March 22, 2025
  • March 22, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ஒரு நாளுக்குள் 27 லட்சம் பார்வைகள் கடந்த சூப்பர் டீலக்ஸ் டிரைலர்
February 23, 2019

ஒரு நாளுக்குள் 27 லட்சம் பார்வைகள் கடந்த சூப்பர் டீலக்ஸ் டிரைலர்

By 0 998 Views

தமிழ் சினிமாவின் நவீன  டிரெண்ட் செட்டர்களில் முக்கியமானவர் இயக்குநர் ‘தியாகராஜன் குமாரராஜா’. வணிகத்துக்கு விலை போகாமல் சினிமாவின் நாடியைப் பிடித்துப் பார்க்கும் இவரது முதல் படமான ‘ஆரண்ய கண்டம்’ விமர்சகர்களால் பெருமளவு பாராட்டுகளைப் பெற்று இன்றைய நவீன படமாக்கலுக்கு முன்னுதாரணமாக அமைந்தது.

அடுத்த இவரது படம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு எட்டு வருடங்களுக்குப் பின் பதில் கிடைத்திருக்கிறது. அவர் இப்போது இயக்கி வரும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடிக்க முடிவானதுமே சினிமா ஆர்வலர்கள் சிலிர்த்தார்கள்.

நேற்று மாலை ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. வெளியான 18 மணிநேரத்தில் 27 லட்சம் பார்வைகளைக் கடந்து போய்க்கொண்டிருக்கிறது. இதுவும் ‘ஆரண்ய காண்ட’த்துக்கு சற்றும் சளைக்காத படமல்ல என்பது புரிந்து விட, படத்தின் வெளியீடு எதிர்பார்ப்புக்குள்ளாகி விட்டது. அந்த அசகாய டிரைலர் கீழே…