April 25, 2024
  • April 25, 2024
Breaking News

Currently browsing விமர்சனம்

குட் நைட் திரைப்பட விமர்சனம்

by by May 11, 2023 0

ஈரைப் பேனாக்கி பேனை பெருமாள் ஆக்குவது என்று ஒரு சொல்லாடல் கிராமிய வழக்கில் உண்டு. அப்படி நாம் அன்றாடம் சந்திக்கும் ஒரு சாதாரணப் பிரச்சினையை வைத்து இரண்டரை மணி நேரம் நம்மை ரசிக்க வைத்து அதிசயத்தில் ஆழ்த்தி இருக்கிறார் இயக்குனர் விநாயக் சந்திரசேகரன்.

நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்த நாயகன் மணிகண்டனுக்கு ஒரு பிரச்சனை – வேறு ஒன்றும் இல்லை, தூங்கும்போது சத்தமாக குறட்டை விடுவதுதான். அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களை கூட அலற வைக்கும் அவரது குறட்டையால்…

Read More

இராவணகோட்டம் திரைப்பட விமர்சனம்

by by May 11, 2023 0

தென் தமிழகத்தில் சாதி மோதல்களுக்குக் குறைவில்லை. இதில் எந்த சாதி, மோதல்களுக்கு வழி வகுக்கிறது என்று பல்வேறு திரைப்படங்களில் அவரவர் நியாயங்களைச் சொல்லி வந்திருக்கிறார்கள்.

ஆனால் அது மட்டும்தான் தென் மாவட்டங்களில் பிரச்சனையா என்றால் ‘அது இல்லை – இன்னொரு பெரிய வில்லன் இருக்கிறான்’ என்று இந்தப் படத்தில் அடையாளம் காட்டுகிறார் இயக்குனர் விக்ரம் சுகுமாரன்.

தமிழகத்தின் வறட்சி மாவட்டமான ராமநாதபுர கிராமத்தில் நடக்கிறது கதை. அங்கே இருக்கும் இரண்டு சாதிப் பிரிவினருக்குள் மோதல் ஏதும் ஏற்பட்டு விடாமல்…

Read More

சிறுவன் சாமுவேல் திரைப்பட விமர்சனம்

by by May 9, 2023 0

வழக்கமாக நாம் பார்க்கும் வணிக ரீதியான படங்களில் இருந்து சற்றே வித்தியாசமான படம் இது. அதனால் வழக்கமான சினிமா ரசனையை கொஞ்சம் இறக்கி வைத்துவிட்டு இந்தப் படம் பார்க்கப் போக வேண்டும்.

இலக்கிய உலகில் சிறுவர்களுக்கு என்று இலக்கியம் படைக்க சிலர் உண்டு. ஆனால் குழந்தைகளுக்கான படம் எடுப்பது மிகவும் அரிதாகத்தான் இங்கே நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் ‘சாது ஃபெர்லிங்டன்’ இயக்கியிருக்கும் இந்தப் படம் முற்றிலும் சிறுவர்களுக்கான படம் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

Read More

குலசாமி திரைப்பட விமர்சனம்

by by May 6, 2023 0

பாலியல் குற்றவாளிகளுக்கு சினிமாக்காரர்கள் தரும் தண்டனை மரண தண்டனை மட்டுமே. இதனை இன்னொரு முறை உரக்கச் சொல்லி இருக்கிறார் இயக்குநர் ‘குட்டிப்புலி’ ஷரவணஷக்தி.

ஆட்டோ ஓட்டுனராக வரும் நாயகன் விமலின் தங்கை கீர்த்தனா மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் எடுத்து, தான் பிறந்த கிராமத்திற்கு பெருமை சேர்க்கிறார். தொடர்ந்து அவரை மருத்துவராக விரும்பிய விமல் அதற்கு போதிய பணமின்றி தவிக்க அந்த கிராமத்து மக்களே சேர்ந்து விமலின் தங்கையை மருத்துவக் கல்லூரியில் சேர்க்கிறார்கள்.

இத்தனைப் பாடுபட்டு தங்கையை மருத்துவராக முயன்றும்…

Read More

விரூபாக்ஷா திரைப்பட விமர்சனம்

by by May 5, 2023 0

தெலுங்கில் சூப்பர் டூப்பர் வெற்றியடைந்த இந்தப் படம் அதே சூட்டோடு, அதே டைட்டிலுடன் தமிழுக்கு வந்திருக்கிறது.

கானகம் சூழ்ந்த ஒரு கிராமத்தில் நடக்கும் கதை. அந்த கிராமத்தில் தொடர்ந்து குழந்தைகள் இருந்து கொண்டிருக்கிறார்கள். கிராமத்துக்கு புதிதாக வந்து குடியேறிய வெங்கடாசலபதி என்கிற நபர் செய்யும் மாந்திரீக வேலைகள்தான் இப்படி குழந்தைகள் இறப்பதற்கு காரணம் என்று புரிந்து கொள்ளும் ஊர் மக்கள் அவரையும் கை, கால் விளங்காத அவரது மனைவியையும் கட்டிப் போட்டு உயிரோடு எரித்து…

Read More

தீர்க்கதரிசி திரைப்பட விமர்சனம்

by by May 5, 2023 0

மலையாளத்தில் வருவது போல் சிறந்த கதை திரைக்கதையுடன் ஒரு படம் வராதா என்று ஏங்கிய தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு விருந்தாக வந்திருக்கிறது இந்தப் படம்.

காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் பணி செய்கிறார் ஶ்ரீமன். அங்கு அடிக்கடி அனாமதேய போன் கால்கள் வந்து அவர்கள் வேலையை கெடுத்துக் கொண்டிருக்க, அது போன்றே ஒரு அழைப்பு வருகிறது. 

அடையார் பகுதியில் ஒரு பெண் கொலை செய்யப்படுவார் என்று அந்த அழைப்பு சொல்ல போலீசும் அது அனாமதேய அழைப்பு என்று அசட்டையாக இருந்து…

Read More

பொன்னியின் செல்வன் 2 திரைப்பட விமர்சனம்

by by Apr 29, 2023 0

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பகுதி எந்த இடத்தில் முடிந்ததோ அங்கிருந்துதான் இந்த இரண்டாம் பகுதி தொடங்குகிறது. என்றாலும் இதற்கு முன்னே ஆதித்ய கரிகாலன் – நந்தினியின் இள வயது காதல் காட்சிகளும் இடம்பெறுகின்றன.

பதின் பருவ ஆதித்ய கரிகாலன் அவரைவிட இளைய நந்தினி அங்கங்கே சந்தித்து காதல் வயப்பட, தந்தையின் கட்டளைப்படி போருக்குச் சென்று வந்த நிலையில் நந்தினியை கைப்பிடிக்க எண்ணி அரண்மனைக்கு அழைத்து வருகிறார் ஆதித்ய கரிகாலன்.

அரண்மனையில் இருக்கும் குந்தவை உட்பட எல்லோருமே அந்தக்…

Read More

மாவீரன் பிள்ளை திரைப்பட விமர்சனம்

by by Apr 27, 2023 0

படத்தின் இந்த கம்பீரமான தலைப்பும் இதில் வீரப்பனின் மகள் விஜயலட்சுமி கதாநாயகி ஆகிறார் என்கிற முன்னறிவிப்பும் இந்தப் படம் மீது மிகப்பெரிய நம்பிக்கையைத் தோற்றுவித்தது நிஜம்.

அதன்படியே ஆரம்ப காட்சிகளில் கிராமத்து பெண்களுக்கு சிலம்பம் கற்றுத்தரும் வேடத்தில் வருகிறார் வழக்கறிஞராக வரும் விஜயலட்சுமி. அவரைச் சுற்றித்தான் கதை நடக்கும் என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கும் நேரத்தில் இன்னொரு பக்கம் பாய்கிறது கதை.

தர்மபுரி பகுதியில் இருக்கும் வறட்சியான கிராமம் என்கிறார்கள். அங்கே வசிக்கும் கூத்துக் கலைஞரான ராதாரவி தன்…

Read More

தமிழரசன் திரைப்பட விமர்சனம்

by by Apr 26, 2023 0

மருத்துவத்தைக் கையில் வைத்துக் கொண்டு மக்களிடம் இருந்து பணம் பறிக்கும் தனியார் மருத்துவமனையின் மெடிக்கல் மாஃபியாக்களை இன்னொரு முறை அடையாளம் காட்டி இருக்கிறார் இயக்குனர் பாபு யோகேஸ்வரன்.

அப்படி படத்தின் நாயகன் விஜய் ஆண்டனியின் மகன் பிரணவ்வுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய நேர அதற்காக முக்கால் கோடி சிகிச்சை கட்டணமாகவும், அதற்கு முன்பணமாக 25 லட்சம் செலுத்தினால்தான் அறுவை சிகிச்சைக்கான பட்டியலிலேயே இடம் பிடிக்க முடியும் எனவும் தனியார் மருத்துவமனை முரண்டு பிடிக்க, கொதித்து…

Read More

யாத்திசை திரைப்பட விமர்சனம்

by by Apr 22, 2023 0

வெற்றி பெறுவது முக்கியம் அல்ல – வெல்ல முடியாது என்று தெரிந்தும் பெரும்பலம் கொண்ட எதிரியுடன் மோதுவதே வெற்றிதான். இந்த விஷயத்தைதான் ஏழாம் நூற்றாண்டில் நடந்ததாகச் சொல்லப்படும் சரித்திரப் புனைவின் வழியாக உணர்த்துகிறார் இயக்குனர் தரணி ராசேந்திரன்.

‘சோழர்கள் மீண்டும் வந்து விட்டார்கள்’ என்கிற பதாகையோடு உலகெங்கிலும் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கும் கல்கி எழுதி மணிரத்தினம் இயக்கியிருக்கும் பொன்னியின் செல்வன் அதிர்வலையை கிளப்பிக் கொண்டிருக்க, சந்தடி இல்லாமல் பாண்டிய பேரரசின் கதையை, தானே ஆய்வுகள் மேற்கொண்டு புனைவாக…

Read More