June 15, 2026
  • June 15, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் 6 பேர் கைது

by on June 16, 2018 0

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி 100 நாள்களாக நடந்த போராட்டத்தின் உச்சமாக கடந்த மாதம் 22-ந்தேதி கலெக்டர் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடந்தது. அதில் வன்முறை வெடித்ததாக போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். தொடர்ந்து அரசு உத்தரவின் பேரில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட நிலையில் வன்முறையில் ஈடுபட்டதாக சில அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கையில் ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பைச் […]

Read More

காவிரி நீரைப் பகிர்வதில் இந்த வருடம் சிக்கல் இருக்காது – குமாரசாமி

by on June 15, 2018 0

மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இன்று மதுரைக்கு வந்த கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறியதிலிருந்து… இப்போது கர்நாடகாவில் பருவமழை பெய்து வருவதால் கர்நாடகா மற்றும் தமிழகம் இடையே காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வதில் எந்த பிரச்சனையும் இருக்காது பருவ மழை தொடர்ந்தால் நடுவர் மன்ற உத்தரவின்படி மாதா மாதம் திறக்க வேண்டிய தண்ணீரைத் திறந்து விடுவதில் சிக்கல் இருக்காது. கர்நாடகாவில் மழை பெய்து வருவதை அடுத்து, கபினி அணையில் இருந்து தண்ணீர் திறந்து […]

Read More

கோலிசோடா2 விமர்சனம்

by on June 15, 2018 0

கோலிசோடா முதல் பாகத்தில் நடித்த வாண்டுகள்தான் இந்த பாகத்திலும் நடித்திருக்கிறார்களா, அல்லது அந்தக் கதை நாயகர்கள் வளர்ந்தவுடன் நடக்கும் கதையா என்று ஏகப்பட்ட கேள்விகள் படம் பார்க்கப் போகும் முன்னே எழுவது தவிர்க்க இயலாதது. இவை இரண்டும் இல்லாமல்… ஆனால், முந்தைய கதைக் கருவின் தொடர்ச்சி என்று வேண்டுமானால் இதைச் சொல்லலாம். வாழ்வின் அடையாளத்தைத் தேட முற்படும் இளைஞர்களுக்கு எது தடையாக நிற்கிறது. அதை எப்படி அவர்கள் எதிர்கொண்டார்கள் என்பதுதான் கதைக்களம். முன்னாள் காவலரான சமுத்திரக்கனி ஒரு […]

Read More

ரம்ஜானுக்காக நாளை அறிவிக்கப்பட்ட பள்ளி விடுமுறை ரத்து

by on June 14, 2018 0

நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று பிறை தெரியாததால் நாளை மறுநாள் (சனிக்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்துள்ளதைத் தொடர்ந்து நாளை அறிவிக்கப்பட்டிருந்த பள்ளி விடுமுறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நாளை பள்ளிகள் வழக்கம் போல இயங்கும். இந்நிலையில் மூன்று நாள் விடுமுறையில் சிலர் வெளியூர்களுக்குச் செல்ல ஆயத்தமாகி விட, சென்னையைப் பொறுத்தமட்டில் வெளியூர்ப் செல்லும் பயணிகளால் […]

Read More

ஆப்கானிஸ்தான் அரங்கேறும் டெஸ்ட் போட்டியில் இந்தியா அதிரடி தொடக்கம்

by on June 14, 2018 0

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாட சமீபத்தில்தான் ஐ.சி.சி. அங்கீகாரம் அளித்தது. இதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் டெஸ்டில் இந்தியாவுடன் இன்று (14-06-2018) விளையாடத் தொடங்கி இருக்கிறது. இதையொட்டி ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களுக்கு இந்திய பிரதமர் மோடி ட்விட்டரில் காலையில் வாழ்த்து தெரிவித்தார். அதில், “ஆப்கானிஸ்தான் தனது வரலாற்று சிறப்பு மிக்க முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுடன் விளையாடத் தேர்வு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த […]

Read More

ஒரு கனவின் குறிப்புகள் – ஏ.ஆர் ரஹ்மானின் வாழ்க்கை புத்தகம் வருகிறது

by on June 13, 2018 0

இரண்டு ஆஸ்கர் விருது பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இந்திய இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் வாழ்க்கைப் பாதையை விளக்கும் புத்தகம் ஒன்று வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருக்கிறது. பென்குயின் பதிப்பகம் வெளியிடும் இந்தப் புத்தகத்துக்கு ‘நோட்ஸ் ஆப் எ டிரீம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதனை ‘கிருஷ்ணா திரிலோக்’ என்பவர் ஏ.ஆர்.ரஹ்மானின் அனுமதி பெற்று வெளியிட்டிருக்கிறார். ரஹ்மானுக்கு ஆஸ்கர் கிடைத்த ‘ஸ்லம்டாக் மில்லினியர்’ படத்தை இயக்கிய ஹாலிவுட் தயாரிப்பாளர் ‘டேனி பாயல்’ எழுதியுள்ள அணிந்துரையுடன் இந்தப் புத்தகத்தில் ரஹ்மான் […]

Read More

பிரதமர் மோடியின் ஃபிட்னஸ் சவால் வீடியோ ஏற்படுத்திய பரபரப்பு

by on June 13, 2018 0

இன்றைய ‘ஹாட் டாப்பிக்’கே பிரதமர் மோடி வெளியிட்ட ‘ஃபிட்னஸ் சவால்’ வீடியோதான். அனைத்து சமூக வலைதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்திவரும் இதன் பின்னணி தெரிந்திருக்கலாம். “அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். நாம் உடல் உறுதியுடன் இருந்தால்தான் நாடும் உறுதியுடன் இருக்கும்…” என்று வலியுறுத்தி மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை கடந்த மாதம் வெளியிட்டார். ட்விட்டரில் அதை வெளியிட்டது மட்டுமல்லாமல் அதில் விராத் கோலி, ஹ்ரித்திக் ரோஷன், சாய்னா நேவால் ஆகியோரை […]

Read More