October 27, 2020
  • October 27, 2020
Breaking News
January 4, 2019

இந்திக்குப் போகிறார் நடிகை பாவனா

By 0 363 Views

பாவனாதான் கல்யாணமாகிப் போய்விட்டாரே என்று பதறிவிட வேண்டாம். இது பாவனா ராவ். தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்தவர் ‘பை பாஸ் ரோடு’ என்ற படத்தின் மூலம் ஹிந்தியிலும் அறிமுகமாகிறார்.

எந்தத் தமிழ்ப்படங்களில் நடித்தார் என்று கேட்பவர்களுக்காக இந்த தகவல். ‘கொல கொலயா முந்திரிக்கா’, ‘விண்மீன்கள்’, ‘வனயுத்தம்’ போன்ற தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். நிறைய கன்னட படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகையாக இருக்கிறார். 2017 ஆம் ஆண்டில் வெளியான ‘சத்ய ஹரிஷ்சந்திரா ’ என்ற கன்னட படத்தில் சிறப்பாக நடித்தற்காக விருதும் பெற்றவர்.

இவர் தற்போது சிவராஜ்குமார், சுதீப், எமி ஜாக்சன் நடிப்பில் தயாராகும் ‘த வில்லன்’ என்ற படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார்.தொடர்ந்து தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்து வந்தாலும் இவர் ஹிந்தியில் நடிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டார்.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் நீல் நிதீன் முகேஷ் கதையின் நாயகனாக நடிக்கும் ‘பை பாஸ் ரோட்’ என்ற படத்தில் இவர் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இதன் மூலம் ஹிந்தியிலும் இவர் நாயகியாக அறிமுகமாகிறார்.

By paas

By paas

இது குறித்து பாவனா ராவ் பேசுகையில்,‘ கன்னடப் படங்களில் நடித்து வந்தாலும் ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். தற்போது இயக்குநர் நமன் நிதீஷ் இயக்கத்தில் சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் படத்தில் நாயகியாக நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது.

இதன் கதையை இயக்குநர் என்னிடம் விவரித்த போதே இதில் நடிக்கவேண்டும் என்று உறுதியாக இருந்தேன். ஏனெனில் திரைக்கதையில் எனக்கு வலுவான கேரக்டர். கதைப்படிசொகுசாக வாழ விரும்பும் பெண். அதற்காக சில குறுக்கு வழிகளிலும் சவாலுடன் பயணிக்க விரும்புவள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டது. இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு பொங்கலுக்குப் பிறகு தொடங்குகிறது..!” என்றார்.

இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கும் நீல் நிதீன் முகேஷ், விஜய் நடித்த கத்தி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் என்பதுடன், பாகுபலி படப்புகழ் பிரபாஸ் தற்போது நடித்து வரும் சாஹோ படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.