September 14, 2025
  • September 14, 2025
Breaking News

Currently browsing விமர்சனம்

பயாஸ்கோப் திரைப்பட விமர்சனம்

by by Jan 2, 2025 0

பிரம்மாண்ட அரங்குகளுக்குள் இருந்த சினிமாவை கிராமங்களுக்குள் கொண்டு வந்தவர் பாரதிராஜா என்று சொல்வோம். ஆனால், இந்தப் பட இயக்குனர் ராச்குமார் சினிமாவை குடிசைத் தொழிலாகவே ஆக்கிவிட்டார்.

ஒரு மாமாங்கத்துக்கு முன்னால்… அதாவது 2011ல் இவர் அரும்பாடு பட்டுத் தயாரித்து இயக்கிய ‘ வெங்காயம் ‘ என்கிற படம் விமர்சன ரீதியாகப் பெரிதும் பாராட்டப்பட்டது. அந்தப் படத்தினால் கவரப்பட்ட இயக்குனர் சேரன் அதை வெளியிட பெரு முயற்சி எடுத்தார். 

வணிக ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் பல முனையில் இருந்தும் பாராட்டுப்…

Read More

கலன் திரைப்பட விமர்சனம்

by by Jan 1, 2025 0

வன்முறையை அடிநாதமாகக் கொண்ட படங்கள் என்றாலே ஒரு காலத்தில் மதுரையே களமாக இருந்தது. சமீப காலமாக வடசென்னை இந்தக் களத்தைப் பிடித்திருக்கிறது. 

இதிலிருந்து சற்று வித்தியாசப்படுத்தி சிவகங்கையில் நடக்கும் ஒரு வன்முறைக் கலாச்சாரப் படத்தை நியாயத்துக்கும் அநியாயத்துக்குமான போராட்டக் களமாக வைத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் வீர முருகன்.

அத்துடன் அடுத்த தலைமுறைக்கு மிகப்பெரிய ஆபத்தாக விளங்கும் போதை கலாச்சாரத்தையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்கிற செய்தியையும் முன்மொழிகிறார் அவர். 

சிவகங்கையில் தன் தம்பி அப்புகுட்டி மற்றும் மகன் யாசருடன் அன்பே…

Read More

ராஜா கிளி திரைப்பட விமர்சனம்

by by Dec 28, 2024 0

எப்போதுமே உண்மைக் கதைகளைத் தழுவி எடுக்கப்படும் படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வரிசையில் இந்த ராஜா கிளி படமும் அமைகிறது. 

நாம் நன்கறிந்த பெரும் தொழிலதிபர், பெண்கள் மீது கொண்ட சபலத்தினால் எந்த அளவுக்கு சமுதாயத்தில் மதிப்பு இழந்து சிறைக்குச் சென்று பின்னர் உயிர் விட்டார் என்பதை அடி நாதமாக வைத்துக் கொண்டு அதில் பாதிக்கு மேல் கற்பனையைச் சேர்த்து ஒரு சுவாரசியமான கதையை நமக்கு தந்து இருக்கிறார் இயக்குனரும் நடிகருமான தம்பி…

Read More

ஸ்மைல் மேன் திரைப்பட விமர்சனம்

by by Dec 27, 2024 0

போர் தொழில் வெற்றிப் படத்துக்குப் பின் சீரியல் கில்லர்களைப் பின் தொடர்ந்து சரத்குமார் துப்பறியும் மூன்றாவது படம். ஷ்யாம் – பிரவீண் இயக்கியிருக்கிறார்கள்.

கோயம்புத்தூர்தான் கதைக்களம். சிபிசிஐடியில் சரத்குமார் பணியாற்றும் போது ஒரு சீரியல் கில்லர் பெரும் தலைவலியை உருவாக்குகிறான். கொல்பவர்களின் முகங்களில் வாயை மட்டும் கிழித்து, சிரிப்பது போல் வைத்து விடுவது அவனுடைய ஸ்டைல். ஒரு கட்டத்தில் அவன் கொல்லப்பட்டதாக அறிவித்து அதற்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் சரத்குமாரின் உயர் அதிகாரி சுரேஷ் மேனன். அவரும் கொல்லப்படுவதை…

Read More

மழையில் நனைகிறேன் திரைப்படம் விமர்சனம்

by by Dec 27, 2024 0

கவித்துவமான தலைப்பை பார்த்த உடனேயே இது காதல் கதை தான் என்பது தெரிந்து விடும். அதனால் இதுவரை பார்த்த அத்தனை காதல் படங்களின் பாதிப்புகளும் இந்த படத்தில் இருப்பதை இயக்குனர் டி. சுரேஷ்குமாரால் தவிர்க்க முடியவில்லை. 

நாயகன் அன்சன் பால் ஒரு கோடீஸ்வரர் வீட்டுப் பிள்ளை. அதற்குரிய இலக்கணங்களோடு(!) அப்பாவின் தொழிலையும் கவனிக்காமல், கல்லூரிப் படிப்பையும் முடிக்காமல் நண்பர்களுடன் சுற்றித் திரிகிறார். 

ஒரு சுபயோக சுப தினத்தில் மழையில் நனையும் நாயகி ரெபா மோனிகா ஜானைப் பார்த்த அன்சன்,…

Read More

அலங்கு திரைப்பட விமர்சனம்

by by Dec 25, 2024 0

மன்னர்கள் காலத்திலிருந்து விண்வெளி சென்றது வரை நாய்களுக்கு இந்தப் பூவுலகில் தனி இடம் உண்டு. மனிதர்களுக்கு நாய்கள் உதவுவது காலம் காலமாக நடைபெறும் நிகழ்வு என்று இருக்க, இந்தப் படத்தில் அதற்கு மாற்றாக ஒரு நாயின் நல்வாழ்வுக்கு சில மனிதர்கள் எவ்வாறு உதவுகிறார்கள் என்று சொல்கிறார் இயக்குனர் எஸ்.பி.சக்திவேல்.

தமிழக கேரள எல்லைப் பகுதியில் உள்ள மலை கிராமத்தில் நடக்கிறது கதை. அங்குள்ள பழங்குடிகளில் பலர் மலையை விட்டுக் கீழே இறங்கி நடைமுறை வாழ்க்கைக்கு வந்து விட்டாலும்…

Read More

Ui திரைப்பட விமர்சனம்

by by Dec 24, 2024 0

கன்னடத் திரை உலகில் பல புதுமைகளைப் படைத்து வரும் உபேந்திரா நடித்து இயக்கி இருக்கும் படம்.

சினிமா ஆக்கத்தில் வணிகரீதியான படம், கலை ரீதியான படம் என்று வகைகள் உண்டு. ஆனால் இந்தப் படம் அவற்றில் இருந்தும் மாறுபட்டு அப்ஸ்ட்ராக்ட் என்று சொல்லப்படும் நவீன ஓவிய பாணியில் படைக்கப்பட்டிருக்கிறது. 

நேரடியாக வெகு மக்களின் பார்வைக்கு ஒரு கதை தெரியும். அதை அறிவார்ந்து பார்க்கும் போது இன்னொரு கதை புரியும். அந்த வகையில் இரண்டு கோணங்களில் இந்தப் படம் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. 

ஆனால்…

Read More

விடுதலை பாகம் 2 திரைப்பட விமர்சனம்

by by Dec 24, 2024 0

விடுதலை படத்தின் முதல் பாகம் தந்த வெற்றியும் வரவேற்பும், இந்த இரண்டாம் பாகத்துக்கான எதிர்பார்ப்பை அதிகமாக்கியது. 

கடந்த படத்துக்கும் இந்தப் படத்துக்கும் இனிய முரண் என்னவென்றால் அதில் சூரி அதிக திரை நேரத்தை எடுத்துக் கொண்டிருந்தார் – விஜய் சேதுபதி ஒரு விருந்தினர் வேடத்தில்  வந்திருந்தார். 

ஆனால் இதில் அப்படியே தலைகீழாக ஆகிப் போய் விஜய் சேதுபதியே அதிக திரை நேரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்தக் கதையை ஆரம்பித்தவர் சூரி என்பதால் அவரை வைத்துப் படத்தை முடிக்கிறார்…

Read More

தென் சென்னை திரைப்பட விமர்சனம்

by by Dec 20, 2024 0

சமீபகாலமாக வட சென்னைக் கதைகள் கோலிவுட்டை முழுக்க ஆக்கிரமித்து இருக்கின்றன. இந்நிலையில் அதற்குப் போட்டியாக தென்சென்னை என்ற இந்தப் படத்தைத் தயாரித்து, இயக்கி, நடித்து வெளியிட்டு இருக்கிறார் ரங்கா.

வடசென்னைக் கதைகள் என்றாலே கால்பந்தாட்டம், குத்துச்சண்டை, ரவுடியிசம் என்று இருக்க தென் சென்னைக்கு எதை அடையாளமாக வைத்திருக்கிறார் ரங்கா என்று பார்த்தால் உணவகம் ஒன்றே மையப்படுத்தி இருக்கிறார். 

கதை இதுதான்.

ரங்காவுக்கு நேவியில் பணியாறற வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் அப்பா தொடங்கிய உணவகத்தை நடத்தும் பொறுப்பு வந்து…

Read More

மிஸ் யூ திரைப்பட விமர்சனம்

by by Dec 16, 2024 0

‘கட்டாயத்தால் காதல் மலராது – ஆனால் காதலித்தால் கட்டாயம் வாழ்க்கை மலரும்’ என்ற ஒன்லைன் கொண்ட கதை.

ஒரு விபத்தில் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ என்கிற கதியாக சில வருட நினைவுகளை மறந்து போகிறார் சித்தார்த் ஒரு மாறுதலுக்காக அவர் பெங்களூர் போக அங்கே நாயகி ஆஷிகா ரங்கநாத்தைப் பார்த்து காதல் கொள்கிறார். 

ஆனால் ஆஷிகா அவர் பக்கம் திரும்பவே இல்லை. அதற்குக் காரணம் என்ன என்பதும், சித்தார்த்தின் காதல் வெற்றி பெற்றதா என்பதும் மீதிக் கதை.

சித்தார்த்…

Read More