June 22, 2026
  • June 22, 2026
Breaking News

Currently browsing விமர்சனம்

பணி பட விமர்சனம்

by by Nov 23, 2024 0

பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் இயக்கி நடித்திருக்கும் படம் என்பதே இந்தப் படத்துக்குக் கூடுதல் எதிர்பார்ப்பைக் கொடுத்திக்கிறது. நடித்தோமா சம்பாதித்தோமா என்றில்லாமல் இவருக்குள் இருக்கும் கலை ஆர்வம் இயக்குனராக வெளிப்பட்டிருக்கிறது இந்தப் படத்தில். 

கதை இதுதான்…

திருச்சூர் பகுதியில் ஜோஜு ஜார்ஜும் அவரது நண்பர்களும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு இருக்கின்றனர். அத்துடன் கட்டப்பஞ்சாயத்தும் அவர்களை முக்கியஸ்தர்களாக ஆக்கி இருக்கிறது. 

ஏரியாவில் புகழ் பெற்றவர்களாக இருந்தாலும் இவர்களது அத்து மீறிய காரியங்களால் நிறைய வழக்குகளும் இவர்கள் மீது உள்ளன….

Read More

நயன்தாரா : பியாண்ட் தி ஃபேரி டேல் (Nayanthara: Beyond the Fairy Tale ஆவணப் பட விமர்சனம்

by by Nov 19, 2024 0

நயன்தாரா சினிமாவில் நடிகையாக அறிமுகமானது, தமிழ் சினிமாவில் நுழைந்து சில தடைகளுக்குப் பிறகு முன்னணி நடிகையாக உயர்ந்ததோடு, அவரது காதல் திருமணத்தைப் பற்றி விவரிக்கும் வகையில் உருவாகி இருக்கிறது ’நயன்தாரா – பியாண்ட் தி ஃபேரி டேல்’(Nayanthara: Beyond the Fairy Tale – நயன்தாரா – தேவதைக் கதைக்கு அப்பால்) என்ற ஆவணப்படம்.

நயன்தாராவின் ஆவணப்படம் என்ற உடன் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது அவரது காதல் கதைகளை தான், ஆனால் இதில் அவர் தான் கடந்து…

Read More

கங்குவா திரைப்பட விமர்சனம்

by by Nov 15, 2024 0

இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான சூர்யாவை ஒரு பான் இந்திய ஸ்டாராக ஆக்கிவிட வேண்டும் என்ற முயற்சியில் கே.இ.ஞானவேல் ராஜாவும் சிறுத்தை சிவாவும் சேர்ந்து மிரட்டி இருக்கும் படம். 

1070 இல் ஆரம்பிக்கும் கதை 2024 இல் வந்து இப்போதைக்கு முற்றுப்பெறுகிறது.  அது எப்படி என்பதை இரு வேறு காலகட்ட சுவாரஸ்யத்துடன் திரைக்கதை அமைக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் சிவா.

தற்போதைய காலகட்டத்தில் கோவாவில் சூர்யா ஒரு பிளேபாயாகவும், காவல்துறை நேரடியாக பிடிக்க முடியாத குற்றவாளிகளை பிடித்து கொடுக்கும் Bounty…

Read More

பிரதர் திரைப்பட விமர்சனம்

by by Nov 3, 2024 0

அக்காவுக்கும், தம்பிக்குமான பாசக்கதை என்றொரு லைனை எடுத்துக் கொண்டு ‘கதை பண்ண’ ஆரம்பித்திருக்கிறார் இயக்குனர் எம். ராஜேஷ்.

ஆனால் அது மட்டும்தான் கதையா என்று கேட்க முடியாத அளவுக்கு ஏகப்பட்ட பின்னல்களை உள்ளே வைத்து அவரும் குழம்பி நம்மையும் குழப்பி இருக்கிறார். 

ஜெயம் ரவி என்றவுடனேயே நம் மனதுக்குள் வருவது ‘தங்கமான பிள்ளை’ என்பதுதான். ஆனால், இந்தப் படத்தில் அவருக்கு உருப்படாத பிள்ளை (வழக்கமான எம். ராஜேஷ் பிராண்டிலேயே…) என்ற ஒரு கேரக்டரைசேஷன் கொடுத்திருக்கிறார் இயக்குனர். அதுவே ஒட்டவில்லை. 

இருக்கிற…

Read More

லக்கி பாஸ்கர் திரைப்பட விமர்சனம்

by by Nov 3, 2024 0

ஏதோ நகைச்சுவைப் படம் போல் ஒரு தலைப்பைக் கொண்டிருந்தாலும் படு சீரியஸான கதை சொல்லும் படம் இது. அதிலும் பணப்பரிவர்த்தனை தொடர்பாக என்னென்ன தந்திரங்கள், தில்லுமுல்லுகள் இருக்கின்றனவோ அத்தனையையும் பிட்டுப் பிட்டு வைக்கிற படமாக இதை நமக்கு அளித்திருக்கிறார் இயக்குனர் வெங்கி அட்லூரி.

சமீபகாலத் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் துல்கர் சல்மானை இந்தப் படம் உண்மையிலேயே லக்கி பாஸ்கர் ஆகியிருக்கிறது எனலாம். 

எண்பதுகளில் இருந்து 90கள் வரை பயணப்படும் இந்தக் கதையில் துல்கர் சல்மான் வங்கி காசாளராக வேலை…

Read More

அமரன் திரைப்பட விமர்சனம்

by by Nov 3, 2024 0

விவசாயத்தின பெருமையைச் சொல்ல, “அவர்கள் சேற்றில் கை வைக்கவில்லை என்றால் நாம் சோற்றில் கை வைக்க முடியாது என்பார்கள். அதேபோல் ராணுவத்தின் பெருமையை சொல்ல, “அவர்கள் கண் விழித்து நாட்டைக் காக்க வில்லை என்றால் நாம் நிம்மதியாக கண் மூடி தூங்க முடியாது…” எனலாம்.

அந்த வகையில் தீவிரவாதிகள் இடம் இருந்து நாட்டை காப்பாற்ற இன்னுயிரை நீ்த்து இந்தியாவின் உயரிய அசோக் சக்ரா விருது பெற்ற மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை வைத்து பயோபிக்காக இந்தப்…

Read More

ஆலன் திரைப்பட விமர்சனம்

by by Oct 19, 2024 0

ஒவ்வொருவரின் வாழ்க்கைப் பயணமும் ஒவ்வொரு விதமானது. அதில் சிலரது வாழ்க்கைப் பயணம் வினோதங்கள் நிறைந்தது. அப்படி தியாகு என்ற மனிதனின் வாழ்க்கை வினோதங்களை நமக்குக் கடத்துகிறார் இயக்குனர் ஆர்.சிவா. 

சந்தோஷமான மலை கிராமத்து வாழ்க்கையில் சித்தப்பாக்களின் சூழ்ச்சியால் தன் பெற்றோரை சிறுவயதிலேயே இழந்து விடும் தியாகு சென்னையில் ஒரு மேன்ஷன் உரிமையாளர் வசம் ஒப்படைக்கப்படுகிறார். அங்கே இருக்கப் பிடிக்காமல் வாழ்வில் அமைதி தேடி காசிக்கு செல்கிறார்.

அவர் மனதில் எதிரொலித்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயம், வாழ்க்கையின் அனுபவங்களை மற்றவர்…

Read More

சார் திரைப்பட விமர்சனம்

by by Oct 17, 2024 0

சினிமாவுக்கு வாத்தியார் பெருமை சேர்த்தது ஒரு காலம். இது வாத்தியார்களைப் பெருமைப்படுத்தும் சினிமாப் படம்.

எல்லோருக்கும் கல்வி சென்று சேர வேண்டும் என்கிற அடிப்படையில் கிராமப்புறங்களில் பணி புரியும் வாத்தியார்களின் பங்கு எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை வலியுடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர் போஸ் வெங்கட்.

அத்துடன் கல்வி போதித்து அறியாமையைப் போக்குவது என்பது ஒரு தலைமுறையில் சாத்தியப்படக்கக்கூடிய விஷயம் அல்ல என்பதையும் மூன்று தலைமுறைக் கதை களாகச் சொல்லி ஆழமாக உணர்த்தியும் இருக்கிறார்.

ஆண்டான்களின் அடிமைகளாக இருக்கும் தாழ்த்தப்பட்டவர்களை…

Read More

ஆர்யமாலா திரைப்பட விமர்சனம்

by by Oct 16, 2024 0

சினிமா வரலாற்றில் இயக்குனர் யார் என்பது தெரியாமலேயே வெளிவந்திருக்கும் படம் இது. அதற்குக் காரணம் அவர் பாதியிலேயே இந்தப் படத்திலிருந்து விலகி விட்டாராம்.

அந்தக் கதை என்னவென்று நமக்குத் தெரியாது. எனவே, படத்தின் கதையைப் பார்க்கலாம்.

இதுவும் ஒரு காதல் கதைதான், ஆனால், வழக்கமான காதல் கதைகளில் இருந்து வித்தியாசப்பட்டது. காதலுக்கு வித்தியாசமான வில்லனாக இதில் காதலி பருவமடையாத விஷயத்தை வைத்திருக்கிறார் அந்தப் பெயர் தெரியாத இயக்குனர்.

அதாவது நாயகி மனிஷா ஜித் பருவமடையாமலேயே இருக்கிறார். அவர் தங்கையே ஒரு…

Read More

பிளாக் திரைப்பட விமர்சனம்

by by Oct 12, 2024 0

60 வருடங்களுக்கு ஒரு முறை நிலவு பூமிக்கு அருகில் வருவதால் நிகழும் ‘சூப்பர் மூன்’ என்கிற இயற்கை அதிசயத்தையும், நவீன அறிவியலின் இயற்பியல் தத்துவங்களையும் வைத்து ஒரு சிக்கலான கதையை எழுதி, அதை சுலபமாகப் புரியவும், சுவாரசியமாகத் தரவும் முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் கே.ஜி.பாலசுப்ரமணி.

1964 ஆம் வருடம் ஒரு சூப்பர் மூன் நிகழ்வு நடக்க, அப்போது விவேக் பிரசன்னாவைச சுற்றி ஒரு சம்பவம் நடைபெறுகிறது. இப்போது இந்த 2024 ஆம் வருடம் அதேபோன்ற ஒரு சூப்பர்…

Read More