October 5, 2026
  • October 5, 2026
Breaking News

Currently browsing செய்திகள்

மகனுக்கு சுத்தத் தமிழ்ப் பெயர் வைத்த கார்த்தி

by by Mar 17, 2021 0

சிவகுமாரின் மகன்களான சூர்யா கார்த்தி இருவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

இவர்களில் சூர்யா – ஜோதிகா தம்பதியினரின் குழந்தைகளுக்கு தியா, தேவ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

கார்த்தி-ரஞ்சனி தம்பதியினருக்கு ஏழு வருடங்களுக்கு முன் ஒரு பெண் குழந்தை பிறக்க அதற்கு சுத்த தமிழில் உமையாள் என்று பெயர் வைத்தனர்.

அதற்கு பின் நான்கு மாதங்களுக்கு முன் ரஞ்சனி ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்தக் குழந்தைக்கும் தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று நான்கு…

Read More

தொழில் அதிபர் ஆனார் நடிகை சஞ்சனா சிங்

by by Mar 17, 2021 0

ரேணிகுண்டா படத்தில் திறமையான நடிகையாக அறிமுகமானவர் நடிகை சஞ்சனா சிங்.

வித்தியாசமான முயற்சிக்கு பேர்போன நடிகை சஞ்சனா தற்போது தனது கவனத்தை ஹோட்டல் பிஸினெஸ்ஸை நோக்கித் திருப்பியுள்ளார். 

தன்னுடன் பணிபுரிந்த சகோதரன் வெங்கட்டுடன் இணைந்து உணவுத் தொழிலில் இறங்கியுள்ளார் சஞ்சனா. 

யம்மியோஷா என்னும் சைனீஷ் ரெஸ்டாரெண்டை சென்னை வடபழனியில் சிம்ஸ் மருத்துவமனை எதிரில் தொடங்கியுள்ளார். 

நேற்று நடந்த தொடக்க விழாவில் அனேக திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டு சஞ்சனாவை வாழ்த்தினர். 

இயக்குநர் கே பாக்கியராஜ், சோனியா அகர்வால், மதுமிதா, நடிகர் பரணி, பெசண்ட் ரவி,…

Read More

போலி இரிடியம் விற்பனை மோசடி புகாரில் இசையமைப்பாளர் அம்ரீஷ் கைது

by by Mar 16, 2021 0

பிரபல நடிகை ஜெயசித்ராவின் மகனும் திரைப்பட இசையமப்பாளருமான அம்ரிஷ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக  தெரிகிறது.

சமீப காலமாகவே போலி இரிடியம் விற்பனையில் ஏகப்பட்ட மோசடி வழக்குகள் செய்திகளில் இடம் பெற்று வருகின்றன. இந்த இரிடியத்தை வாங்குவதற்கு கோடிக்கணக்கான பணமும் கை மாறுவதாக தெரிகிறது.

இது போன்றதொரு இரிடியம் விற்பனை மோசடியில் இசையமைப்பாளர் அம்ரீஷும் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது. இவர் நானே என்னுள் இல்லை, மொட்ட சிவா கெட்ட சிவா, பாஸ்கர் ஒரு ராஸ்கல், சார்லி சாப்ளின் 2, பொட்டு,…

Read More

விகடன் மீது போலீஸில் புகார் அளித்த தீதும் நன்றும் படக்குழு

by by Mar 16, 2021 0

விகடன் பத்திரிகை தங்கள் படத்தைத் தரக்குறைவாக விமர்சித்ததாகக் கூறி அவர்கள் மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளது தீதும் நன்றும் படக் குழு. இது தொடர்பாக அவர்கள் அளித்த அறிக்கை…

அன்பிற்குரியவர்களுக்கு வணக்கம்,

ஒரு படம் என்பது பலருடைய கடின உழைப்பு, பண முதலீடு உள்ளிட்ட பல விஷயங்களை உள்ளடக்கியது. இதனை கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் விமர்சனம் செய்து, படக்குழுவினருக்கும் தயாரிப்பாளருக்கு கடும் மன உளைச்சலை உண்டாக்குவார்கள். படங்களை விமர்சனம் செய்யலாம் தவறில்லை, அது எல்லை…

Read More

சேரனுடன் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் ஆனந்தம் விளையாடும் வீடு

by by Mar 15, 2021 0

குடும்ப கதைகள் கொண்ட திரைப்படங்கள் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் தனி மதிப்பை பெற்றே வந்திருக்கின்றன. அதிலும் தமிழ்நாட்டில் ரசிகர்கள் குடும்பத்துடன் கூட்டமாக சென்று ரசிக்க, குடும்ப கதைகளையே விரும்புவார்கள்.

கௌதம் கார்த்திக், சேரன் நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” நீண்ட காலம் கழித்து, தமிழ் சினிமாவில் உருவாகும் குடும்ப திரைப்படமாக, ரசிகர்களின் கவனம் ஈர்த்திருக்கிறது.

சரவணன், டேனியல் பாலாஜி, விக்னேஷ், சிங்கம் புலி, கும்கி ஜொம்மல்லூரி, பாடலாசிரியர் சினேகன், நமோ நாராயணன், சௌந்தராஜன், மௌனிகா, மைனா, பருத்திவீரன் புகழ்…

Read More

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயற்கை எய்தினார்

by by Mar 14, 2021 0

முன்னணி இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார். அவருக்கு வயது 61.

தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் எஸ்.பி.ஜனநாதன். தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

‘லாபம்’ படத்தின் இறுதிக்கட்ட எடிட்டிங் பணிகளில் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் தீவிரமாகப் பணிபுரிந்து வந்தார். கடந்த வியாழன் (மார்ச் 11) அன்று மதியம் எடிட்டிங் பணிகளிலிருந்து வீட்டிற்குச் சாப்பிடச் சென்றுள்ளார்.

மீண்டும் எடிட்டிங் பணிக்கு நீண்ட நேரமாகத் திரும்பாத…

Read More

அவசர சிகிச்சை பிரிவில் இயக்குனர் ஜனநாதன் – விஜய்சேதுபதி அமீர் மருத்துவமனை விரைந்தனர்

by by Mar 12, 2021 0

விஜய் சேதுபதி சுருதிஹாசன் இணைந்து நடிக்கும் லாபம் படத்தை ஜனங்களின் இயக்குனர் என்று அழைக்கப்படும் எஸ்.பி.ஜனநாதன் இயக்கிவருகிறார்.

இயற்கை, ஈ, பேராண்மை போன்ற சமூகம் சார்ந்த படங்களை நமக்குத் தந்த இயக்குனர் எஸ். பி.ஜனநாதன் அதே வரிசையில் விவசாயம் மற்றும் தொழில் சார்ந்து சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை விதைத்து இயக்கி வரும் படம் தான் லாபம்.

இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணி இப்போது நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை எடிட்டிங் பணியில் ஈடுபட்டிருந்த ஜனநாதன் மதிய உணவுக்கு…

Read More

நன்றி கெட்ட நடிகைகள் – நடவடிக்கை எடுக்குமா சங்கங்கள்

by by Mar 10, 2021 0

கோலிவுட்டில அறிமுகமாகும் இயக்குனர் ராசு ரஞ்சித் நாயகனாக நடித்து ‘தீதும் நன்றும்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். வரும் வெள்ளியன்று வெளியாக இருக்கும் இப்படத்தில் கதாநாயகிகளாக மலையாள நடிகைகளான அபர்ணா பாலமுரளி, லிஜோமோள் ஜோஸ் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

மேற்படி தீதும் நன்றும்’ படத்தில் நடித்த பிறகுதான் அபர்ணாவுக்கு ‘சூரரைப் போற்று’ பட வாய்ப்பு வந்துள்ளது. லிஜோமோள் ஜோஸும் இந்தப் படத்திற்குப் பிறகுதான் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’…

Read More

பாசிட்டிவ் தலைப்பில் விஜய் ஆண்டனி நடிக்கும் கோடியில் ஒருவன்

by by Mar 10, 2021 0

விஜய் ஆண்டனி நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் – T . D ராஜா தயாரிக்கும் ‘கோடியில் ஒருவன் ‘ படத்தை ஆனந்த கிருஷ்ணன் இயக்குகிறார்.

ஆத்மீகா நாயகியாக நடிக்கிறார் . நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க , ஒளிப்பதிவினை N.S. உதயகுமார் மேற்கொள்கிறார் .

இந்த படத்தின் நாயகன் விஜய் ஆண்டனி படம் பற்றி கூறியதிலிருந்து…

கொலைகாரன் படத்திற்கு பிறகு இந்த படம் ரிலீஸ் ஆகிறது. இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் அருமையான படத்தை தந்துள்ளார். எதிர்காலத்தில் இவருடன் இன்னும்…

Read More

சீயான் 60 படத்தில் விக்ரம் ஜோடி சிம்ரன்… துருவ் விக்ரம் ஜோடி வாணி போஜன்

by by Mar 9, 2021 0

‘பொன்னியின் செல்வன்’, ‘கோப்ரா’ ஆகிய படங்களை முடித்துவிட்டு, அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள படத்துக்கு விக்ரம் தேதிகளை ஒதுக்கியுள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை தற்போதைக்கு ‘சீயான் 60’ என அழைத்து வருகிறார்கள். ‘கோப்ரா’ படத்தினைத் தயாரித்த லலித் குமாரே இந்தப் படத்தையும் தயாரிக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார்.

விக்ரமுடன் முதன்முறையாக அவருடைய மகன் துருவ் விக்ரமும் இந்தப் படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார் என்பது…

Read More