June 28, 2026
  • June 28, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

யோகிபாபுவுக்கு இருக்கும் குணம் உச்ச ஸ்டார்களுக்கு ஏன் இல்லை

by on March 22, 2019 0

இன்று யோகிபாபு நடித்த ‘பட்டிபுலம்’ படம் வெளியானது. அதைக் கொண்டாட யோகிபாபுவின் ரசிகர்கள் இன்று படம் வெளியாகும் ரோகிணி திரையரங்கில் அவரது கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்ய நேரம் குறித்தார்கள். ஆனால். இதை அறிந்த யோகிபாபு தன் ரசிகர்களிடம் ‘உணவுப் பொருளை வீணாக்குவது கூடாது. அதனால் பாலாபிஷேகம் வேண்டாம்..!’ என்று அன்புக் கட்டளை இட்டார். அதைத் தொடர்ந்து ரசிகர்களும் அந்த பாலாபிஷேகம் திட்டத்தைத் தவிர்த்தனர். இதைக் கண்ட பொதுவான ரசிகர்களின் கேள்வி இதுதான். “யோகிபாபுவின் இந்த நல்லெண்ணம் […]

Read More

நெடுநல்வாடை படத்தைவிட பெரிய ஊதியம் உண்டா – வைரமுத்து

by on March 21, 2019 0

சென்றவாரம் செல்வகண்ணன் இயக்கத்தில் வெளியான ‘நெடுநல்வாடை’ படத்தின் வெற்றிக்கு ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நன்றி அறிவிக்கும் விழாவை நேற்று நெடுநல்வாடை படக்குழு நடத்தியது. விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குநர் செல்வகண்ணன், படத்தின் கதாநாயகன் இளங்கோ, நாயகி அஞ்சலிநாயர், ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி,படத்தொகுப்பாளர் மூ.காசிவிஸ்வநாதன், இசை அமைப்பாளர் ஜோஸ் ப்ராங்க்ளின், படத்தை தமிழகமெங்கும் வெளியீட்ட எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், ஜேம்ஸ் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இயக்குநர் செல்வகண்ணன் பேசும்போது, “என் வாழ்வின் லட்சியமே கவிஞர் வைரமுத்து அவர்களோடு ஒரு போட்டோ எடுக்கவேண்டும் என்பதுதான். ஒருநாள் அது சாத்தியமாகியது. பின் […]

Read More

ஐரா ஸ்கூப் இரண்டு நயன்தாராவுக்கும் தொடர்பில்லை – கேஎம் சர்ஜுன்

by on March 21, 2019 0

‘கேஜேஆர்’ ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே. ராஜேஷ் தயாரிக்க, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம் ‘ஐரா’.   கலையரசன், யோகிபாபு ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சர்ஜூன் கே.எம் இயக்கியிருக்கிறார். கேஎஸ் சுந்தரமூர்த்தி இசையமைத்திருக்கும் இந்த படத்தை ‘ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ்’ ரவீந்திரன் வெளியிடுகிறார். மார்ச் 28ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் பேசியதிலிருந்து…   நடிகர் கலையரசன் –   “இது மிகவும் மகிழ்ச்சியான […]

Read More

சிந்துபாத் செட்டில் மகனுடன் மோதிய விஜய்சேதுபதி வீடியோ

by on March 20, 2019 0

‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களை இயக்கிய எஸ்.யு.அருண்குமாரின் இயக்கத்தில் விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக நடிக்கும் படம் சிந்துபாத். அஞ்சலி இந்தப்படத்தில் விஜய் சேதுபதியின் ஜோடியாகிறார். இந்தப்படத்தின் ஹைலைட் இதில் விஜய் சேதுபதியுடன் அவர் மகனான சூர்யா விஜய்சேதுபதியும் நடிப்பதுதான். (சூர்யா ஏற்கனவே நானும் ரௌடிதான் படத்தில் நடித்திருந்தார்…) படத்தின் செட்டில் விஜய் சேதுபதி விளையாட்டாக தன் மகனுடன் மோதிக்கொள்ளும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியானது. வைரலான அந்த வீடியோ கீழே… 

Read More

உலகமயமாக்கலை உள்ளடக்கி ஒரு தமிழ்ப்படம்

by on March 19, 2019 0

 உலகமயமாக்கல் பற்றி சிந்திக்க வைக்கும் தமிழ்ப் படமாக ‘குச்சி ஐஸ் ‘ என்கிற  படம் உருவாகிறது.   பாரதிராஜாவின் உதவி இயக்குநர் ஜெயப்பிரகாஷ் .வி இயக்குகிறார். இவர் ஏற்கெனவே ‘சாதிசனம்’ , ‘காதல் fm’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கும் மூன்றாவது படம் இது. திருமலை சினி டிரஸ்ஸஸ் நிறுவனம் சார்பில் ஜெயபாலன் தயாரிக்கிறார்.    ‘நாடோடிகள்’ மற்றும் விஜய் டிவியின்  பிக்பாஸ் புகழ் பரணி, புதுமுகம் ரத்திகா,மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இப்படத்தில் நடிக்க உள்ளனர். […]

Read More

நெடுநல்வாடை திரைப்பட விமர்சனம்

by on March 19, 2019 0

இன்றைய நகரத்துப் பின்னணி கொண்ட வாழ்க்கையில் தாத்தா பாட்டி உறவுகளெல்லாம் அர்த்தமற்றுப் போய்விட… ஏன் அறிமுகமில்லாமலேயே போய்விட, தமிழ்க்குடியின் அத்தியாவசிய உறவாக அமைந்த மூன்றாம் மூத்த உறவின் பெருமையைச் சொல்லியிருக்கிறது இந்தப்படம். கூடவே எந்த உறவுகளும், உறவு மறுப்புகளும் குடும்ப உறுப்பினர்களின் நன்மைக்காக மட்டுமே என்ற கருத்தையும் ஆழமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் செல்வக்கண்ணன். கிராமத்து வாழ்க்கையில் பெரும்பாலும் பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பு பாட்டி தாத்தாமார்களுக்கே இருக்கிறது. அப்படி பாட்டிக்கும், பேத்திக்குமான ஒரு உறவை கடந்த தலைமுறையில் ‘பூவே […]

Read More

கிரிஷ்ணம் திரைப்பட விமர்சனம்

by on March 18, 2019 0

பக்திப்படங்கள் வருவது அருகிவிட்ட இக்காலத்தில் மீண்டும் கடவுள் பக்தி கொண்டவர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட நவீனப் படம். வழக்கமாக பக்திப்படம் என்றாலே அது கற்பனைக் கதைகளை அடியொற்றிதான் இருக்கும். யாரோ சொன்னது, யாருக்கோ நடந்தது என்கிற அளவிலேயே அவை தயாரிக்கப்படும். ஆனால், தன் வாழ்வில் நடந்த… இன்னும் சொல்லப்போனால் தன் மகனுக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தை அப்படியே படமாகத் தயாரித்திருக்கிறார் பி.என்.பலராம். இதுவே இந்தப்படத்தின் மீதான நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம். அத்துடன் அப்படித் தயாரான படத்தில் தன் மகனையே ஹீரோவாக்கியிருப்பதும் உலக […]

Read More