February 15, 2025
  • February 15, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • அதெல்லாம் முடியாது என்ற நதியா – எதுன்னாலும் ஓகே என்ற ரம்யா கிருஷ்ணன்
January 20, 2019

அதெல்லாம் முடியாது என்ற நதியா – எதுன்னாலும் ஓகே என்ற ரம்யா கிருஷ்ணன்

By 0 1119 Views

நடிக்க வந்துவிட்டால் என்ன வேடம் என்றாலும் ஏற்று நடிக்க பலர் தயங்குவதில்லை. ஆனால், சிலர் இப்படித்தான் நடிப்பது என்று வரையறை வகுத்துக்கொண்டு நடித்து வருவதும் சினிமாவில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இது நதியா சம்பந்தப்பட்ட செய்தி. நதியாவைப் பற்றி எல்லோருக்குமே தெரியும். அவர் ஹீரோயினாக இருந்தபோது எப்போதுமே தரக்குறைவான வேடங்களை எதற்காகவும் ஏற்று நடித்தது இல்லை. எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும் கட்டிப்பிடித்து நடிக்க மறுத்தவர்.

இப்போது குணச்சித்திர வேடங்கள் ஏற்று நடித்து வரும் நிலையிலும் தன் கொள்கையில் உறுதியாக இருக்கிறார்.

விஷயம் இதுதான் – தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்து வரும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நதியாவை ஒப்பந்தம் செய்தார்கள்.

ஆனால், அது ஷகிலா போன்ற கவர்ச்சி நடிகையின் வேடம் என்று தெரிந்து நாகரிகமாக ஒதுங்கிக் கொண்டாராம் நதியா. வேறு நடிகை தேடியபோது ரம்யா கிருஷ்ணன் நினைவு வர, கேட்டதும் அதனாலென்ன, என்று ஒத்துக்கொண்டாராம் ரம்யா.

படம் பார்த்தால்தான் அது எந்தளவுக்குக் கவர்ச்சியானது என்று தெரியும்.

ஆனால், ‘இப்படித்தான்…’ என்ற நதியாவும் சரி… ‘எப்படி இருந்தாலும் நடிப்பு…’ என்ற ரம்யாவும் சரி… இருவருமே பாராட்டுக்குரியவர்கள்தான்..!