April 20, 2024
  • April 20, 2024
Breaking News

Currently browsing விமர்சனம்

2018 திரைப்பட விமர்சனம்

by by May 27, 2023 0

டொவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், ஆசிஃப் அலி, வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, லால், இந்திரன்ஸ், ஷிவதா என மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்திருந்தாலும் எந்த ஒரு நடிகரும் தனிப்பட்ட ஹீரோ இல்லை என்கிற பொருளில் “ஒவ்வொருவரும் ஹீரோதான்…” என்று சொல்லியே இந்த படத்தைத் தொடங்குகிறார் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப்.

2018 ஆம் ஆண்டு கேரளத்தை உலுக்கிய மழை வெள்ளத்தை அத்தனை சீக்கிரம் மறப்பதற்கு இயலாது.

செய்திகளாகவும், செய்திப் படங்களாகவும் நாம் அறிந்திருந்த…

Read More

தீராக்காதல் திரைப்பட விமர்சனம்

by by May 26, 2023 0

காதல் கதைகளுக்கு இதைப் போன்று இலக்கியத்தரமான தலைப்பு கிடைப்பது அபூர்வம். அப்படி ஒரு தலைப்பைப் பிடித்ததுடன் எந்தக் காலத்திலும் அலுக்காத முன்னாள் காதலர்கள் இந்நாளில் இணைந்தால் என்ன ஆகும் என்கிற கதையைச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ரோஹின் வெங்கடேசன்.

இந்த லைனில் ஏகப்பட்ட கதைகள் வந்தாயிற்று. இந்தக் கதையில் புதுமை என்ன என்றால் கல்லூரி நாட்களில் காதலித்து பிரிந்த ஜோடி இருவரும் திருமணம் ஆன பின் மீண்டும் சந்திக்க நேர, சில நாட்கள் பழைய காதலை நினைத்துச்…

Read More

ஏலியன்ஸ் 2042 ஆங்கிலத் திரைப்பட விமர்சனம்

by by May 26, 2023 0

அவதார் படத்தை இயக்கிய ஜேம்ஸ் கேமரூனின் ALIENS (1986) ஏலியன்ஸ் சிறந்த அறிவியல் புனை கதைகளில் ஒன்றாக இப்போது வரை இருக்கிறது!

இதுவரை இதை வைத்து பல தொடர் படம்கள் தயாரிக்கப்பட்டு வந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை பாக்ஸ் ஆபிஸில் வெற்றியும் பெற்றிருக்கின்றன. ஆனால், இன்றும் James Cameron’s (ஜேம்ஸ் கேமரூனின்) ALIENS (1986) (ஏலியன்ஸ்) விமர்சகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களால் மிக அதிகமாக மதிப்பிடப்படுகிறது!

வேற்றுகிரகவாசிகள் மனிதர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள் என்ற கருத்தின் வரிசையில், இந்த சமீபத்திய…

Read More

கழுவேத்தி மூர்க்கன் திரைப்பட விமர்சனம்

by by May 26, 2023 0

நாயகன் அருள்நிதி அறிமுகமான வம்சம் படத்துக்கு பின் அவருக்கு அமைந்திருக்கும் உணர்ச்சி பூர்வமான கிராமத்து ஆக்ஷன் பாத்திரம் இந்தப் படத்தில். 

இதுவும் ஒரு சாதிய படம் என்றாலும் பாகுபாடுகள் அற்ற மக்களுக்குள் – அதை வைத்து சுயநலம் பிடித்தவர்கள் செய்யும் சதிதான் சாதியப் பிரச்சனைகளுக்கு காரணமாகின்றது என்று சொல்லி இருக்கிறார் இந்த பட இயக்குனர் சை.கௌதம ராஜ்.

ஆதிக்க சாதியைச் சேர்ந்த நாயகன் அருள்நிதியும் தாழ்த்தப்பட்ட பிரிவினரான சந்தோஷ் பிரதாப்பும் சிறு வயது முதலே உயிர் நண்பர்களாக இருந்து…

Read More

பிச்சைக்காரன்2 திரைப்பட விமர்சனம்

by by May 22, 2023 0

இப்படி ஆனால் எப்படி ஆகும் என்பதுதான் ஒரு சயின்ஸ் பிக்ஷனுக்கான இலக்கணம். அந்த வகையில் சாத்தியமே இல்லாத மூளை மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டிருக்கிறார் இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகவும் ஆகி இருக்கிறார் விஜய் ஆண்டனி.

அப்படி ஒரு கோடீஸ்வரனுக்கு பிச்சைக்காரன் மூளையை மாற்றப்போய் நடக்கும் விளைவுகள்தான் கதை. அதற்காக அப்படியே சயின்ஸ் பக்கம் போய் கற்பனை செய்து கொள்ள வேண்டாம்….

Read More

மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் திரைப்பட விமர்சனம்

by by May 19, 2023 0

தன்னுடைய அடையாளம் திரில்லர் படம்தான் என்று இரண்டு மாதங்கள் முன்பு நிரூபித்த இயக்குனர் தயாள் பத்மநாபன் அதற்குள் இன்னொரு த்ரில்லருடன் நம்மை மிரட்ட வந்திருக்கிறார்.

ஆனால் கடந்த முறை போல் தியேட்டர்களில் இந்தப் படத்தை வெளியிடாமல் ஓடிடியில் வெளியிட்டு இருக்கிறார்.

தலைப்பில் உள்ள மாருதி நகர் காவல் நிலையத்தைச் சுற்றியே கதை நடக்கிறது.

போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக இருக்கும் வரலட்சுமி சரத்குமார் தன்னுடைய காதலரான மஹத் கொல்லப்பட்டதை அறிகிறார்.

ஒரு குழந்தை கடத்தப்படுவதை நேரில் பார்க்கும் மஹத் மாருதி நகர் காவல்…

Read More

ASTERIX & OBELIX:THE MIDDLE KINGDOM ஆங்கிலப் பட விமர்சனம்

by by May 13, 2023 0

Asterix & Obelix கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட காமிக்ஸ் புத்தகத் தொடரின் வரிசையில் இதுவரை நான்கு படங்கள் எடுக்கப்பட்டு இருக்க, ஐந்தாவது படமாக வந்திருக்கும் Asterix & Obelix: The Middle Kingdom எனும் இந்தப் படம் வித்தியாசமானது.

அதன் காரணம், காமிக்ஸ் புத்தங்களின் அடிப்படையில் எடுக்கப்படாமல், தனிக்கதையைக் கொண்ட நேரடி படமாக முதல்முறையாக இந்தப்படம் வந்திருப்பது சிறப்பு.

இதன் கதைச் சுருக்கம் இதுதான்… Asterix மற்றும் Obelix…

Read More

ஃபர்ஹானா திரைப்பட விமர்சனம்

by by May 13, 2023 0

வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைக்கும் விந்தை மனிதர்கள் கடந்த இரண்டு தலைமுறைக்கு முன்னரே மாறிவிட்டனர். பெண்ணுக்கு இலக்கணம் சொல்லிய காலம் போய் புதுமைப் பெண்ணுக்கு உரிய இலக்கணம் கடந்த தலைமுறையில் சொல்லப்பட்டு விட்டது. 

ஆனால் இது மட்டுமே போதுமானதா? பெண்களுடைய ஆசைகள், தேவைகள் குறித்து அவர்களே முடிவெடுக்க வேண்டும் என்று சொல்கிறது இந்தப் படம்.

பாரம்பரிய ஒழுக்கத்தில் நம்பிக்கை கொண்ட இஸ்லாமிய பெரியவர் கிட்டி, தன் மகள் ஐஸ்வர்யா ராஜேஷையும் அம்முறையிலேயே வளர்த்து ஜித்தன் ரமேஷுக்கு திருமணம் செய்து…

Read More

குட் நைட் திரைப்பட விமர்சனம்

by by May 11, 2023 0

ஈரைப் பேனாக்கி பேனை பெருமாள் ஆக்குவது என்று ஒரு சொல்லாடல் கிராமிய வழக்கில் உண்டு. அப்படி நாம் அன்றாடம் சந்திக்கும் ஒரு சாதாரணப் பிரச்சினையை வைத்து இரண்டரை மணி நேரம் நம்மை ரசிக்க வைத்து அதிசயத்தில் ஆழ்த்தி இருக்கிறார் இயக்குனர் விநாயக் சந்திரசேகரன்.

நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்த நாயகன் மணிகண்டனுக்கு ஒரு பிரச்சனை – வேறு ஒன்றும் இல்லை, தூங்கும்போது சத்தமாக குறட்டை விடுவதுதான். அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களை கூட அலற வைக்கும் அவரது குறட்டையால்…

Read More

இராவணகோட்டம் திரைப்பட விமர்சனம்

by by May 11, 2023 0

தென் தமிழகத்தில் சாதி மோதல்களுக்குக் குறைவில்லை. இதில் எந்த சாதி, மோதல்களுக்கு வழி வகுக்கிறது என்று பல்வேறு திரைப்படங்களில் அவரவர் நியாயங்களைச் சொல்லி வந்திருக்கிறார்கள்.

ஆனால் அது மட்டும்தான் தென் மாவட்டங்களில் பிரச்சனையா என்றால் ‘அது இல்லை – இன்னொரு பெரிய வில்லன் இருக்கிறான்’ என்று இந்தப் படத்தில் அடையாளம் காட்டுகிறார் இயக்குனர் விக்ரம் சுகுமாரன்.

தமிழகத்தின் வறட்சி மாவட்டமான ராமநாதபுர கிராமத்தில் நடக்கிறது கதை. அங்கே இருக்கும் இரண்டு சாதிப் பிரிவினருக்குள் மோதல் ஏதும் ஏற்பட்டு விடாமல்…

Read More