October 6, 2026
  • October 6, 2026
Breaking News

Currently browsing செய்திகள்

கல்யாணத்தில் கிளாமர் காட்டி கலங்கடித்த நடிகை

by by Jan 7, 2019 0

பொதுவாக திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ளும் நடிகைகள் கிளாமராக வருவார்கள். மேடையில் அமர வேண்டும் என்பது தெரிந்திருந்தும் தொடை தெரிய ஸ்கர்ட்டில் வரும் நடிகைகள்தான் ஏராளம். வந்து கால்மேல் கால் போட்டு மானத்தை மறைக்கப் போராடுவார்கள். அது ஒரு டிரெண்ட்.

ஆனால், அவர்களே திருமணம் போன்ற பொது நிகழ்வுகளுக்கு வரும்போது நாகரிகமான உடைகள் அணிந்துதான் வருவார்கள். காரணம் அதில் பொதுவாக குடும்பத்தினர் மற்றும் பிற பெண்கள் வரும்போது அவர்களை தங்கள் உடைகள் உறுத்தக் கூடாதென்பதுதான் காரணம். 

ஆனால், நேற்று…

Read More

இளையராஜாவைப் பெருமைப்படுத்துவதைத் தாண்டிய நோக்கம் – விஷால்

by by Jan 7, 2019 0

ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து தமிழ்ப்படவுலகின் பொக்கிஷமாக இருக்கும் இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் விழா எடுக்கிறது. இவ்விழா வரும் பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் சென்னை, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறவுள்ளது.

‘இளையராஜா 75’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சியின் டிக்கெட் வெளியீட்டு விழா நேற்று மாலை செங்கல்பட்டு அருகேயிருக்கும் ‘மகேந்திரா வோர்ல்டு’ சிட்டியில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்குப் பின்பு நடந்த் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விஷாலும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முக்கிய…

Read More

அஜித் தின் பைக் ஸ்டண்ட் பரபரப்பாக இருக்கும் – விஸ்வாசம் ஸ்பெஷல்

by by Jan 7, 2019 0

“ஸ்கிரிப்ட் எழுதும்போதே, என்ன தேவை என்பதில் சிவா மிகவும் தெளிவாக இருந்ததால் எங்களின் வேலை மேலும் எளிதானது, அவருக்கு நன்றி. இந்த படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளில் நிறைய புதுமை இருக்கும்..!” என்று கண்கள் விரிய மகிழ்ச்சியுடன் பேச ஆரம்பிக்கிறார் ‘விஸ்வாசம்’ படத்தின் சண்டைப் பயிற்சியாளர் திலீப் சுப்பராயன்.

அஜித்குமார் பற்றி அவர் பேசும்போது, “அஜித் சார் மிகவும் கண்ணியமான, எளிமையான…

Read More

தெலுங்கு கிளாமர் குயீன் காவ்யா தாப்பரை தமிழுக்கு கொண்டு வரும் சரண்

by by Jan 6, 2019 0

நீண்ட இடைவெளிக்குப்பின் இயக்குனர் சரண் தற்போது தனது புதிய படமான ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ படப்பிடிப்பைத் துவக்கியிருக்கிறார். இதில் பிக் பாஸ் புகழ் ஆரவ் நாயகனாகிறார். அவருடன் தமிழுக்கு அறிமுகமாகவிருக்கிறார் தெலுங்கு கிளாமர் குயீன் நடிகை காவ்யா தாப்பர்.

இந்த படத்தை பற்றி அவர் கூறும்போது’ “என் முந்தைய திரைப்படங்களில் நான் ஃபேண்டஸியை முயற்சி செய்ததில்லை. இந்த மார்க்கெட் ராஜா MBBS படத்தில் அதை செய்ய இருக்கிறேன், இதில் ஆக்‌ஷன் மற்றும் காமெடியும் இருக்கும்.

கமல் சார் நடித்து…

Read More

இந்திக்குப் போகிறார் நடிகை பாவனா

by by Jan 4, 2019 0

பாவனாதான் கல்யாணமாகிப் போய்விட்டாரே என்று பதறிவிட வேண்டாம். இது பாவனா ராவ். தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்தவர் ‘பை பாஸ் ரோடு’ என்ற படத்தின் மூலம் ஹிந்தியிலும் அறிமுகமாகிறார்.

எந்தத் தமிழ்ப்படங்களில் நடித்தார் என்று கேட்பவர்களுக்காக இந்த தகவல். ‘கொல கொலயா முந்திரிக்கா’, ‘விண்மீன்கள்’, ‘வனயுத்தம்’ போன்ற தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். நிறைய கன்னட படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகையாக இருக்கிறார். 2017 ஆம் ஆண்டில் வெளியான ‘சத்ய ஹரிஷ்சந்திரா ’ என்ற கன்னட…

Read More

லாஜிக் இல்லாமல் கதை சொல்லும் பாணியில் மாணிக்

by by Jan 3, 2019 0

மாகாபா ஆனந்த் ஹீரோவாக நடிக்க நாளை வெளியாகவிருக்கும் ‘மாணிக்’ திரைப்படத்தைப் பற்றி படத்தின் இயக்குனர் மார்ட்டின் பேசியது :-

“நான் ஒரு விஸ்காம் மாணவன். எனக்கு ஒரு தனியார் நியூஸ் சேனலுக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்பது மிகப் பெரிய ஆசை . ஆனால், அங்கோ அவர்கள் எனக்கு சரியான ப்ரொபைல் இல்லை என்று சொல்லி வெளியே அனுப்பினார்கள். சரியான மீடியா ப்ரொபைல் வேண்டும் என்று நான் குறும்படம் ஒன்றை எடுத்தேன்.

அதை நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்கு அனுப்பினேன்….

Read More

அடங்க மறு படத்துக்காக போலீஸ் அடி வாங்கிய சாம் சி.எஸ்

by by Jan 3, 2019 0

ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்த படம் ‘அடங்க மறு’. ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடிப்பில், சாம் சி எஸ் இசையில் அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கியிருந்தார்.
 
கிருஸ்துமஸ் வெளியீடாக டிசம்பர் 21ஆம் தேதி வெளியிட்ட இந்தப் படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விருந்தினர்கள் பேசியதிலிருந்து…
 
வசனகர்த்தா விஜி – 
 
“ஜெயம் ரவியின் அண்ணன் மோகன்ராஜாவிடம் பேசிக் கொண்டிருந்தபோது ரவி இந்த அளவு மகிழ்ச்சியாக இருந்து நானும், அப்பாவும்…

Read More

பிரிட்டிஷ் கோடீஸ்வரரை மணக்கவிருக்கும் எமி ஜாக்ஸன்

by by Jan 2, 2019 0

இனம் இனத்தோடுதான் சேரும் என்பது உண்மைதான். என்னதான் இங்கே தமிழுக்கு வந்து படங்களில் ரஜினி, ஆர்யாவையெல்லாம் ‘லவ்’வினாலும் நிஜத்தில் தன் நாட்டுக்காரரைத்தான் திருமணம் செய்யவிருக்கிறார் பிரிட்டிஷ் நடிகையான எமி ஜாக்ஸன்.

மதராசப் பட்டினம் தொடங்கி 2.ஓ வரை குறிப்பிடத்தகுந்த படங்களாக நடித்து இந்தி வரை போன எமி ஜாக்ஸன் இப்போது ஹாலிவுட் சீரியல் ஒன்றில் ஒப்பந்தமாகி அமெரிக்காவில் தங்கி நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் தனது வலைப்பக்கத்தில் ஒரு பிரிட்டிஷ்காரருடன் நெருக்கமாக இருக்கும் படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்….

Read More

லாஸ் வேகாஸில் பிறந்த நயன்தாராவின் காதல் புத்தாண்டு

by by Jan 1, 2019 0

ஒரு சிலருக்கு இன்று மெரீனா பீச்சில் புத்தாண்டு பிறந்தது. மேலும் சிலருக்கு மால்களில், பார்ட்டிகளில், மருத்துவமனைகளில்… வீட்டில் என்று அவரவர் சூழ்நிலைக்கேற்க புத்தாண்டு பிரந்து கடந்தது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கொஞ்சம் ஸ்பெஷல்தானே..? அதனால், அவருக்கான புத்தாண்டு லாச் வேகாசில் பிறந்திருக்கிறது. வசதி படைத்தவர்கள் தங்கள் புத்தாண்டுகளை இப்படி எந்தெந்த நாடுகளில் வைத்துக் கொண்டாடலாம் என்றுஅ முடிவு செய்து கிளம்புவார்கள்.

அப்படி நயன்தாரா இந்த வருடம் தேர்ந்தெடுத்த நாடுதான் லாஸ் வேகாஸ். உடன் சென்றவர் அவரது மச்சக்கார…

Read More

ஐரா வில் நயன்தாரா பட்ட கஷ்டம் தீர்ந்தது

by by Dec 31, 2018 0

‘ஐரா’வில் நயன்தாரா இரட்டை கதாபாத்திரங்கள் ஏற்கிறார் என்ற செய்தி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திழுத்திருக்கிறது. குறிப்பாக யாரும் கற்பனை செய்து பார்க்காத ஒரு கருப்பு நிற பெண்ணாகவும் அவரே நடித்திருப்பது வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

படக்குழு படத்தை குறித்த நேரத்தில் முடித்திருக்கிறது என்பது இன்னொரு மகிழ்ச்சியான செய்தி.

ஐரா (யானை) பற்றி பொதுவான செய்தி. இது ஒரு சூப்பர்நேச்சுரல் திரில்லர் படம். கலையரசன், யோகிபாபு, ஜே.பி மற்றும் பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். கார்த்திக் ஜோகேஷ்…

Read More