January 23, 2025
  • January 23, 2025
Breaking News
January 18, 2019

இளையராஜா 75 – ரஜினி கமல் கலந்து கொள்கிறார்கள்

By 0 878 Views
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், வருகிற பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் YMCA நந்தனத்தில் ‘இளையராஜா 75’ விழாவை நடத்தவுள்ளது. அந்த விழா தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்விகளுக்கு தலைவர் விஷால் பதிலளித்தபோது “ரஜினியையும், கமலையும் விழாவுக்கு அழைப்போம். அவர்கள் வருவார்கள் என்று நம்புகிறேன்..!” என்றார்.
 
அதன்படியே விழா குழுவினர்கள்,  தென்னிந்திய திரையுலகை சார்ந்த முக்கிய பிரபலங்களை நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார்கள்.
 
TFPC MET KAMAL

TFPC MET KAMAL

இந்நிலையில், நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், செயலாளர்கள் கதிரேசன் மற்றும் எஸ்.எஸ், துரைராஜ், பொருளாளர்  எஸ்.ஆர். பிரபு, ‘இளையராஜா 75’ குழு உறுப்பினர்கள் நந்தா மற்றும் மனோபாலா ஆகியோர் திரு. ரஜினிகாந்த் அவர்களை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து ‘இளையராஜா 75’ விழாவிற்கு அழைப்பு விடுத்தனர். அவரும் நிச்சயம் வருகிறேன் என்று உறுதியளித்துள்ளார்.

 
அதேபோல் கமலஹாசனை சந்தித்து அழைத்தபோது அவரும் வருவதாகக் கூறியிருக்கிறாராம்.
 
இளையராஜா விழா களைகட்டும் என்பதில் இன்னொரு கருத்துக்கு இடமில்லை..!