August 9, 2026
  • August 9, 2026
Breaking News

Currently browsing செய்திகள்

சிம்புவின் தைரியம் ரஜினி, விஜய், அஜித்துக்கு வருமா?

by by Jan 16, 2019 0

பொங்கலை ஒட்டி சிம்பு தன் ரசிகர்களுக்கு வாழ்த்து ட்வீட் ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். வீடியோவில் பேசும் அவர் லைகாவுக்காக சுந்தர்.சி இயக்கத்தில் தான் நடித்திருக்கும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் முற்றாக முடிந்து விட்டதாகவும், பிப்ரவரி ஒன்று அன்று அந்தப்படம் வெளியாகவிருப்பதாகவும் அறிவித்திருக்கிறார்.

அத்துடன் அவர் தன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றையும் வைத்திருக்கிறார். தன் படம் வெளியாகும் தினத்தன்று யாரும் தியேட்டர் விலைக்கு மேல் விற்கப்படும் டிக்கெட்டுகளை வாங்கிப் படம் பார்க்க வேண்டாமென்றும், தியேட்டர் நிர்ணயித்த விலையில் மட்டும்…

Read More

மேடியுடன் அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே …

by by Jan 15, 2019 0

பீயூப்பிள் மீடியா பேக்ட்ரி மற்றும் கோனா ஃபிலிம் கார்ப்பரேஷன் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து கோலிவுட், டாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகர்கள் நடிக்கும் புதிய படமொன்றை பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளனர். 
 
நடிகர்கள் மாதவன், அனுஷ்கா ஷெட்டி, அஞ்சலி, ஷாலிணி பாண்டே, சுபா ராஜு, அவசராலா ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கவுள்ள இப்படத்தில் மேலும் பிரபல ஹாலிவுட் நடிகர்களும் தொழில்நுட்ப வல்லுனர்களும் பணியாற்றவ்வுள்ளனர்.
 
ஹேமந்த் மதுக்கர் இயக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது.
 

ட்விட்டரை கலக்கும் விஷால் அனிஷா ரெட்டி புகைப்படங்கள்

by by Jan 15, 2019 0

சமீபத்தில் விஷாலின் திருமண அறிவிப்பு அவர் வாக்குமூலத்துடனேயே வெளிவந்தது. அவர் அனிஷா ரெட்டி என்கிற யுவதியை மணக்கவிருக்கிறார் என்ற அளவில் செய்தி உறுதிப்படுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து விஷால் மணக்கவிருக்கும் அனிஷா ரெட்டி இவர்தான் என்று சமூக வலைத் தளங்களில் ஒரு பெண்ணின் படம் உலா வர, அதைத் தொடர்ந்து விஷாலின் செய்தித் தொடர்பாளர் அந்தப்பெண் அனிஷா ரெட்டி இல்லை என்று அறிவித்ததுடன், விஷாலின் திருமணம் பற்றிய விவரங்களை நாங்களே முறைப்படி அறிவிப்போம் என்றார்.

இந்நிலையில் இன்று மாலை திடீரென்று…

Read More

முழுநேர நடிகராகும் கௌதம் வாசுதேவ் மேனன்

by by Jan 14, 2019 0

கேமராவுக்கு பின்னால் இருந்து ரசிகர்களை கவர்ந்த கௌதம் வாசுதேவ் மேனன், கோலிசோடா 2 படத்தில் நடிகராக அறிமுகமானார். இப்போது தொடர்ந்து தன் நடிப்புத் திறன்களை ரசிகர்களுக்கு வழங்க இருக்கிறார்.
 
அதன் அடையாளமாக மலையாள நடிகர் துல்கர் சல்மான் தமிழில் நடிக்கும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார் மேனன். 
 
இயக்குனர் ‘தேசிங் பெரியசாமி’ இது பற்றி கூறும்போது, “கௌதம் சார், எங்கள் படத்தில் ஒரு உற்சாகமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்தக் கதாபாத்திரத்தில்…

Read More

இளையராஜா75 டீசரை வெளியிட்ட 10 ஹீரோக்கள்

by by Jan 13, 2019 0

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தவிருக்கும் மாஸ்ட்ரோ இசைஞானி இளையராஜாவின் ‘இளையராஜா75’ நிகழ்ச்சியின் டிக்கெட் விற்பனை துவக்க விழா சமீபத்தில் மாபெரும் மக்கள் கூட்டத்தின் முன்னிலையில் பிரம்மாண்டமாக  நடை பெற்றது.

அதைத் தொடர்ந்து  டிக்கெட் விற்பனை ‘புக் மை ஷோ’ ஆன்லைனில்  பரபரப்பாக விற்பனையாகி கொண்டிருக்கிறது.  

பிப்ரவரி 2,3, தேதிகளில், நந்தனம் YMCA மைதானத்தில் – கலை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், பிரமாண்டமான LED அகன்ற திரை இப்படி பார்ப்போரை பரவசப்படுத்தும் அனைத்து வேலைகளும் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில் ‘இளையராஜா75’…

Read More

மாணவிகளைப் பாடகிகள் ஆக்குகிறார் இசை ஞானி

by by Jan 12, 2019 0

கல்லூரி மாணவிகள் 9 பேரைத் தான் இசையமைக்கும் படத்தின் மூலம்  பாடகிகளாக திரையுலகில் அறிமுகம் செய்யவிருக்கிறார் இசைஞானி  இளையராஜா.
 
அண்மையில் இசைஞானி இளையராஜா எத்திராஜ் கல்லூரி , ராணி மேரி கல்லூரி என இரண்டு மகளிர் கல்லூரி விழாக்களில் கலந்து கொண்டார். அங்கே  அவரது  பிறந்த நாள் விழாவையும் மாணவிகள் முன்னிலையில் கேக் வெட்டிக் கொண்டாடினார்.
 
இந்நிகழ்ச்சியில் பேசியும் பாடியும் அவர்  கல கலப்பூட்டினார். கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடியதுடன்  அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
 
அப்போது அவரது இசையைப் பற்றி மாணவிகள்…

Read More

விஷால் மணக்கப் போகும் பெண் இவர் இல்லையாம்

by by Jan 12, 2019 0

விஷால் தன் திருமண செய்தி உண்மைதான் என்று அறிவித்தாலும் அறிவித்தார். மீடியாக்களும், சமூக வலைதளங்களும் சுதாரித்து விட்டன.

இரண்டு நாள்களாக செய்திகளில் விஷால் மணக்கப்போகும் பெண் இவர்தான் என்று ஒரு பெண்ணின் படத்தைப் போட்டு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

ஆனால், இதற்கு மறுப்புத் தெரிவித்திருக்கிறார் விஷால். அவரது மக்கள் தொடர்பாளர் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், “நடிகர் விஷாலின் திருமணம் பற்றி இந்தப் படத்திலிருக்கும் பெண்மணியின் புகைப்படத்துடன் ‘விஷாலின் மணமகள்’ என்று வெளி வந்து  பரவி கொண்டிருக்கும் செய்தி முற்றிலும்…

Read More

கிரிஷ்ணம் விழாவில் பாக்யராஜ் சொன்ன உண்மை சம்பவம்

by by Jan 11, 2019 0

தயாரிப்பாளர் வாழ்வில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள படம் ‘கிரிஷ்ணம்’. இப்படத்தை பிஎன்பி சினிமாஸ் தமிழ்,தெலுங்கு, மலையாளம் மொழிகளில் தயாரித்துள்ளது.

தினேஷ்பாபு ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பாடல்களை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்டார். படக் குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

விழாவில் படத்தின் தயாரிப்பாளர் பி.என்.பலராம் பேசியதிலிருந்து…

“என் மகன் அக்ஷய் கிருஷ்ணனுக்கு ஒரு நோய் வந்து பெரும்பிரச்சினையாகி அவனால் பிழைக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறினார்கள். அவன் பிழைப்பதற்கு ஒரு சதவிகிதம்தான்…

Read More

விஸ்வாசத்தில் நட்சத்திரம் தாண்டி நடிகர் அஜித்தை பார்க்கலாம் – சிவா

by by Jan 9, 2019 0

அஜித்குமார் மற்றும் இயக்குநர் சிவா இணைந்த ‘விஸ்வாசம்’ பாடல்களும் டிரெய்லரும் பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் நாளை படம் வெளியீடு என்ற எந்த பதட்டமும் இல்லாமல், சிவா இன்னும் அமைதியாகவும், தன்னம்பிக்கையுடனும் இருக்கிறார்.

 
‘விஸ்வாசம்’ உருவாக்கம் தொடங்கியதிலிருந்து அவர் பேசத் தொடங்கினார்,
 
“நாங்கள் ஒரு புதிய படத்தில் வேலை செய்யத் தீர்மானித்த உடனேயே, விஸ்வாசம் ஸ்கிரிப்ட்டை அஜித் சார்க்கு நான் விளக்கினேன். அவருடைய ரியாக்‌ஷன் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எந்தக்  கதை கேட்டபோதும் அவர் இந்த அளவுக்கு ரசித்து…

Read More

கடைசி எச்சரிக்கை பாடலை வெளியிட்ட ஜி.வி – பாடல் வீடியோ

by by Jan 8, 2019 0

சுகுமார் கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள 35 நிமிட குறும்படம் ‘கடைசி எச்சரிக்கை’.
 
டவுட் செந்தில் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தின் போஸ்டரை இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான வேல்ராஜ் வெளியிட்டார்.
 
படத்தின் முதல் டீசரை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு வெளியிட்டு வாழ்த்தினார். இந்த நிலையில் படத்தின் பாடலை இசையமைப்பாளரும், முன்னணி நடிகருமான ஜி வி பிரகாஷ்குமார் நேற்று மாலை வெளியிட்டு வாழ்த்தினார்.
 
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முக்கியமான படம் கடைசி எச்சரிக்கை…

Read More