March 29, 2024
  • March 29, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • அவசர சிகிச்சை பிரிவில் இயக்குனர் ஜனநாதன் – விஜய்சேதுபதி அமீர் மருத்துவமனை விரைந்தனர்
March 12, 2021

அவசர சிகிச்சை பிரிவில் இயக்குனர் ஜனநாதன் – விஜய்சேதுபதி அமீர் மருத்துவமனை விரைந்தனர்

By 0 588 Views

விஜய் சேதுபதி சுருதிஹாசன் இணைந்து நடிக்கும் லாபம் படத்தை ஜனங்களின் இயக்குனர் என்று அழைக்கப்படும் எஸ்.பி.ஜனநாதன் இயக்கிவருகிறார்.

இயற்கை, ஈ, பேராண்மை போன்ற சமூகம் சார்ந்த படங்களை நமக்குத் தந்த இயக்குனர் எஸ். பி.ஜனநாதன் அதே வரிசையில் விவசாயம் மற்றும் தொழில் சார்ந்து சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை விதைத்து இயக்கி வரும் படம் தான் லாபம்.

இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணி இப்போது நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை எடிட்டிங் பணியில் ஈடுபட்டிருந்த ஜனநாதன் மதிய உணவுக்கு வீட்டுக்கு சென்றார். சென்றவர் மாலை ஆகியும் திரும்பி வராததால் அவரது உதவி இயக்குனர்கள் அவர் வீட்டுக்குச் சென்று பார்த்தனர்.

வீட்டின் கதவு திறந்த நிலையில் முன்னறையில் நினைவில்லாமல் விழுந்து கிடந்து இருக்கிறார் ஜனநாதன். அவரை மீட்டு உடனே அப்பல்லோ ஆஸ்பத்திரி விரைந்தனர். அங்கே அவருக்கு மூளைச்சாவு அடைந்ததாக முதலில் கருதப்பட்டது.

பின்னர் வென்டிலேட்டரில் இணைக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரை இன்று காலை நரம்பியல் நிபுணர்கள் வந்து பார்த்து மேல் சிகிச்சை செய்ய முடியுமா என்பது பற்றி ஆலோசிக்க இருக்கின்றனர்.

இந்த விஷயம் கேள்விப்பட்ட விஜய் சேதுபதி, அமீர், கரு பழனியப்பன் மற்றும் திரையுலக பிரபலங்கள் அப்போலோ விரைந்தனர். இரவில் அவரை பார்க்க விஜய்சேதுபதிக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

திடீரென்று நேர்ந்துவிட்ட இந்த சம்பவம் குறித்து திரையுலகினர் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

எஸ்.பி. ஜனநாதன் நலம் பெற்று மீண்டு வர அனைவரும் வேண்டுவோம்.