December 7, 2021
  • December 7, 2021
Breaking News

Tag Archives

நயன்தாரா ரம்யாகிருஷ்ணன் அரசு நிலத்தை விலைக்கு வாங்கி ஏமாந்தார்களா..?

by on July 29, 2020 0

ஹைதராபாத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தை கிரிக்கெட் வீரர் சச்சின் மற்றும் நடிகை நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன் உட்பட பலருக்கு பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததாக ரியல் எஸ்டேட் நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்பதற்கு உதாரணமாகத் திகழும் இந்த நில மோசடி சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு. ஒரு சில ரியல் எஸ்டேட் நிறுவனங்களால் சாமானியர்கள் பாதிக்கப்படும் செய்திகளை நாம் கேள்விப்பட்டுள்ளோம். இப்போதோ பிரபலங்கள் பலர் […]

Read More

ரம்யா கிருஷ்ணன் சொகுசு காரில் ஏராள மது புட்டிகள் – டிரைவரை சொந்த ஜாமீனில் மீட்ட ரம்யா

by on June 13, 2020 0

திரையுலகில் எத்தனை சுற்றுகள் வந்தாலும் தாக்கு பிடிப்பவர் நடிகை ரம்யாகிருஷ்ணன். இதுவரை மூன்று சுற்றுகள் வந்துள்ள அவர் மூன்றிலும் வெற்றிக் கொடி நாட்டி தாக்குப்படித்து வருகிறார். இரண்டாவது சுற்றில் நீலாம்பரி ஆக மூன்றாவது சுற்றில் ராஜ மாதாவாக வந்து ரசிகர்களின் எண்ணங்களில் நீங்கா இடம் பெற்றவர் ரம்யா கிருஷ்ணன். இதுவரை எந்த புகாரிலும் சிக்காத அவர் இன்று யாரும் எதிர்பாராத ஒரு புகாரில் சிக்கி விட்டார். பாண்டிச்சேரியில் இருந்து திரும்பி வந்த அவரது சொகுசு காரில் இருந்து […]

Read More

அமேசான் பிரைமில் படையப்பா – ரஜினியை மீறி வெளியிட்டது யார்?

by on May 2, 2020 0

சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த். ரஜினிகாந்த் நடிப்பில் 1999ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி தமிழில் வெளி வந்த படம் ‘படையப்பா’. இந்த படத்தை பிரபல இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இயக்கியிருந்தார். இதில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக சௌந்தர்யா நடித்திருந்தார். ரஜினிக்கு எதிராக மோதும் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார் . இந்தப்படம் ப ரிலீஸாகி 21 ஆண்டுகள் ஆகி விட்டது. இப்படத்தினை நடிகர் ரஜினியே தனது ‘அருணாச்சலா சினி கிரியேஷன்ஸ்’ […]

Read More

ஜெ பெயரை சொல்ல என்ன தயக்கம் கௌதம் மேனனுக்கு

by on September 11, 2019 0

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநர் விஜய் ஒரு பக்கம் ‘தலைவி’ என்று எடுக்கும் முயற்சியிலிருக்க, இன்னொரு பக்கம் கௌதம் மேனன் அதே ‘ஜெ’வின் பையோபிக் ஒன்றை சீரியலாக எடுத்து விடுகிறார். ஆனால், அதற்கான அறிவிப்பில் ‘ஜெ’ பற்றிய எந்தக் குறிப்பும் இல்லாமல் ‘ஒரு பிரபல அரசியல்வாதி’யின் கதை என்று மட்டுமே குறிப்பிடுகிறார்கள். ‘குயின்’ என்று தலைப்பிடப்பட்ட அந்த சீரியல் பற்றி இன்று வெளியான தகவல் குறிப்பில்… ‘குயின்’ சீரியலின் கதை நாமறிந்த ஒரு பிரபல […]

Read More

ஒரு நாளுக்குள் 27 லட்சம் பார்வைகள் கடந்த சூப்பர் டீலக்ஸ் டிரைலர்

by on February 23, 2019 0

தமிழ் சினிமாவின் நவீன  டிரெண்ட் செட்டர்களில் முக்கியமானவர் இயக்குநர் ‘தியாகராஜன் குமாரராஜா’. வணிகத்துக்கு விலை போகாமல் சினிமாவின் நாடியைப் பிடித்துப் பார்க்கும் இவரது முதல் படமான ‘ஆரண்ய கண்டம்’ விமர்சகர்களால் பெருமளவு பாராட்டுகளைப் பெற்று இன்றைய நவீன படமாக்கலுக்கு முன்னுதாரணமாக அமைந்தது. அடுத்த இவரது படம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு எட்டு வருடங்களுக்குப் பின் பதில் கிடைத்திருக்கிறது. அவர் இப்போது இயக்கி வரும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடிக்க முடிவானதுமே சினிமா […]

Read More

அதெல்லாம் முடியாது என்ற நதியா – எதுன்னாலும் ஓகே என்ற ரம்யா கிருஷ்ணன்

by on January 20, 2019 0

நடிக்க வந்துவிட்டால் என்ன வேடம் என்றாலும் ஏற்று நடிக்க பலர் தயங்குவதில்லை. ஆனால், சிலர் இப்படித்தான் நடிப்பது என்று வரையறை வகுத்துக்கொண்டு நடித்து வருவதும் சினிமாவில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது நதியா சம்பந்தப்பட்ட செய்தி. நதியாவைப் பற்றி எல்லோருக்குமே தெரியும். அவர் ஹீரோயினாக இருந்தபோது எப்போதுமே தரக்குறைவான வேடங்களை எதற்காகவும் ஏற்று நடித்தது இல்லை. எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும் கட்டிப்பிடித்து நடிக்க மறுத்தவர். இப்போது குணச்சித்திர வேடங்கள் ஏற்று நடித்து வரும் நிலையிலும் தன் […]

Read More

கார்த்தி அப்பா பிரகாஷ்ராஜ் ரகுல் ப்ரீத் சிங் அம்மா ரம்யா கிருஷ்ணன் – தேவ் தகவல்

by on October 25, 2018 0

கார்த்தி நடிக்கும் ‘தேவ்’ படத்தின் முதல் பார்வையை இன்று மாலை சூர்யா வெளியிட்டார். இதில் கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க, ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் பிரின்ஸ் பிக்சர்ஸின் எஸ்.லக்ஷ்மண் இப்படத்தைத் தயாரிக்கிறார். ‘தேவ்’ படத்தைப் பற்றி இயக்குநர் ரஜத் ரவிசங்கர் கூறியது கார்த்தியின் ‘தேவ்’ கதாபாத்திரம் தோற்றம், காட்சியமைப்புகள் இவற்றை பார்த்த மாத்திரத்திரத்திலேயே அனைவரையும் காதலில் விழ வைக்கும் என்பதில் ஐயமில்லை. காதல், ரொமான்ஸ் மட்டுமல்லாமல், ஒரு இளைஞன் தான் நினைப்பதை சாதிப்பதற்கு எந்த […]

Read More