April 23, 2024
  • April 23, 2024
Breaking News

Currently browsing விமர்சனம்

கேப்டன் திரைப்பட விமர்சனம்

by by Sep 8, 2022 0

இதுவரை வந்திருக்கும் ராணுவம் சம்பந்தப்பட்ட படங்கள் பெரும்பாலும் எதிரி நாட்டிடம் இருந்து நம் நாட்டைக் காப்பாற்றுவதாக இருக்கும்.

ஆனால் இந்தப் படத்தில் உள்நாட்டுக்குள்ளேயே அச்சுறுத்தலுக்கு ஆளாக்கும் அசாதாரண சூழ்நிலையை ராணுவம் சம்பந்தப்பட்டு தீர்க்கும் கதையை சொல்லி இருக்கிறார் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன்.

தமிழ் படங்களில் ஹாலிவுட் படங்களைப் போன்ற கதையம்சம் கொண்ட ஜாம்பி, விண்வெளி சாகசம் உள்ளிட்ட கதைகளைத் தந்த அவர் இந்தப் படத்தில் ஏலியன் போன்ற வினோதமான மிருகம் ஒன்றை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.

சிக்கிம் பகுதியில் கண்டறியப்படும் அந்த…

Read More

கோப்ரா திரைப்பட விமர்சனம்

by by Aug 31, 2022 0

சீயான் விக்ரமிடம் கால்ஷீட் வாங்க வேண்டுமென்றால் “உங்களுக்கு இந்தப் படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கெட்டப்புகள் இருக்கின்றன…” என்று சொன்னால் போதும். 

இந்த உண்மையைப் புரிந்து கொண்ட இயக்குனர் அஜய் ஞானமுத்து தசாவதாரம் கமலுக்கு அடுத்தபடியாக கிட்டத்தட்ட ஆறு ஏழு கெட்டப்புகளில் மட்டுமல்லாது இன்னும் ஒரு சுவாரசியத்தையும் உள்ளே வைத்து அவருக்கு இந்த கோப்ரா கதையை சொல்லி இருப்பார் போலிருக்கிறது.

விக்ரமுக்கு அவ்வளவு நடிப்பு பசி. ஆனால் தசாவதாரம் போல ஒவ்வொரு கெட்டப்புக்கும் ஒரு காரணம், ஒரு கதை என்றில்லாமல்…

Read More

நட்சத்திரம் நகர்கிறது திரைப்பட விமர்சனம்

by by Aug 31, 2022 0

ஒரு காலத்தில் பெண்களின் உணர்வுகளை கூட ஆண்களே எழுதிக் கொண்டிருந்தார்கள். உழவனின் பிரச்சனைகளை, உட்கார்ந்து யோசிப்போர் சிந்தித்து எழுதிக் கொண்டிருந்தார்கள். காலம் மாறி பெண்ணின் கைக்கு பேனா வந்ததும், ஏர் பிடித்தவன் கையில் எழுதுகோல் வந்ததும் அவர்களின்  அனுபவங்கள் உதிரமும், உணர்ச்சியுமாக  நம்மிடம் பேசத் தொடங்கின.

அப்படித்தான் ஒடுக்கப்பட்டோரின் குரலை அவர்களே பதிவு செய்ய காலம் கனிந்து வந்திருக்கும் இன்றைய வேளையில் அதைச் செம்மையாக முன்னெடுத்து வருகிறார் பா.ரஞ்சித். அவர் இயக்கும் படங்களாகட்டும், தயாரிப்பில் உருவாகும் படங்களாகட்டும்…

Read More

ஜான் ஆகிய நான் திரைப்பட விமர்சனம்

by by Aug 27, 2022 0

தலைப்பைப் பார்த்ததும் இது ஏதோ அரசியல் படம் போல் இருக்கிறது என்று நினைத்து விட வேண்டாம். ரிவஞ்சுடன் கூடிய ஆக்சன்தான் இந்த படத்தின் களம்.

சமூகம் கண்டுகொள்ளாமல் விட்ட இளைஞர்களை சமூக விரோத கும்பல்கள் எப்படி பயன்படுத்திக் கொள்கின்றன என்று சொல்லி இருப்பதுடன் ஊடகங்களில் வெளியாகும் பொய் கூட எப்படி உண்மையாகி விடுகிறது என்பதையும் சொல்லி இருக்கிறார் இயக்குநர் அப்பு கே.சாமி. அவரே படத்தின் கதை திரைக்கதை வசனத்தை எழுதி இருப்பதுடன் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார்.

டார்க் லைட் புரொடக்‌ஷன்ஸ்…

Read More

டைரி திரைப்பட விமர்சனம்

by by Aug 27, 2022 0

இந்தப் படம் எந்த ஜேனரைச் சேர்ந்தது என்று எவராலும் கண்டுபிடிக்க முடியாது. துப்பறியும் கதையாக தொடங்கி ஹாரர் படமாக முடியும் இது போன்ற ஒரு படம் தமிழில் வந்ததில்லை என்று சொல்லலாம்.

அருள்நிதிக்கு என்றே கதைகளை மூளையை கசக்கி எழுதி இருப்பவர்களில் இந்தப் பட இயக்குனர் இன்னாசி பாண்டியன் ஒரு புது ரகம்.

அருள் நிதி அவரது வழக்கப்படியே உதவி ஆய்வாளராக வந்தாலும் முடிவு பெறாத கேஸ் ஒன்றை அவர் கையாள நேரும் போது அவருக்கு ஏற்படும் அமானுஷ்ய…

Read More

தமிழ் ராக்கர்ஸ் தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

by by Aug 20, 2022 0

சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது ஏவிஎம் தயாரித்திருக்கும் ‘ தமிழ் ராக்கர்ஸ்’ வெப் தொடர்.

தமிழ் சினிமாவில் யார் பெயரை யாருக்குத் தெரிகிறதோ இல்லையோ தமிழ் ராக்கர்ஸ் என்ற பெயர் எல்லோரும் அறிந்ததுதான். திரை மறைவில் செயல்படும் அவர்களைப் பற்றிய சில உண்மைகளுடன் கற்பனை கலந்து இயக்குனர் அறிவழகன் இயக்கி இருக்கும் தொடர் இது.
 
கதை இதுதான்…
 
விஜய்யை நினைவுபடுத்தும் தமிழ் சினிமாவின் உச்ச நடிகரின் 300 கோடி ரூபாயில் உருவான…

Read More

மேதகு 2 திரைப்பட விமர்சனம்

by by Aug 19, 2022 0

மேதகு முதல் பாகத்துக்கும் இந்த இரண்டாம் பாகத்துக்கும் தொழில்நுட்ப ரீதியாக தொடர்பு இல்லாவிட்டாலும் முதல் பாகததை நினைவு கூரவே செய்கிறோம்.

முதல் பாகத்தில் 50 களில் தமிழர்கள் அனுபவித்த துன்பங்கள், அதைப் பார்த்து வளர்ந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 21 வயதுக்கு முன்னான வாழ்க்கை சொல்லப்பட்டு இருந்தது. 

இந்த இரண்டாம் பாகத்தில் அடுத்த 12 வருட காலகட்டத்தில் என்ன நடந்தது என்பதைச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் இரா.கோ.யோகேந்திரன்.

எதற்காக தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் உருவானது..? அதன் நோக்கம்…

Read More

திருச்சிற்றம்பலம் திரைப்பட விமர்சனம்

by by Aug 19, 2022 0

பாத்திரங்களுக்கேற்ற பொருத்தமான நடிக, நடிகையர் அமைந்து விட்டாலே படம் பாதி வெற்றி அடைந்து விடும். அந்த வகையில் தாத்தா பாரதிராஜா அவரது மகன் பிரகாஷ்ராஜ், பேரன் தனுஷ் என்ற மூன்று தலைமுறை நடிகர்களைத் தேர்ந்தெடுத்ததிலேயே படத்தின் வெற்றி பாதி உறுதியாகி விட்டது.

அத்துடன் தனுஷின் தோழியாக நித்யா மேனனும், இடையில் வந்து போகும் இரண்டு கேமியோ பாத்திரங்களுக்கு ராஷி கண்ணா பிரியா பவானி சங்கர் வருவதும் படம் முழுவதும் பளிச் பளிச்சென்று நட்சத்திரங்கள் ஜொலிப்பாக ஆகி இருக்கிறது.

அதேபோல்…

Read More

ஜீவி 2 திரைப்பட விமர்சனம்

by by Aug 17, 2022 0

2019 ஆம் ஆண்டில் வெற்றி நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்ற திரைப்படம் ஜீவி.

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஆஹா ஓடிடியில் 19-ஆம் தேதி வெளியாகிறது.

ஜீவி முதல் பாகத்தின் கதை தொடர்பியல் விதியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும். எங்கோ யாருக்கோ நடக்கும் ஒரு நிகழ்வுகள் திரும்பவும், இன்னொருவருக்கு அதே போன்று நடக்கும் சம்பவத்திற்கும் தொடர்பு இருப்பதாகச் சொல்லப் பட்டிருக்கும்.

அதனைப்பற்றி தெரிந்து கொண்ட வெற்றி அதைத் தடுக்க முயற்சி செய்ய அதைத் தடுத்து நிறுத்தினாரா…

Read More

தம்பிராமையா வீட்டின் முன் முற்றுகையிடுவோம் – ஜீவி-2 விழா மேடையில் சீமான் எச்சரிக்கை

by by Aug 14, 2022 0

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜீவி-2. கடந்த 2௦19ல் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற ஜீவி படத்தின் இரண்டாம் பாகமாக அதன் தொடர்ச்சியாக இது உருவாகி உள்ளது.. முதல் பாகத்தை இயக்கிய விஜே கோபிநாத் இந்த இரண்டாம் பாகத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார்.

நாயகன் வெற்றி, நாயகி அஸ்வினி சந்திரசேகர், ரோகிணி, மைம் கோபி, கருணாகரன் மற்றும் ரமா என முதல் பாகத்தில் இடம்பெற்ற அனைத்து முக்கிய…

Read More