March 24, 2025
  • March 24, 2025
Breaking News
January 19, 2019

இந்தியன் 2 படத்துக்கு நோ சொன்ன அக்‌ஷய்குமார்

By 0 986 Views

ஷங்கர் இயக்க கமல் நடிக்க ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு அமர்க்களமாகத் தொடங்கிவிட்டது. சென்னை மெமோரியல் ஹாலில் நடந்த வழக்கமான தொடக்கவிழாவுடன் படப்பிடிப்பும் நேற்று (18-01-2019) ஆரம்பமானது. 

அதில் ‘சிம்பு நடிக்கிறார்…’ என்றும் ‘இல்லை…’ என்றும், ‘இல்லையில்லை நடிக்கிறார்…’ என்றும் பல யூகங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் படத்தின் வில்லன் யார் என்பது கேள்விக்குறியுடனேயே இருந்து வந்தது. 

‘எந்திரன்’ படத்துக்குப் பின் உலகெங்கும் ஷங்கர் படத்துக்கு எதிர்பார்ப்பு கூடிவிட, கடந்த ‘2 பாய்ண்ட் ஓ’ படத்தில் அர்னால்டையே வில்லனாக நடிக்க வைக்க முயன்றார்கள். பின்னர் அது முடியாமல் போய் பாலிவுட் பிரபலம் அக்‌ஷய் குமார் நடித்தார்.

அதே பஞ்சாயத்து இப்போது ‘இந்தியன் 2’ வுக்கும் ஏற்பட்டு பல பாலிவுட் நட்சத்திரங்களிடம் பேசிய பிறகு கடைசியில் அக்‌ஷய் குமாரையே நடிக்க வைக்க முடிவு செய்ய, அவரும் ‘ஓகே’ சொன்னதாக ஒரு தகவல் வெளியானது.

இப்போது அதுவும் இல்லாமல் இல்லையாம். “தேதிகள் இல்லை…” என்று சொல்லி அக்‌ஷய் விலகிக் கொண்டதாகச் சொல்கிறார்கள்.

அதில் உண்மை இருக்குமா தெரியவில்லை. அடுத்தடுத்து ரஜினி, கமலுக்கு வில்லனாக வேண்டாம் என்று அக்‌ஷய் குமார் நினைத்திருக்கலாம். உண்மையைச் சொல்லப்போனால், இந்தியாவெங்கும் அக்‌ஷய்க்கு இருக்கும் மவுசுக்கு ‘2 பாய்ண்ட் ஓ’வில் வில்லன் ஆனதே அவரது ரசிகர்களைக் கவலை கொள்ள வைத்திருக்கும். 

அவருக்கு பதில் இப்போது அமிதாப் மகன் அபிஷேக் பச்சன் நடிக்கிறாராம்.

முதல் பாகத்தில் மகன் கமலைக் கொல்லாமல் விட்டிருந்தால் இந்தப் படத்திலும் கமலே வில்லனாகியிருக்கலாம். என்ன செய்ய… அப்பொதெல்லாம் இரண்டாம் பாக ட்ரெண்டே இல்லையே..?