September 20, 2026
  • September 20, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • போலி இரிடியம் விற்பனை மோசடி புகாரில் இசையமைப்பாளர் அம்ரீஷ் கைது
March 16, 2021

போலி இரிடியம் விற்பனை மோசடி புகாரில் இசையமைப்பாளர் அம்ரீஷ் கைது

By 0 815 Views

பிரபல நடிகை ஜெயசித்ராவின் மகனும் திரைப்பட இசையமப்பாளருமான அம்ரிஷ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக  தெரிகிறது.

சமீப காலமாகவே போலி இரிடியம் விற்பனையில் ஏகப்பட்ட மோசடி வழக்குகள் செய்திகளில் இடம் பெற்று வருகின்றன. இந்த இரிடியத்தை வாங்குவதற்கு கோடிக்கணக்கான பணமும் கை மாறுவதாக தெரிகிறது.

இது போன்றதொரு இரிடியம் விற்பனை மோசடியில் இசையமைப்பாளர் அம்ரீஷும் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது. இவர் நானே என்னுள் இல்லை, மொட்ட சிவா கெட்ட சிவா, பாஸ்கர் ஒரு ராஸ்கல், சார்லி சாப்ளின் 2, பொட்டு, என் காதலி சீன் போடுரா உள்பட பல படங்களுக்கு  இசையமைத்திருக்கிறார்.

மேலும் ஏழு படங்களுக்கு இப்போது இசையமைத்து வருகிறார். 

பொதுவாகவே செல்வந்தராக இருந்துவரும் அம்ரிஷ வெற்றிகரமான இசையமைப்பாளராக இருந்தும் ஏன் இப்படி மோசடி செயலில் ஈடுபட்டார் என்பது புரியவில்லை.

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு காத்திருக்கிறோம்.