May 4, 2024
  • May 4, 2024
Breaking News

Currently browsing விமர்சனம்

எண்ணித் துணிக திரைப்பட விமர்சனம்

by by Aug 5, 2022 0

இன்டர்நேஷனல் மாஃபியாக்களிடம் ஏற்படும் பிரச்சனை எளிய மனிதர்களின் வாழ்க்கையில் வந்து விளையாட, தன் வாழ்க்கை பாதிக்கப்பட்ட எளிய மனிதன் அதனை எப்படி எதிர்கொள்கிறான் அல்லது எதிரியைக் கொல்கிறான் என்பது கதை.

இலகுவான மற்றும் காதல் நாயகனாக வேடங்களை ஏற்ற ஜெய்க்கு இந்தப் படம் முழுமையான ஆக்ஷன் ஹீரோ அந்தஸ்தைக் கொடுத்து இருக்கிறது.

ஆனால் ஒரு ஆக்ஷன் ஹீரோவின் படம் என்றால் அவனுடைய அறிமுகமே அதிபுதிரியாக இருக்கும். இதில் அவர் ஒரு எளிய மனிதன் என்று காட்டுவதற்காக இயல்பான ஒரு…

Read More

பொய்க்கால் குதிரை திரைப்பட விமர்சனம்

by by Aug 5, 2022 0

காலத்தால் வஞ்சிக்கப்பட்ட ஒரு மனிதன் எப்படி ஆற்றலால் தன் வாழ்வை தக்க வைத்துக் கொள்கிறான் என்பது கதையின் மையப்புள்ளி. அதை ஒரு சஸ்பென்ஸ் திரில்லராகத் தந்திருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார்

கதையின் நாயகனாக வரும் பிரபுதேவாவின் மூலதனமே அவரது கால்கள்தான் என்பது உலகுக்கு தெரியும். ஆனால் அவரை ஒற்றைக் காலுடன் வாழ்பவராகக் காட்டுவதற்கு இயக்குனருக்கு எப்படித்தான் மனது வந்ததோ? விபத்தில் ஒரு காலை இழந்த பிரபுதேவா தன் ஒற்றைக் காலுடன் வாழ்ந்து வர அவரது வாழ்க்கையின் பிடிப்பாக…

Read More

லெஜண்ட் ‘ சரவணனுக்கு ஒரு கடித விமர்சனம்…

by by Aug 1, 2022 0

நீங்க டாம் குரூஸா இல்ல டாம் அண்ட் ஜெர்ரியா..?

சரவணன் அண்ணாச்சி… வணக்கம்… வாழ்த்துக்கள்..! நான் உங்க லெஜண்ட் படம் பார்த்தேன். அந்த ஆர்வம் தாள மாட்டாமதான் இந்தக் கடிதத்தை எழுதறேன்…

நீங்க ஜெயிச்சிட்டீங்க… உங்க கனவை… ஆசையை… பெரிய திரையில்… உங்க பாணியிலேயே சொல்லப்போனா பிரம்மாண்டமாய்… அதுவும் உலகம் முழுக்க கொண்டு போய் சேர்த்ததில நீங்க ஜெயிச்சிட்டீங்க…

அதே மாதிரி எங்க எதிர்பார்ப்பையும் பூர்த்தி செஞ்சிட்டீங்க… அதாவது உங்களுடைய விளம்பர படங்கள்ள உங்கள ஹீரோவா பார்த்து, அடுத்து உங்க…

Read More

குலு குலு திரைப்பட விமர்சனம்

by by Jul 31, 2022 0

சந்தானம் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்து விட்டாலும் 50/50 என்ற அளவில்தான் அவர் ஹீரோயிஸத்தையும், நகைச்சுவையையும் கலந்து கொடுத்து கொண்டு இருந்தார். ஆனால், இதுவரை சந்தானம் நடித்த படங்களிலேயே இவ்வளவு சீரியஸான ஒரு படத்தை நாம் பார்த்ததில்லை.

 
ஒரு உலக அரசியல் பேசும் கனமான படம் இது. மொழி தெரியாதவர்களின் அவஸ்தையையும், ஒரு மொழி அழிக்கப்பட்டால்…

Read More

விக்ராந்த் ரோனா திரைப்பட விமர்சனம்

by by Jul 30, 2022 0

இன்றைக்கு பெட்ரோல் விலை நூறு ரூபாயைத் தாண்டி விட்டது. ஆனால், அதுவே ஆறு ரூபாய்க்கு விற்ற காலத்தில் நடக்கிற கதை என்கிறார்கள். அதை ஒரு ஃபேன்டஸி திரில்லராகக் கொடுத்திருக்கிறார் எழுதி இயக்கி இருக்கும் ‘அனுப் பண்டாரி’.

கம்ரூட் என்ற மலை கிராமத்தை நமக்கு அறிமுகப்படுத்தும்போதே கிலி தொற்றிக் கொள்கிறது. அங்கே காரில் வரும் தாயையும் அவள் குழந்தையையும் ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி கொல்வதுடன் படம் தொடங்குகிறது.

அந்தக் கிராமத்திலுள்ள வீட்டில்தான் தன் மகளின் கல்யாணத்தை நடத்துவேன் என்று…

Read More

ஜோதி திரைப்பட விமர்சனம்

by by Jul 26, 2022 0

ஒரு ஆணின் கோபத்தை விட ஒரு பெண்ணின் அமைதி ஆபத்தானது என்பதுதான் படத்தின் கரு. அதன் மீது ஒரு உருக்கமான கதையைப் பின்னி ஜோதியாக ஒளி வீச வைத்திருக்கிறார் இயக்குனர் ஏவி. கிருஷ்ண பரமாத்மா. 

படத்தில் முன்னிலை வகிக்கிறார் கதாநாயகி  அருள்ஜோதியாக நடித்திருக்கும் நடிகை ஷீலா ராஜ்குமார்.

படத்தின் ஆரம்பத்தில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அவரை அவசர ஆபரேஷன் காரணமாக தனியே விட்டுவிட்டு போகிறார் டாக்டரான அவரது கணவர் (ராட்சசன்) சரவணன். அப்போது என்று பார்த்து டிவியில் குழந்தைகள்…

Read More

மஹா வீர்யர் திரைப்பட விமர்சனம்

by by Jul 24, 2022 0

தமிழில் விஜய் சேதுபதியைப் போல் மலையாளத்தில் நிவின் பாலி. நல்ல  கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் நல்ல கதைகளைத் திரைப்படமாகத் தயாரிப்பதிலும் இருவரும் முன்னிலை வகிக்கிறார்கள்.

அந்தவகையில் நிவின் பாலி தயாரிப்பில் வந்திருக்கும் மலையாளப்படம் மஹா வீர்யர். இதில் தலைப்பில் இருக்கும் மஹா வீர்யராக  நிவின்பாலியே நடித்திருக்கிறார். ஆனால் அவர்தான் கதாநாயகனா என்றால் இல்லை.

கேரளத்தின் புகழ்பெற்ற எழுத்தாளரான எம்.முகுந்தனின் கதையை வைத்து  எடுக்கப்பட்டிருக்கும் இப்படம், இருவேறு காலகட்டங்களை இணைக்கும் டைம் டிராவல் கதையாகவும், அதே நேரத்தில் சந்தர்ப்ப சாட்சியங்களை…

Read More

பொய்க்கால் குதிரையில் ‘அந்த மாதிரி’ மேட்டர்கள் இல்லையாம் – சொல்கிறார் சந்தோஷ் பி ஜெயக்குமார்

by by Jul 24, 2022 0

“ஹர ஹர மகாதேவகி’ இருட்டு அறையில் முரட்டு குத்து’ போன்ற அடல்ட் படங்களிலிருந்து விலகி, இயல்பாக இயக்கியிருக்கும் திரைப்படம் தான் பொய்க்கால் குதிரை” என படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.

டார்க் ரூம் பிக்சர்ஸ் மற்றும் மினி ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘பொய்க்கால் குதிரை’. ‘நடனப்புயல்’ பிரபுதேவா கதையின்…

Read More

சிவி 2 திரைப்பட விமர்சனம்

by by Jul 23, 2022 0

2007- ம் ஆண்டு வெளியான சிவி படத்தின் தொடர்ச்சிதான் இந்த சிவி 2.

கடந்த படத்தில் நந்தினி தன்னைக் கொன்றவர்களை பழி வாங்கியது போல் இதில் தன்னை தேடி வந்தவர்களை பழி தீர்க்கும் கதை. இதை ஒரு திரில்லர் ஹாரராக எழுதி இயக்கியிருக்கிறார் கே.ஆர்.செந்தில்நாதன்.

இந்தக் கதைக்குள் சமூக வலைத்தளங்கள் எப்படி மக்களை ஏமாற்றுகிறது என்ற மெசேஜையும் உள்ளே வைத்துச் சொல்லி இருக்கிறார் அவர்.

விஸ் காம்  மாணவ மாணவிகள் ஒன்பது பேர் காணாமல் போனதாக புறநகர் காவல் நிலையத்தில்…

Read More

மஹா திரைப்பட விமர்சனம்

by by Jul 23, 2022 0

ஒரு முன்னணி ஹீரோ எவ்வளவு வயதானாலும் எத்தனை படங்களில் வேண்டுமானாலும் நடித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் ஒரு கதாநாயகி, கதாநாயகியாகவே வாழும் காலம் சினிமாவில் மிகக் குறைவுதான். இதில் விதிவிலக்காக சில கதாநாயகிகள் மட்டும் காலங்கள் போனாலும், களை இழக்காமல் தங்கள் இடத்தை தக்க வைத்துக் கொள்கிறார்கள்.

அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானாலும் கதாநாயகியாக பல இந்திய மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கும் ஹன்சிகா மோத்வானி இந்த மஹா படத்தின் மூலம் தன்னுடைய அரை சதத்தை நிறைவு செய்கிறார்.

தன்னுடைய…

Read More