ என்று ஓடிவிடும் என்று கணக்குப் போட்டு இருக்கிறார் இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத்.
கிராமத்து விசேஷங்களுக்கு படம் காட்ட ஃபிலிம் சுருளுடன் வருபவர் யோகிபாபு. அப்படி கதை நடக்கும் கைலாசம் (கண்டிப்பாக நித்யானந்தா கிராமம் இல்லை) கிராமத்துக்கு வரும் யோகி பாபு அந்த ஊர்…
Read More
ப்ளூ ஸ்டார் திரைப்பட விமர்சனம்
திறமைக்கும், ‘தகுதி’க்கும் இடையில் நிலவும் ஏற்றத் தாழ்வு அரசியல்தான் கதைக்களம்.
அதை ஒரு 30 வருடங்கள் முன்னோக்கிப் புரட்டிப் பார்த்து நாம் அதிகம் அறிந்த / அறிந்திடாத அரக்கோணம் பகுதிகளில் வைத்துக் கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் எஸ்.ஜெயக்குமார்.
அங்கே, ஊருக்குள்ளும், காலனிக்குள்ளும் தலா ஒரு கிரிக்கெட் டீம் இருக்க, இருவருக்குள்ளும் நிலவும் பேதம் கிரிக்கெட்டிலும் எதிரொலிக்கிறது… அது மட்டும்தான் கதையா என்றால்… இல்லை, அதற்கு மேலும் நிலவும் அடுத்த அடுக்கின் பேதங்களையும் திறமையால் உடைக்க உரக்கச் சொல்கிறது…
Read More
சிங்கப்பூர் சலூன் திரைப்பட விமர்சனம்
“மயிரைக் கட்டி மலையை இழுப்பது…” என்பார்கள். அப்படி ஒரு முயற்சியை ஆர்.ஜே. பாலாஜியை வைத்து இயக்குனர் கோகுல் செய்திருக்கிறார்.
எதற்காக மலையைப் போய் மயிரில் கட்டி இழுக்க வேண்டும் என்றால், ‘வந்தால் மலை… போனால் …’ என்கிற காரணத்தினால்தான். ஆனாலும், இதில் இவர்கள் சொல்லியிருப்பது எதைக் கட்டி இழுத்தாலும் அர்ப்பணிப்பும், கொள்கையில் உறுதியும் இருந்தால் மலை வந்தே ஆகும் என்பதைத்தான்.
பால்ய பருவத்தில் மனதில் பதியும் ஆசைகள் காலத்துக்கும் மறக்க முடியாததாக இருக்கும். அப்படித் தங்கள் ஊரில் முடி…
Read More